Monday, March 26, 2012

இரட்டை தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்

இரட்டை தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் - ந. இரவீந்திரன் 

                                                                                         
                                                                  பார்த்துப் பழகிய வடிவத்தில் மனமீடுபாடு கொள்ளூம் நிலை காரணமாக ,உண்மைத்தோற்றம் மறைந்து வேறுபட்ட மயங்கிய காட்சியில் தவறான புரிதல்களுக்கு ஆட்படுவது எப்போதும் நிகழக்கூடியதுதான்.நீண்டகாலமாக எம்மிடமுள்ள தோற்றமயக்கமாக இருப்பது சமூக மாற்றம்பற்றிய புரிதலும்,அத்தவறான புரிதலுடன் மார்க்சியத்தைப் பிரயோகிக்க முயன்று தோல்விகளைச் சந்தித்துப் பாரதூரமான பின்னடைவுகளைக் கண்டடைந்துள்ளமையுமாகும்.எமது சமூகத்தில் மார்க்சியத்தை திரிபுகளுக்குஆட்படுத்திக்கொண்டு இயங்குவதே முனேறவியலாத முட்டுக்கட்டைகளுக்கு காரணம் என்றமயக்கங்களும் உண்டு.
திரிபுகளின்றி அப்படியே விசுவாசமாக மிகுந்த அர்ப்பணிப்புகளுடன் இயங்கமுயன்றவர்களும் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாயினர் என்பதே உண்மை.மார்க்சியம் ஐரோப்பியச் சமூகத்தைப் பகுத்தாராய்ந்த அதே முறையில் நமது சாதியச்சமூகத்தைக் காண இயலாது என்ற புரிதல் நீண்ட காலமாய் எமக்கு இருந்ததில்லை.மார்க்சியம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திச் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு வழிகாட்ட இயலும்;அதேவேளை மார்க்சியப் பிரயோகிப்பில் வேறுபட்ட வடிவம் இங்கு அவசியமாயுள்ளது.எமது சமூக உருவாக்கம் எத்தகைய பிரத்தியேகத் தன்மையுடையது,அதற்கு ஏற்புடையதாக மார்க்சியத்தை எவ்வாறு பிரயோகிப்பது,இங்கு சமூக மாற்றங்கள் ஏற்கனவே எவ்வாறு நிகழ்ந்தேறின என்பன குறித்த புரிதல் அவசியம்; அவ்வாறன்றி, வேறுபட்ட வரலாற்று செல்னெறியுடையதான ஐரோப்பியப் புரட்சிகளை மாதிரிகளாகக்கொள்ளமுயன்றதவறே பாரதூரமான பின்னடைவுகளுக்கு எம்மை ஆட்படுத்தின.

நமது சமூகக் கட்டமைப்பின் வேறுபட்ட பிரத்தியேகத் தன்மை காரனமாக, முதலாளித்துவம் முன்னதாகத் தோன்றிய ஐரோப்பியாவில் எழுச்சியுறுத்திய தேசிய வடிவம் போல எமது தேசியக் கட்டமைப்பு இங்கு உருவாகவில்லை. ஐரோப்பாவைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் குடியேற்ற நாடுகளாக உருவாகிய செயற்கையான தேசியத் தன்மை இலங்கை, இந்தியத் தேசியங்களுக்கு இருந்தது என்ற அளவில் மட்டுமே வேறுபாட்டை புரிந்துகொண்டோம். இவ்வகையில் புறனிலைக் காரணி மட்டுமன்றி அகனிலை ரீதியாக அடிப்படையான வேறுபாடு உண்டு என்பது பற்றிய தேடல் இன்று வலுவடைந்து வருகிறது.

வர்க்கப் பிளவினாலன்றி, மருதத் திணை மேலாதிக்கம் சமூக ஒடுக்குமுறையை ஏனைய திணைச் சமூகங்கள் மீது ஏற்படுத்திக்கொண்டு சாதி வாழ்முறையை ஏற்படுத்திக்கொண்டதன் ஊடாக எமக்கான ஏற்றத்தாழ்வுச் சமூக முறை தோற்றம்பெற்றது. இன மரபுக் குழுக்கள் தகர்க்கப்பட்டு உருவான ஆண்டான்- அடிமைச் சமூகம் கிரேக்க,ரோம் புரட்சிகள் வாயிலாக தகர்க்கப்பட்டு நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு ஐரோப்பாவில் கட்டமைக்கப்பட்டது. அதனைத் தகர்த்து நவீன ஐரோப்பா முதலாளித்துவ அமைப்புக்கான தேசங்களைக் கட்டமைத்தது. இன்றைய இந்த அமைப்பில் நிலப்பிரபுத்துவ வர்க்கம்-பண்ணை அடிமை வர்க்கம் என்பன முற்றாகவே அற்றுப்போகும் வகையில் துடைத்தழிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நிலப்பிரபுத்துவம் ஆண்டான் - அடிமை வர்க்கங்களை இல்லாது அழித்துவிட்டதனால், அவையும் இன்றில்லை.இன்றைய ஐரோப்பிய சமூகம் முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கம் எனும் புதிய சக்திகளையே கொண்டுள்ளது.

எமது சமூகத்தில் அவ்வாறன்றி ஏற்றத்தாழ்வு தோற்றம் பெற்ற காலத்திலிருந்த ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள்,இடைனிலைச் சாதிகள் என்பன தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இங்கும் உற்பத்திமுறை மாற்றங்கள் ஏற்ப்பட்ட போதிலும் உற்பத்தி சாதனங்கள் எந்தச் சாதிகள் வசப்படுகின்றன என்ற வகையில் ஆதிக்க சாதிகளிடையே உடமை மாற்றமும் அதிகார மாற்றமும் ஏற்படுகிறதே அன்றி, சமூக சக்திகள் என்றவகையில் பழையன முற்றாக அழிந்து புதியன உருவாகவில்லை; புதியன புகும் போது பழையன இன்னுமொரு வடிவில் தொடர்வதையே காண்கிறோம்.

இவ்வகையில் நீடித்துதொடர்ந்து இருக்கும் ஆதிக்கசாதி - ஒடுக்கப்பட்ட சாதி என்ற 'நிரந்தரப்பட்ட' [ஏற்றத்தாழ்வு அமைப்பு உள்ளவரை என்ற எல்லைப்பாட்டுக்குரிய] பேதம் காரனமாக எமது தேசியம் பிளவுபட்டுப்போனது. ஐரப்பாவில் ஏனைய வர்க்கங்களை ஐக்கியப்படுத்தியவாறு முதலாளித்துவம் தேசியத்தைக் கட்டமைக்க முடிந்தது போல இங்கு இயலவில்லை;ஆதிக்கசாதித் தேசியத்துக்கும் ஒடுக்கப்பட்டோர் [தலித்] தேசியத்துக்கும் இடையே அடிப்படை நலங்களில் வேறுபாடு வலுவானதாய் உள்ள காரனத்தால் இரட்டைத் தேசியம் ஒவ்வொரு தேசிய இனங்களினுள்ளும் செயற்படக் காண்கிறோம். 

ஏற்றத்தாழ்வு அமைப்பு உருவாக்கத்துக்கு முந்திய இன மரபுக்குழுக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் தொடர்ந்து நீடிப்பன.இரட்டைத் தேசியத்துக்குரிய இரு சக்திகளிடமும் இரண்டாயிரம் வருடங்களுக்கு அதிகமான வேறுபட்ட பண்பாடுகள் உண்டு. சுரண்டலுக்கான மாற்றங்கள் ஏற்பட்டு அமைப்பு வேறுபாடுகள் அவ்வப்போது சாத்தியமாகி வந்த எல்லாக்கட்டங்களிலும் ஆதிக்கசாதிகளிடையே பிரதான ஆளும் சாதி எது என்பதில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் , ஒடுக்கப்பட்ட சாதிகள் தமக்கான நீடித்த பண்பாட்டு தொடர்ச்சியுடன் தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாயே இருந்து வந்துள்ளனர். நவீன சமூகத்தில் இரு தேசங்களை அடையாளப்படுத்துவதில் வேறுபடுத்த்ம் பிரதான அம்சமாக பண்பாடு திகழ்வதை அறிவோம். ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட சாதி என்ற பேதப்பட்ட இரு சக்திகளது பண்பாட்டு வேறுபாடு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இரு தரப்பையும் இரு தேசங்கள் போன்றே கட்டமைத்து வந்திருக்கிறது.

அந்தவகையில், இரட்டைத் தேசியப் பிளவுடன் உள்ள எமது சமூகத்தைக் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனனாயகப் பண்புடைய ஒரு தேசிய இனம் என்று மாற்றம்கொள்வதற்கு - நவீன சமூக உருவாக்கத்துக்கு - பண்பாட்டுப் புரட்சி இங்கே அத்தியாவசியமானதாயாகியுள்ளது. தவிர, முந்திய ஃஷமூக அமைப்பு மாற்றங்கள் பண்பாட்டுப் புறட்சிவாயிலாகவே இங்கு நடந்தேறியுள்ளன. வர்க்கப் பிளவடைந்த ஐரோப்பிய சமூகத்தில் மற்றங்கள் அரசியல் புரட்சிகள் ஊடாக நடந்தேறின என்றால், சமூக ஒடுக்குமுறையுடைய எமக்கான மாற்றம் பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே நிகழ்ந்தேறின.

ஏற்கனவே ஒரு தசாப்தத்துக்கு மேலாக இதுகுறித்து எழுதிவந்த போதிலும் , இன்று அதற்கான தேடல் வலுத்துள்ள நிலைகாரனமாகத் தொகுப்புரை போன்று 'இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்டசியும்'பற்றி இங்கு எழுத எண்ணியுள்ளேன். முன்னதாக இதன் தவையை அவசியப்படுத்திய 2012 மார்ச் 22 ஜெனீவா தீர்மானம் ஏற்படுத்திய சூழலைப் பார்த்து, இரண்டாம் பகுதியில் இரட்டைத் தேசியம் பற்றிய கோட்பாட்டு புரிதல் எமது வரலாறு எழுதுமுறையில் ஏற்படுத்த வலியுறுத்தும் அம்சம் குறித்து பார்க்க இயலும். மூன்றாம் பகுதி, சமூக மாற்ற வடிவம் தனித்துவமிக்கதாய்ப் பன்பாட்டுப் புரட்சி வகைப்பட்டதாய் இருக்க, மற்றவர் ஓடிய வழி வேறு தடம் என அறியாமல் ஓடுதல் விரும்பிய திசைக்கு இட்டுச் செல்லாது என்பதைக் காட்டும். 

                                           

              1


மார்ச் 22 ஜெனீவா தீர்மானம் ஈழத்தமிழர்துயர்கள் முடிவுக்கு வரப்போவதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகப் பலரும் நம்புவதாகத் தெரிகிறது. இலங்கை அரசின் முயற்சிகளனைத்தும் தோற்கடிக்கப்பட்டு, யுத்த இறுதித் தருணத்தின் மனித உரிமை மீறல்கள் உலகின் முன் அம்பலமாகியுள்ளதால் சிங்களப் பேரினவாதிகள் பணிந்துபோக வேண்டிய நிர்ப்பந்தம் ஏர்ப்படுத்தப் பட்டுவிட்டது; தீர்வுகளை இலங்கை அரசு நிரைவேற்றும்படியான நெருக்கடி இதன்வாயிலாக உருவாகிவிட்டது என்றே கரிதப்படுகிறது. உண்மையில் வெற்றிபெற்றது யார்? தோற்றுப்போவது எது?

வெற்றிபெற்ற தரப்பில் ஈழத் தமிழத் தேசியத்தையோ, அது காணவிழையும் தீர்வுத் திட்டங்கள் எதனையுமோ காணவியலவில்லை. இலங்கை தோற்றுப்போன ஒருதோற்றம், அது பலமான அடிவாங்கியிருப்பதால் வெளிப்பட்டுள்ளதாயினும், நிச்சயமாக சிங்களப் பேரினவாதம் தோற்றுபோகவில்லை; அது இன்னும் வலுமையுடன் சிங்கள மக்களைத்தன்வசம் அரவனைக்கும் பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. உள்ளூர்மட்டத்தில் ஆதிக்க சக்தி இவ்வகையில் ஆதாயம் பெற, உலகளவில் அமெரிக்க மேலாதிக்கவாதிகள் இதன் மூலம் பெற்ற வெற்றி ஈழத் தமிழ்த் தேசியம் இதன்வாயிலாக ஆதாயத்துக்கு உரிமைகோரும் வாயப்பைத் தட்டிப்பறித்துள்ளது.

சிங்களப் பேரினவாத இராணுவம் புரிந்த கோரக் கொலைகள் இதன்வாயிலாக உலகுக்கு வெள்ளிச்சமாகி, தமிழ்த்தேசியம் ஒடுக்கப்பட்டமை அம்பலமாகியிருக்கிறதுதானே எனக்கூறலாம். இராணுவம் எதுவாயினும், அதைக் கையாளும் ஆதிக்கவாதிகள் எவ்வளவுதான் புனிதம் கற்பித்து துப்பாக்கி ஏந்திய கை தவிர்ந்து மற்றக்கையில் தம்மபிடகம், பைபிள், பகவத்கீதை, குர்ரான் ஆகியவற்றில் ஏதாயினும் ஒன்றுடன் சென்றிருப்பர் என உலக மக்களெவரும் நம்பிவிடுவதில்லை. யுத்தம் முடிவுக்கு வருகையில் கொலைகளுக்கு இருக்கும் பங்கு குறித்து இன்றைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் நிகழும் சகாப்ததில் அனைத்து இனத்தவர்களுக்கும் ஏதோவொருவகையிலான அனுபவம் உண்டு.

என்ன, தமது இனம் அந்த யுத்தத்தை தொடுத்தது எனும்போது மட்டும் பழிபாவம் அனைத்தும் மறு தரப்புக்கே - தர்ம யுத்தத்தைப் புனிதமான பூரண நியாயங்களுடன் தமது தரப்பு முன்னெடுத்தது என ஒவ்வொரு இனத்தவர்களும் சொல்வர்; அவ்வளவே! சிங்கள மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு புனித யாத்திரை போகும்போது, அங்கு சாந்த சொரூபியாக முளைதுள்ள புத்தரே வெற்றியை ஈட்டித்தந்ததாய் நம்ப விரும்புவரேயன்றிதமது புதல்வர்களின் துப்பாக்கி கொடூரம் எதையும் புரிந்ததாய்க் கருத ஒருப்படமாட்டார்கள். துப்பாக்கி ஏந்திய தேச வீரர்களின் சிலைமுன் கண்ணீருகுக்கும்போது கோரக் கொலைகள் புரிந்த புலிகளை வீழ்த்திய சாகசங்கள் தெரியும்; அந்தக் கொடியவர்களின் துப்பாக்கிகள் பறிக்கப்பட்டது பளிச்சிடும்.   

எமக்கு மட்டும் வேறு மாதிரியா? புலியால் மேற்கொள்ளப்பட்ட பாசிசக் கொலைகள்பற்றி பேச்சுவந்தால் காந்தியின் மூன்று குரங்குகளின்சிலைபோல நாமும் உறைனிலைக்கு ஆளவோம். பெரும்பாலான தமிழ்த்தேசியர்கள் புனிதமான விடுதலை யுத்தத்தையே புலிகள்முன்னெடுத்ததாயும் ,அதன் மேலாதிக்கப் பாசிசப் பண்பு என்ற பேச்செல்லாம் துரோகிகளும் எதிரிகளும் இட்டுக்கட்டிய பொய்களே என்றுந்தான் நம்ப விரும்புகிறார்கள்.சிங்கள - தமிழ் மக்கள் தத்தம் தரப்புக் குறித்து இவ்வாறு நம்ப 'விரும்புகிறார்கள்' எனஸ் சொல்லக் காரனம், அடி மனதில் தமது ஆட்களும் 'தவிர்க்க முடியாத சில கொடூரங்களை' செய்திருக்க இடமுண்டு என்ற புரிதல் உடையவர்கள் என்பதால் ஆகும்.

ஆக,யுத்தக் கொடூரங்கள் அம்பலமாக்கப்பட்டுள்ளது என்பதில் பெரிதாக வெற்றி எதுவுமில்லை. இந்த அம்பலப்படுத்தும் புனித காரியத்தை செய்த அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பண்ணிய கொலைகள் பற்றி உலக மக்கள் அறிய இயலாதவர்களா? எமக்கான தீர்மானம் எனப்பசப்பிய அதே நாளில் பலஸ்தீனர்களுக்கு தீங்கிழைக்கும் இஸ்ரவேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தனியொரு நாடாக எதிர்த்து கொலை வெறிபிடித்த இஸ்ரவேலை காவாந்து பண்ண அமெரிக்கா முயலவில்லையா? இப்போது எமது விவகாரத்தில் தலை வைப்பதும் எமக்கு விடுதலை பெற்றுத்தருவதற்கா? இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்துவிட்ட இந்திய - சீன செல்வாக்கை மட்டுப்படுத்தித் தனது மேலாதிக்கத்தை மீளவலியுறுத்த அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த ஜெனீவாத் தீர்மானம்; அமெரிக்காவின் இந்தக் கபட நாடகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டவர்களும், பக்கவிளைவாகத் தமிழருக்கு சில தீர்வுச்சாத்தியங்கள் இதனால் எட்டப்படலாம் தானே என்று கூறுவர்.

அப்படி எதுவும் நடந்துவிடப் போவதில்லை. மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்ற இலங்கை அர்சுக்கு இது பெரும் அடியாக இருந்த போதிலும் சிங்களப் பேரினவாதம் இதன் வாயிலாக வெற்றி பெற்றிருக்கிறது என மேலே குறிப்பிடப்பட்டிருந்தது. மனித உரிமை மீறலுடனான யுத்தக்கொடூரங்கள் நடந்தமையை இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது, அது குறித்த நியாயமான விசாரணையும் தீர்ப்பும் அவசியம் என்பதோடு அந்த ஆணைக்குழு பரிந்துரைத்த தீர்வுத்திட்டங்களைக் காலதாமதம் இன்றி உடன் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட்ட அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் தோற்றுப்போய் இலங்கைக்கு ஆதரவு கூடுதலாகியிருந்தால் இலங்கை அரசுக்கும் அது பிரதினிதித்துவப் படுத்தும் சிங்களப் பேரினவாதத்துக்கும் பாரிய வெற்றியாக இருந்திருக்கும். இப்போதுங்கூட ஒரு வாக்கினாலேயே தீர்மானம் வெற்றிபெற்றது; அதுவும் அமெரிக்க மேலாதிக்கத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்துபோன நாடுகளின் கோழைத்தனத்தின் பேறு எனக்கூறி தனது வீராவேசத்தையே அரசு தரப்பு மெச்சிக்கொண்டிருக்கிறது [24 நாடுகள் ஆதரித்தும் 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தபோது 8 நாடுகள் நடுனிலை வகித்தன. எவருக்கும் வாக்களிக்காத எட்டையும் தனக்கானது என அடாத்துப்பண்ணும் இந்தப் பேரினவாதிகள் மட்டும் மேலாதிக்க எண்ணம் கொண்டவர்கள் இல்லை, அமெரிக்க மேலாதிக்கம் மட்டும்தான் அடாத்துப் பண்ணி தனக்கு சார்பாக வாக்களிக்கப்பண்ணியுள்ளது!]

மேலாதிக்கம்புரியும் வாய்ப்புள்ளவர் அதனை எவ்வகையிலும் செய்ய ஏற்றதாக அமைந்த சகாப்தம் இது. ஏகாதிபத்தியமாய் முதலாளித்துவம் வடிவம் கொண்டபோது பிற தேசங்களை ஆக்கிரமித்து அவர்களது வளங்களையும் உழைப்பையும் சூறையாடினர். இரு உலக யுத்தங்களின் பின் குடியேற்ற நாடுகளில் பெரும்பாலானவை விடுதலைபெற்றன;அதுவரை முதல்னிலை வகித்த பிரித்தானியாவை முந்திக்கொண்டு சுதந்திரத்தை மதிப்பதாக கூறியவாறு தலைமை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா மேலாதிக்கவாத அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் வாயிலாக உலகைச் சூறையாடுகிறது. சுதந்திரம் பெற்ற நாடுகள் ஒவ்வொன்றினுள்ளும் பெரும்பான்மையினங்கள் சிறு தேசிய இனங்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவதாகவே இன்றைய சமூக பொருளாதார முறை அமைந்துள்ளது. அமெரிக்க மேலாதிக்கம் பாரதூரமான தவறையுடையது என்பதற்காக ஏனைய தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கும் சிங்களப் பேரினவாதம் புரிந்த ஆக்கிரமிப்புகளும் முறைகேடுகளும் சரியென்று ஆகிவிடாது (மறுதலையாக, ஜெனீவாத் தீர்மானத்தின் வாயிலாக சிங்களப் பேரினவாதிகளது மனித உரிமை மீறல்களையும் ஆக்கிரமிப்பையும் ருசுப்படுத்திவிட்டதால் அமெரிக்க மேலாதிக்கவாதத்தின் இரத்தக் கறைகள் கழுவப்பட்டுவிடப்போவதில்லை).

பிரச்சினை, மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுவதிலிருந்து தேசிய இனங்கள் விடுதலைபெற்று சுய நிர்ணயத்தை வென்றெடுப்பதும் தொடர்ந்து சமத்துவம்மிக்க எதிர்காலம் ஒன்றை கட்டியெழுப்புவதும் எவ்வகையில் சாத்தியப்படுத்தப்பட இயலும் என்பதுதான். இலங்கை நிலவரத்தில் மேற்படி ஜெனீவா தீர்மானம் இந்த நோக்கத்துக்கு பாதக நிலையையே ஏற்படுத்தியுள்ளது. புத்த தம்மத்துடன் புனித யுத்தம் புரிந்த தம்மை உலக மேலாதிக்கத்தை வைத்து அமெரிக்கா அவமானப்படுத்த முயல்கிறயது இரு வாரங்களுக்கு முன்னே ஆரவாரமாக முழக்கமிட்ட படியே தான் உணவுப்பொருள் - எரிபொருள் - போக்குவரத்துக் கட்டண விலையேற்றங்களை சிங்களப் பேரினவாத அரசு நிறைவேற்றியது. 'மண்ணெண்ணையும் பாணும் அல்ல, அமெரிக்கா பறிக்க நினைக்கும் தன்மானத்தை மீட்பதே உடனடிப் பணி' எனச் சிங்கள மக்களை அணிதிரட்டி வீதிகள் தோறும் அரச தரப்பால் ஆர்ப்பாட்டம் நடாத்த முடிந்திருக்கிறது. அமெரிக்கபிரேரனைக்கு எதிர்ப்பு வலுத்து பேரினவாதத்தின் 'தன்மானம்' காக்கப்பட்டிருந்தால் கடிக்கும் வயிறும், மண்ணெண்ணையின்றி வாட்டும் இருளும் வீதியில் இறங்க சிங்கள மக்களைத் தூண்டியிருக்கலாம். இல்லாமல், தம்மை ஏமாற்றி சுகபோகங்களைப் பெருக்கும் சிங்களப் பேரினவாதக் கேடிகளின்பின்னால் உழைக்கும் சிங்கள மக்கள் தாம் ஒட்டாண்டிகளாக்கப் படுவதனைக் கண்டுகொள்ளாமலே போகவேண்டி வைத்துவிட்டதுஜெனீவாத் தீர்மானம்(இந்த வேடிக்கை வினோதங்களின் போது ஒரு அமைச்சர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார், சிறிய குடும்பமொன்றுக்கு மாதம் 7,500 ரூபாய் இலங்கையில் தாராளமாய்ப் போதுமாம்! தனது ஒரு மனி நேரச் செலவைச் சொல்லியிருப்பாரோ?)

தமது வாழ்வாதாரங்களைப் பறித்து ஒட்டாண்டிகளாக்கிக் கொண்டு, பாரிய சம்பள ஏற்றத்தாழ்வுகளுடன் தமது வளத்தைப் பெருக்கும் பேரினவாதக் கபடர்களின் பின்னே எதற்கு இந்தச் சிங்கள மக்கள் போக வேண்டும்? இங்கே தான் நாடு கடந்த ஈழ வாதிகள் பேரினவாதிகளின் கூட்டாளிகளாகிறார்கள். முப்பது வருட கால இரத்தம் சிந்தும் அரசியலாக இருந்த யுத்தத்தின் போது நேரடியாக பல மரணங்களையும் வாழ்வாதார இழப்புகளையும் அவர்கள் கண்டனர். இன்று இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் முன்னெடுப்பு வாயிலாக தமிழக ஈழ ஆத்ரவாளை மற்றும் நாடுகடந்த ஈழவாதிகள் அமெரிக்க அமெரிக்க மேலாதிக்கத் தலமையிலான மேலைத் தேசங்களுக்கு நாட்டை காட்டிக்கொடுப்பதாக காண்கிறார்கள். முப்பது வருட யுத்தம் உண்மையில் இந்தியாவினால் நாடாத்தி மிடிக்கப்பட்ட ஒன்றே; இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தை பின்னின்று இயக்கியது இந்தியா என்பதில் எவ்வளவு உண்மை உண்டோ, அதேயளவுக்கு தமிழ்த் தேசியத்தின் பேரில் பிரிவினைக் கோரிக்கையை வென்றெடுக்க செயற்பட்டபோது இந்த்ய மேலாதிக்க சக்திகளது கதை, வசனம், இயக்கத்துக்கு ஆட்பட்டு இயங்கி 'சிங்கள அரசின்' சுயாதிபத்தியத்தை இந்தியாவிடம் தாரைவார்க்க யாழ் வெள்ளாளத் தேசியம் வழியேற்படுத்திக் கொடுத்தது என்பதும் மெய்.

இலங்கையினுள் தனது மேலாதிக்கத்தை வென்றெடுப்பதற்கான முயற்சியில் சிங்களத் தேசியம் வெற்றியீட்டியுள்ளது. தனது ஆட்சிப் பரப்பினுள் கிழக்கும் - வடக்கும் இணைந்த தமிழர் தாயகக் கோரிக்கையுடன் சுயாட்சி கோரிப் போராடும் தமிழ்த் தேசியம் இந்திய அல்லது அமெரிக்க மேலாதிக்க சக்திகளுடன் கூட்டமைத்து தனது சுயாதிபத்தியத்தைக் கேள்விக்குள்ளாக்கி தன்னை தோற்கடிக்க முயல்கிறது என சிங்களப் பேரினவாதம் கருதுகிறது. அந்தவகையில், தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காக போராடுகிறார்கள் என்ற புரிதலைச் சிங்கள மக்கள் வதடைவதற்கு சிங்களப் பேரினவாதம் அனுமதிப்பதில்லை. பேரினவாதிகள் அந்தச் சதியில் வெல்லும் வகையிலேயே பிரிவினை நாட்டத்தை முன்வைக்கும் ஈழவாதத் தமிழ்த் தேசியர்கள் செயற்படுகிறார்கள்.

ஈழத் தமிழ்த் தேசியம் பிரிவினையின் அவசியமின்றியே தனது சுய நிர்ணயத்துக்காகப் போராடுவதற்கான அடிப்படை தேவைகள் நிறைந்திருக்கும் வாய்ப்பை யாழ் வீள்ளாளத் தேசியம் ஈழத் தமிழர் மீது தன் மேலாதிக்கத்தை நிலைனிறுத்துவதற்கு உரியதாக ஆக்கும்வகையில் முன்னெடுக்க விருப்புக்கொள்ளும் போது, தமிழ் மக்களை அணிதிரட்டிப் போராடுவதை விடவும் இந்திய - அமெரிக்க மேலாதிக்க சக்திகளுடன் கூட்டமைத்து செயற்படுவதன் வாயிலாக நிரைவு செய்ய உல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவே முயல்வர்.நாடு மேலாதிக்க சக்திகளிடம் இறைமையை இழப்பது பற்றி அவர்களுக்கு சலனங்கள் எதுவுமில்லை; ஈழமண்ணில் தமது மேலாதிக்கம் நிலவ வாய்ப்பளிக்கும் உலக மேலாதிக்கங்கள் இங்கு கோலோச்சுவது பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. தம்ழ் -சிங்கள ஆதிக்க சாதித் தேசியங்கள் தத்தமது மக்களை ஆளும்போது இன்றைய உலக நியதியாக உள்ள உலகமய மேலாதிக்க சக்தியின் கட்டுப்பாட்டை ஏற்க வேண்டியதுதான் என்பது யாழ் வெள்ளாளத் தேசியக் கணிப்பு.

அதற்கு ஆயுதமேந்தித் தலைமை தாங்கிய பிரபாகரன் ஐந்து வருடங்களின் முன் கூறிய வார்த்தைகள் இவ்விடயத்தில் கவனிப்புக்குரியது. வெரித்தாஸ் வானொலிப் பிரமுகர் ஒருவர் 'நக்கீரன்' இதழில் எழுதிவந்த தொடரில் இதனைப் பதிவு செய்துள்ளார். இந்திய அதிகாரத் தரப்பு தன்னை புரிந்துகொள்ளாமல் நிராகரிப்பதாக அந்த நக்கீரன் தொடர் கட்டுரையாளரிடம் பிரபாகரன் விசனம் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ்த் தேசியத்துடன் பகைமை பாராட்டாமல் இந்திய அதிகாரத் தரப்பு தமிழீழம் அமைய அனுசரணையாக அமைந்தால், உருவாகும் தமிழீழம் மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு உதவிகரமாய் எப்படி இஸ்ரேல் அமைந்துள்ளதோ அவ்வாறு தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்குரிய வலுவான தளமாக இருக்குமெனக் கூறியிருந்தார்.

இவ்வகையில் உலக மேலாதிக்கத்துக்குப் பணிந்தபடியே கிழக்கு - வடக்கு தமிழர் தவிர்த்து ஏனைய பகுதி சிங்கள மக்களையும் ஏனைய தேசிய இனங்களையும்  ஆதிக்க சாதிச் சிங்கள தேசியம் தனது ஒடுக்குமுறைக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என்பது யாழ் வெள்ளாளத் தேசிய்ம் முன்னிறுத்தும் வாய்ப்பு. கிழக்கு - வடக்கு தமிழர் தாயகத்தையும் தானே ஆளவேண்டும் என மேலாதிக்க வாய்ப்பை இராணுவ பலம் கொண்டு சிங்களப் பேரினவாதம் ஒடுக்குதலைத் தொடரும்போது விடுதலையை நேசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள், யாழ் வெள்ளாளத் தேசியம் (அதனை இன்று பிரதினிதித்துவப்படுத்தும் நாடுகடந்த ஈழவாதிகள்) தமது நலங்களுக்கு தீங்கிழைப்பவர்கள் என்ற புரிதல் கொள்ளாமலே, தமிழ்த் தேசிய மீட்சிக்காக யாழ் வெள்ளாளத் தேசியம் போராடுவதாக எண்ணிக்கொண்டு அதன் பின்னால் அணி திரளத் தூண்டப்படுகிறார்கள்.

ஆக, சிறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை வழங்குவதை விடவும் அவற்றின் மேல் அதிகாரம் செலுத்தும் பொருட்டு உலக மேலாதிக்கத்திடம் நாட்டின் இறைமையைத் தாரை வார்த்து விடலாம் என்பதாக பேரினவாதம்; தனது மக்களின் மீது அதிகாரம் தானே செலுத்தவேண்டும் என்பதற்கான வாய்ப்புக்காக பிற மேலாதிக்க சக்தியின் வேட்டைக் காடாகவும் நாட்டை மாற்றும் துடிப்பில் சிறு தேசிய இனம். இரு தரப்புக்கும் தமது சொந்த மக்களி அடிப்படை நலங்களில் அக்கறை இல்லை என்பது வெளிப்படை.ஆளும் சாதித் தேசியங்கள் சொந்த மக்களின் நலங்களுக்குத் துரோகமிழைத்து உலக மேலாதிக்கங்களுடன் கூடிக்குலாவும். ஏனைய சாதித் தேசியங்கள் தத்தமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டுமாயின் தமது இனத்தின் ஆதிக்க சாதித் தேசியங்களுடன் முரண்பட்டவாறு தமக்குள் ஐக்கியமுறவுள்ள வாய்ப்பை தேடுவது உடனடி அவசிய வரலாற்றுப் பணியாகும்.



Wednesday, March 21, 2012

பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை -ந.இரவீந்திரன் / இது தொடர்பாக சில கருத்துப் பரிமாற்றங்கள் .....

"பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை " என்ற கட்டுரையை தமது இணைய இதழ்களில் வெளியிட்டு அதற்கான எதிர்வினைகளை நான் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைத்து இணைய இதலாழர்களுக்கும் நன்றி. ஒவ்வொன்றுக்குமான பதிலை தனித்தனியாக தர இயலாமைக்கு மன்னிக்கவும்.. குறிப்புக்களாக பதில்களைத் தருகிறேன்.


ஒட்டுமொத்தமாக புலப்பெயர்வாளர்கள் தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவரையுமே குற்றம் சாட்டுவதாக கட்டுரை அமைக்கப் படவில்லை;மீறி அந்த தொனி ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.சில நண்பர்கள் எனது முகப்புப் புத்தகத்தில்  ஏற்றுக் கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது.மேற்படி இரு தரப்பிலும் மூன்று பிரிவினர் உண்டு.அடைந்தால் ஈழம், இல்லையேல் தமிழருக்கும் கெடுதியே வந்தாலும் இலங்கை முழுதையும் ஆக்கிரமிப்பாளர் வசம் ஆக்குவோம் என்கிற நாடு கடந்த ஈழவாதிகள்.சுய நிர்ணய உரிமையை அர்த்தமுள்ள வகையில் வென்றெடுக்க முன்முடிவுகளைக் கடந்து ஆழமான தேடல்களை மேற்கொள்பவர்கள் இரண்டாம் பிரிவினர்.இரண்டிலும் சேராமல் அவ்வப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப ஒரு தரப்பை தற்காலிகமாக ஆதரிக்கும் நடுநிலைச் சக்தி மூன்றாம் தரப்பினர்.

முதல் தரப்பினர் இங்கு சுயநிர்ணயத்துக்காகப் போராடக் கூடிய சக்திகளுடன் இணைந்து செயலில் முன்னேற ஏற்ற நடவடிக்கைகளில் செயர்ப்படுகிறார்கள்.கட்டுரையை ஏற்று கருத்துக் கூறிய நண்பர்கள் அத்தரப்பினர்.அவர்கள் எல்லோரும் கட்டுரையுடன் பூரண உடன்பாடு கொண்டிருப்பார் என்பதற்கில்லை.பிரதான அம்சம் இவ்வகையில் தேடல் அவசியம் என்பதால் ஆதரவை வெளிப்படுத்தினர்.நானும் முடிந்த முடிவு எதனையும் சொல்லிவிடவில்லை.அனைவரது சுதந்திரமானதும் சமத்துவமானதுமான கருத்தாடல்களின் வாயிலாகவே எமது விடுதலைக்கான பாதையைக் கண்டறியப் போகிறோம்.

ஈழவாதிகள் ஆதிக்கச் சாதித் தேசியத்தை முன்னெடுக்கின்றனர்.அவர்கள் இந்தியாவின் ஐந்தாம் படையாகவும் இருப்பர்;அமெரிக்காவின் ஐந்தாம்படையினராகவும் இருப்பர்.ஆர்குத்தியும் அரிசியாக்கி,ஆண்டபரம்பரையினரான தம்மிடம் ஈழத்தைத் தந்துவிட்டால் சரி என்று இருப்பர்.இலங்கையில் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்துசிறு பான்மையினருடன் தமிழருக்கான சயநிர்ணய உரிமையை வடிவப்படுத்துவது என்ற தேடலில் ஈடுபடும் தமிழ் தேசியர்கள் ஈழ வாதிகள் எனப் பொருள் கொள்ளப்படவில்லை என்பதையும் ,அவர்கள் மேலே குறித்த முதல் பிரிவினர் என்பதால் ஈழவாதத் தொப்பியைப் போட்டுப் பார்த்து இடர்ப்பட வேண்டாம் என்பதையும் சொல்லத்தேவை இல்லை என்று நினைக்கிறேன். 

தமிழக தமிழ்த் தேசியர்களிலும் இரு பிரிவினர் உண்டு.பௌசர்குறிப்பிட்டதைப் போல,இந்தியாவில் தமக்குப் பிரிவினை பற்றி எந்த நினைப்பும் இல்லாமல் பிரிய வாய்ப்பற்ற ஈழத்தை பிரிக்கிறோம் பேர்வழிகள் எனக் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்கிற சுரண்டலாளர்கள் ஒரு பிரிவினர்.மக்கள் விடுதலையின் பகுதியாக ஈழத்தமிழர் சுயநிர்ணயத்தை வடிவப்படுத்த முன் வருகிறவர்கள் அடுத்தபிரிவினர்.

தமிழகத்தின் ஈழப் பிரிவினர் இந்தியாவில் பிரிவினை பற்றி அக்கரைகொள்ளாமல் இருக்கக் காரணம் தமது சுரண்டல் நலனை முழு இந்தியாவிலும் கடைவிரித்திருப்பதுடன் இந்தியா மேலாதிக்க ஆக்கிரமிப்புக்குரிய வாய்ப்பை பிற நாடுகளுடன் ஏற்ப்படுத்தித்தருவதனையும் பயன்படுத்தி கொள்வதற்காகவே.எமது பிரச்சனையில் தீர்வுக்கான தேடலை இடையூறு செய்து வேண்டாத உணர்ச்சி முறுக்கேற்றல்களை அவர்களது ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் நலனுக்காக முன்னெடுக்கிறார்கள் என்பதில் இரகசியம் எதுவுமில்லை.

தமிழக ஈழ ஆதரவாளர்கள் பட்டியலில் சீமான்,தங்கர்பச்சான் வகையறாக்கள் முன்னிலை வகிப்பதில் சினிமாக் கைத்தொழில் தமிழகத்தின் பிரதான அன்னியசெலாவனியாக இருக்கிறது என்பதுடன் தொடர்பானதே அன்றி தற்செயலானது அல்ல.இவர்களும் ஈழ வாதப் புலம் பெயர்வாளர்கள் ஜெனிவாவில் முன்னெடுக்கிற செயற்பபாடுகளும் சிங்கள மக்களை சிங்களப் பேரினவாதிகள் ஏமாற்றி அரவணைக்கவும் வாய்ப்பேர்ப்படுத்திக் கொடுத்துள்ளனர்.இரு தரப்பு இனவாதிகளும் தமிழ் சிங்கள மக்களை பிளவுபடுத்தியுள்ளனர்.அது அவர்களுக்கு ஆதாயமானது.மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகள் மக்கள் இவ்வகையில் பிளவுபடுத்தப்படுவதை எவ்வகையிலும் விரும்பமுடியாது.

இவ்வாறு சொல்வதனால் இன்றைய நிதர்சனத்தில் சிங்கள மக்கள் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறார்கள் என்ற உண்மையைக் காணத் தவறுகிறோம் என்று பொருள் இல்லை.இந்தநிளைமையை இரு தரப்பு இனவாதிகளே ஏற்ப்படுத்தியுள்ளனர் என்பதையே வற்புறுத்துகிறோம்..சிங்கள முற்போக்கு சக்திகள் பேரினவாத அரசுக்கு எதிராக விட்டுக்கொடுக்காத கருத்தியல் போராட்டத்தை நடாத்திய போது ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு இவர்கள் இடைஞ்சல் செய்கின்றனர் ,புலிகளுக்கு உதவுகின்றனர் என்ற பேரினவாத அரசின் சூழ்ச்சி பலிக்கும் யதார்த்தம் எவ்வகையில் ஏற்ப்படுத்தப் பட்டதென்பதை அறிய மாட்டோமா?

இந்த புற நிலைமையால் சிங்கள மக்கள் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் பாரதூரமான வரலாற்றுத்தவரைச் செய்கிறார்கள் என்பது உண்மையே.கடைசி நேர யுத்தத்தில் புத்தரின் தம்மபிடகத்தொடு தேச ஹீரோக்கள் தர்ம யுத்தம் செய்தனரே அன்றி பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது புலிகளாலேயே அன்றி பேரினவாத இராணுவத்தால் அல்ல என்று போலித்தனமான நம்பிக்கை கொள்ள சிங்கள மக்கள் விரும்புவது அபத்தமானது.இத்தகைய அபத்தம் சிங்கள மக்களுக்குக் குறையாத அளவில் தமிழ் மக்களிடமும் உண்டு.புலிகளின் பல தவறுகளை ஊக்கப்படுத்தும்வகையில் புலிகளை எப்போதும் நியாயப் படுத்தி வந்த மக்களின் பொறுப்பற்ற ஆதரவே புலிகள் தறிகெட்டு செயற்ப்பட்டு அழிவைத்தேட நேர்ந்தது.

இன்றைய மோசமான தவறுக்கு சிங்கள மக்கள் ஆட்பட்டுள்ளமையால் பிறரோடு இணக்கமாக வாழ்வதில் ஒருசில இனங்களில் ஒன்றாக சிங்கள இனம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.நிச்சயமாக யாழ்ப்பாணத் தலைமையிலான ஈழத்தேசிய சக்தி உன்னத இனத்தின் பக்கத்துக்குரியதல்ல.மட்டுமன்றி ஆக்கிரமிப்புக் குணாம்சம் என்ற பண்பில் இஸ்ற்றவேல் யூதர்களுடன் முதலிடத்துக்காகப் போட்டியிடுகிறவர்களாக நாம் இருக்கிறோம்.இந்தப் பண்புள்ள ஆதிக்க சாதித் தேசியத்திலிருந்து உழைக்கும் மக்களின் சார்பான தமிழ் தேசிய வெற்றிக்காக எப்படி முயல்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

அதை விடவும் சிங்கள முற்போக்கு சக்திகளின் சவாலும் கடினமானதே.எண்பதாம் ஆண்டுகளில் இருந்தே தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பக்கம் வருகிற முற்போக்காளர்கள் வேட்டையாடப்பட்டு வரப்பட்டுள்ளனர்.இன்றும் அதுவே நிலை.தவிர சிங்களவர் இலங்கையில் மட்டுமே வாழும் போது,இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களும் மத்தியகிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்களும் பிறருக்கு நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களாயே உள்ளனர்  எனக்கூறி  சிங்கள மக்கள் சிறு தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கிற நிலைக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர்.

வர்க்க ஒடுக்குமுறை ஊடாக மட்டுமன்றி சாதி ஏற்றத்தாழ்வு சார்ந்த சமூக ஒடுக்கு முறையூடாகவும் வரலாறு இயங்கி வருகிறது.இன்றைய முதலாளித்துவ அமைப்பில் சமூக ஒடுக்குமுறை என்பது தேசிய ஒடுக்குமுறையாக வடிவம் கொண்டுள்ளது.சின்ன மீன் ,பெரிய மீன் ,பென்னாம்பெரிய மீன் விழுங்குவது தேசிய ஒடுக்கலிலும் நடக்கிறது.சிங்களப் பேரினம்  பெரிய மீன் என்றால் இந்தியா பென்னாம் பெரிய மீனாக சிங்கலத்தேசியத்தையும் ஆக்கிரமித்துள்ளது.இதற்கு மீனவர் பிரச்சனையை கட்டுரையில் உதாரனமாக்கியிருந்தேன் .கட்டுரையிலேயே மீனவர் எதிர் நோக்கும் சிக்கல் பற்றி எழுத்யுல்லேன்;அதுபற்றி தமிழ்த் தேசியர்கள் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற அதிர்ப்தியைத் தெரிவித்திருந்தேன்.

இலங்கையின் மீனவர்களை தலித்கள் என்று கூறமுடியுமா என்ற கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.வேறுபட்ட சாதியினர் இங்கு மீனவர்கள்;அவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டவர்களாயிருந்து அதற்கு எதிராக போராடி வெற்றி ஈட்டியுள்ளனர்.இருபதாம் ஆண்டுகளிலேயே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் முன்னோடி அமைப்பான மாணவர் சங்கம் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.அப்போரட்டப் பாரம்பரியம் தொடர்ந்து வளர்ந்த போது அணைத்து சாதி முட்போக்காளர்களது ஆதரவுடன் ஒடுக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் முன்நேரிவன்தனர்.நாற்பதுகளில் தோன்றிய கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுகளைச் சந்தித்த போதிலும் அனைத்துப் பிரிவினரும் தத்தமது கருத்தியல் நிலை நின்று ஒடுக்கப்பட்டவர்களின் சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்துவந்தனர்.அந்தவகையில் தலித்தியத் தேவை இங்கு இல்லை எனும் பொருளில் மீனவர்கள் இந்தியா அர்த்தப்படுத்தும் வகையில் தலித் அல்ல;அதேவேளை தாழ்த்தப்பட்டவர்கள் என்று மட்டுமன்றி ஒடுக்கப்பட்டவர்கள் என்ர்கூடச் சொல்லக்கூடாது ,தலித்துக்கள் என்பதே போர்க்குணம் மிக்கது என்பதால் அவ்வாரே அழைக்கவேண்டும் என்ற குரலையும் கவனம் கொள்வது அவசியம்.

இறுதியாக ,சீனா பற்றிய கேள்வி.சீனா எமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடவும் இல்லை,மேலாதிக்கம் புரியும் நடவடிக்கைகளில் இறங்கவும் இல்லை.இன்றைய நிலையில் அமெரிக்காவும்,இந்தியாவுமே எமது நாட்டையும் எமது தேசிய இனப் பிரச்சனையையும் குழம்பிய குட்டையாக்கி ஆதாயம் தேட முனைகின்றன.சீனா அவ்வாறு செய்ய முனைந்தால் கண்டிப்போம்.

மீண்டும் ,சுதந்திரமான கருத்தாடலை வலியுறுத்தி தற்காலிகமாய் விடை பெறுகிறேன் நன்றி. தொடர்வேன்,,, 
-- 

Thursday, March 15, 2012

பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை -ந.இரவீந்திரன்


 பிரிந்து செல்வதை மறுக்கும்
சுய நிர்ணய உரிமை
                                                     -ந.இரவீந்திரன்

மூன்று தசாப்தங்களின் முன் ஈழத்தமிழ்த் தேசியம் பிரிவினைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அதன் ஆபத்துக்கள் குறித்து மார்க்சியர்கள் எச்சரித்திருந்தனர். அதேவேளை தமிழ்த் தேசியத்தின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்திய போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கத் தவறியமையால் வரலாறு அவர்கள் கைகளை விட்டுத் தவறிப் போனது. போகவும், இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தால் வழிநடாத்தப்பட்டு இன்று நாடு பூராவும் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டுப் போயுள்ளது.
அன்று ஈழத்தமிழ்த் தேசியத்தை நீண்டகால நோக்கில் பலவீனப்படுத்தும் நோக்குடன் சிங்களப் பேரினவாதப் பிதாமகனான ஜே.ஆர் கையாண்ட தந்திரோபாயம் மேலாதிக்க சக்திகளுக்குப் பயன்பட்டுள்ளதுளூ மக்கள் விடுதலைக்குப் பாரிய பின்னடைவாகியுள்ளது. புலம்பெயர் தமிழ்ப் பட்டாளம் இத்தனை பெரும் சக்தியாக முடிந்தமையே ஜே.ஆரின் அந்த நரித் தந்திரம். இந்தப் புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காசிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.
இவர்களது கூட்டு தமிழகத் தமிழுணர்வாளர்களுடனானது. இவ்விரு சக்திகளும் எமக்கு உதவுபவர்களா? பிரிவினை இல்லாத சுயநிர்ணய உரிமையை ஏன் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது? எமது வடபிரதேசக் கடல் வளம் தொடர்பான சர்ச்சையிலிருந்து எமது விவாதத்தை முன்னெடுப்போம்.

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் கடல் எல்லைகளை மீறுவதனால் எமது மீனவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி தடைசெய்யப்பட்ட வலைகளை அவர்கள் பாவிப்பதால் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகளின் பிரவேசம் மன்னார், யாழ்ப்பாணம் எனப் பரந்து விரிந்து தற்போது முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அப்பாலும் சென்றுவிட்டது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது 2011.12.14 அன்று தினக்குரல் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற செய்தியின் ஒரு பகுதி. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் பட்ஜெட் விவாதத்தின்போது அவையில் ஆற்றிய உரையாக அச்செய்தி அமைந்திருந்தது. யுத்தம் நிறைவடைந்ததும் எமது மீனவர்கள் கடற்றொழிலுக்காக அனுமதிபெறும் பாஸ் நடைமுறை இன்னமும் தொடர்வது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சந்தைப்படுத்துவதற்கு முயலும்போது எதிர்கொள்ளும் பாதுகாப்புப் படையின் கெடுபிடிகளையும் அவ்வுரையில் குறிப்பிட அவர் தவறவில்லை.
படையினர் வடபகுதி மீனவர்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தும் அதேவேளை, தென்பகுதிச் சிங்கள மீனவர்கள் வடபிரதேசக் கடல் வளத்தைப் பயன்படுத்துவதற்குத் தாராளமாக இடமளிப்பதாக அவ்வப்போது செய்திகள் அடிபடுவதையும் அவதானித்து வருகிறோம். ஆயினும், வடபகுதித் தமிழ் மீனவர்கள் தம்மளவில் சிங்கள மீனவர்களிடமிருந்து பெறும் நெருக்கடிகளை விடவும் இந்தியத் தமிழக இழுவைப் படகுகளின் பிரசன்னம் ஏற்படுத்தும் கடல்வள அபகரிப்பால் எதிர்நோக்கும் இடர்பாட்டையே தாங்கவியலாததாகக் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடே பாராளுமன்றத்தில் எழுந்த குரல்.
தமிழக – வடபிரதேச – தெற்கு மீனவர்கள் எனும் முத்தரப்பு நெருக்கடி குறித்து மீனவர் சங்கங்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசியுள்ளனர். கடல்வளப் பயன்பாட்டின் கள நிலவரங்களில் அவர்களிடையே கை கலப்புகள் இடம்பெற்ற போதிலும், ஒரே வர்க்க உணர்வு, மேற்கிளர்ந்து தமக்குள் சுமூகத் தீர்வை எட்டியதோடு, அவ்வப்போது நீடித்த தீர்வுக்காக மீனவர் சங்கங்களின் இத்தகைய சந்திப்புகள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியது வரவேற்புக்குரியது. அவை திருப்திகரமான முடிவுகளை எட்ட இயலா வகையில் அவர்களது பிரச்சினைகளையும் கடந்த வேறு அரசியல் நெருக்கடிகள் தடைகளை வளர்ப்பனவாய் உள்ளன.
இன்று பாராளுமன்றத்தினுள் யாழ்- மன்னார் மீனவர்களின் உரிமைக் குரலை எழுப்பும்போது தமிழக மீனவர்கள் எதிரிகளாகக் காணப்படுகிறார்கள்ளூ இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத சக்திகளால் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குள்ளாவதைக் கண்டித்துத் தமிழுணர்வாளர்கள் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்த வேளைகளில் தமிழக மீனவர்கள் அவர்களோடு கைகோர்த்துக் குரல் எழுப்பியுள்ளனர். 'சிங்களக் கடற்படை எம்மைத் தாக்குகிறது -  உடைமைகளை அபகரிக்கிறது -  கொலை செய்கிறது' எனத் தமிழக மீனவர்கள் போராடும் எந்தச் சந்தர்ப்பங்களிலும், அங்குள்ள தமிழுணர்வாளர்கள் தம்மை ஆதரித்து எந்தவொரு செயற்பாட்டிலும் இறங்கியதில்லை எனத் தமிழக மீனவர்கள் தமிழுணர்வாளர்கள்மேல் குற்றச்சாட்டு முன்வைப்பதையும் கண்டுள்ளோம்.
இலங்கை வடபிரதேச மீனவர்களுக்குத் தமிழக மீனவர்கள் கெடுதி செய்கிறார்கள் என்பதாலேதான் அவ்வாறு தமிழகத் தமிழுணர்வாளர்கள் தமிழக மீனவர்களுக்கு எந்த ஆதரவையும் காட்டாது இருக்கிறார்களோ? அப்படி ஒரு குற்றச்சாட்டை தமிழுணர்வாளர்கள் முன்வைத்ததில்லை. அவர்களுக்கு உண்மையில் மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டம் குறித்தோ, அவர்களைச் சிங்களப் படையினர் கொல்வது பற்றியோ உணர்வு கொள்ள இயலுவதில்லை. அங்கே தமிழுக்கு என்ன அவலம் வந்துவிட்டது? அன்றாட, வயிற்றுப் பாட்டுக்கு அல்லாடுகிறவர்களது அற்பப் பிரச்சினைக்கு எல்லாம் தமிழுணர்வைக் கிளர்ந்தெழச் செய்தால் தமிழுக்கு ஓர் அச்சுறுத்தல் நேரும்போது பெரிதாக எதுவும் பண்ணவியலாமல் போய்விடுமே!
வயிற்றுப்பாடுகள் என்ற அற்ப விவகாரங்களுக்கு ஆட்படாத புனிதமான இந்தத் தமிழுணர்வாளர்களில் இரு பிரிவினர் உள்ளனர். எங்கேயும் இருக்க முடிவதைப்போல! தமிழுக்கு அவலம் எனக் கருதி அவசர கோலமாய்த் தீப்பாயும் நிலைவரை செல்கிற உண்மையான உணர்வாளர்கள் - இதனைத் தமது பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களுக்காக முதலீடுகளாக ஆக்கிக்கொள்ளும் போலிகள் என்பன அத்தகைய இரு பிரிவுகள். ஆரம்பத்தில் உண்மை உணர்வாளர்களாய் இருந்து, கால ஓட்டத்தில் போலிகளாய் ஆனவர்களும் உண்டுளூ ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஆதாயமே குறியென இருப்பவர்களும் குறையவில்லை. முதல் உந்துதல் போலவே மடியும் வரை உண்மை உணர்வோடு வாழ்ந்தவர்களும் உண்டுளூ போலிகளே பயன்பெறும் அர்த்தமற்ற விவகாரம் இது என விழிப்படைந்து அனுபவ முதிர்ச்சியில் விரக்தியுற்று ஓதுங்குவோரே ஏராளம்!
தமிழகத்தைப் பொறுத்தவரை வர்த்தக நலனின் உந்துதலுடன் செயற்படும் போலிகளின் கஜானாவைப் பெருக்கவும் - அரசியல் வியாபாரிகளின் வாக்கு வங்கியை ஊதிப் பெருக்க வைக்கவுமே தமிழுணர்வு தூண்டப்பட்டுவரக் காண்கிறோம். மீனவர்களின் பிரச்சினையில் தமிழக மீனவர்களை ஆதரிக்க முனைந்தால் இலங்கை வடபிரதேச மீனவர்களைப் பகைக்க நேரும். அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லைளூ புலம்பெயர் ஈழப்பற்றாளர்கள் தவறாகக் கருதிவிட்டால்தான் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு கஜானாவும் வற்றிப்போக நேரும்.
இந்தத் தமிழுணர்வாளர்கள் மீனவர்களின் உயிர்ப்பான போராட்டங்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ளாமல், போலியான தமிழ்ப் பாதுகாப்பு முழக்கங்களுக்காய் இளம் இரத்தங்களைச் சூடேற்ற முயல்வது இத்தகைய குறுகிய மனப்பாங்கில் ஆதாயம் தேடுவதற்கானது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. அத்தகையவர்களின் போலித்தனங்களை விளங்கிக் கொண்டு தமக்கான விளம்பரத்துக்காக அவர்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு வரவேற்றுக் களிபேருவகை கொள்ளச்செய்யும் புலம்பெயர் கனவான்கள் - சீமாட்டிகளின் ஆசைகளும் மறைபொருள்கள் அல்ல. இத்தகையவர்களது பணப் பரிமாற்ற – புகழ்வெறி என்பவற்றுக்கு அப்பால் உயிர்ப்பான வாழ்க்கைப் போராட்டங்களை முன்னெடுக்கும் இந்தத் தெற்காசியப் பிரச்சினை என்பதை சரியாகப் புரிந்து கொள்வதென்பது வேறொரு தளத்துக்கானது.
ஐஐ
இலங்கைத் தமிழ் மக்கள் இந்த மண்ணில் சிங்களப் பேரினவாத மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு சற்றும் குறைவற்றதாய்த் தமிழகத்தின் சூறையாடலுக்கான மேலாதிக்கம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளமையை வெளிப்படுத்துவதாக இந்த மீனவர் பிரச்சினை அமைந்துள்ளது. வாழ்க்கைப் போராட்ட நிதர்சனம் பட்டவர்த்தனமாய் உணர்த்தும் இந்த உண்மையைக் கனக்கப் படித்த யாழ்ப்பாண மூளை வீங்கிகள் விளங்கிக்கொள்ள முடியல்வதில்லை. வேறு தளங்களில் தமிழகம் எம்மை அபகரிப்பது பற்றிய உணர்வுகொள்ளாமலேதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
வேறெதையும்விட எமக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழகத்தின் தமிழுணர்வாளர்களே எமது விடுதலையின் முதல் எதிரிகள்! எமது பொருளியல் வளத்தைச் சுரண்டுவதை விடவும், எம்மீது கருத்தியல் மேலாதிக்கம் செய்து எமது மண்ணில் நட்புறவு கொள்ளவேண்டிய சொந்தச் சகோதரர்களிடையே மோதலை வளர்ப்பவர்களாய்த் தமிழகத் தமிழுணர்வாளர்கள் உள்ளனர். அவர்களது பிரதான வேட்டைக்காடாக புலம்பெயர் தமிழர்களது வளங்களும், மனங்களும் இருக்கின்றனளூ தமிழகப் பெரு முதலாளிகளின் ஏனைய சூறையாடல் களங்கள் இங்கே ஒட்டுமொத்தமான இலங்கை மண்ணையும் அபகரிப்பதற்கான மன இசைவையும் அவர்கள் ஏற்படுத்தித் தருகிறார்கள்.
இங்கே பேரினவாதச் சக்திகள் மிகுந்த சுயாதிபத்தியத்துடன் பல்வெறு நாடுகளோடு உறவாட இயலுவதாகத் தோற்றம் காட்டியபோதிலும், உண்மையில் இந்தியாவிடம் இலங்கை தனது சுயநிர்ணயத்தை இழந்து போயுள்ளது என்பதில் இரகசியம் ஏதுமில்லை. ஆக, சிங்கள மக்கள் ஏனைய சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வழங்க மறுத்து, இறுதியில் தம்மிடம் இருந்ததையும் கைநழுவ விட்டுள்ளனர்.
இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கம் வெற்றி கொள்ளப்பட்டதில் அதிக ஆதாயத்தைப் பெற்றவர்கள் தமிழகப் பெரு முதலாளிகளே. இங்கே தமிழக மீனவர்களின் மேலாதிக்கச் சூறையாடலைப் பேசுகிற எமது தமிழபிமான அரசியல் கனவான்கள் இத்தகைய தமிழக - இந்தியப் பெருமுதலாளிகளது மேலாதிக்கத்தையோ, சூறையாடலையோ பற்றிப் பேசுவதில்லை. உண்மையில் தமிழக மீனவர்கள் எமது மீனவர்களைப் பாதிக்கும் சூறையாடலைச் செய்தபோதிலும், கடின உழைப்புக்கான அர்ப்பணிப்பையும் உடையவர்கள். அவர்களது தவறை உணர்த்தும் அதேவேளை, அதை விடவும் கொடிய சுரண்டலாளர்களான தமிழக - இந்தியப் பெரு முதலாளிகளையும், அவர்களது கருத்தியல் அடிவருடிகளான தமிழுணர்வாளர்களது கபடத் தனங்களையம் கண்டிக்க முன்வர வேண்டும். தமிழக மீனவர்கள் இத்தகைய பெரு முதலாளிகளுக்கும், தமிழுணர்வுக் கபட வேடதாரிகளுக்கும் எதிராகப் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விடுதலைக்காகப் போராடும் தமிழக முற்போது சக்திகள் மட்டுமே அவர்களுடன் தோள் சேர்ந்து எமக்குமான நியாயத் தீர்வுகள் குறித்த அக்கறையுடையவர்களாய் இயங்கி வருகின்றனர். அந்த முற்போக்கு சக்திகள் தமிழுணர்வைப் போலிக் கபடதாரிகளிடம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களும் அனந்தம்.
ஐஐஐ
இலங்கையினுள் ஆளும் சிங்கள இனம் ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கி மேலாதிக்கம் புரிகிறது. அந்த ஆளும் இனமும் இந்திய மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறது. இந்த மேலாதிக்கம் செய்யும் சக்திகளுக்குள்ளும் ஒடுக்கப்படுவோர் உண்டு. தமிழகம் உழைக்கும் மீனவர்களை ஒடுக்கப்பட்டோராயே நடாத்துகிறது. சாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக இந்தியா முழுமையிலும் தலித் மக்கள் போராடுவதை நிறுத்த முடிவதில்லை.
இத்தகைய அனைத்துச் சமூக சக்திகளிடையேயும் சுரண்டுவோர் - உழைப்போர் என்கிற வர்க்க பேதங்களும் உள்ளன. முன்னர், இந்த உழைக்கும் மக்கள் பல்வேறு சமூக வேறுபாடுகளையும் (இன – மத – சாதி பேதங்களை) கடந்து ஒன்றுபட வேண்டும் என்பதனை அதிகமாய் வலியுறுத்தியுள்ளோம். அது சாத்தியப்படாத வண்ணம் மேலாதிக்க சக்தி – ஒடுக்கப்படும் சமூகப் பிரிவு எனும் பேதம் இன்று வலுப்பெற்று வருவதனைக் காண்கிறோம்.
ஆயினும், இன்றுங்கூட இன, மத, சாதி பேதங்களைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதன் அவசியம் இன்னும் அதிக கவனிப்பைப் பெறும் வகையில் வலியுறுத்தப்படுவது அவசியமானது. அதேவேளை மேலாதிக்க சக்தி – சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படும் பிரிவினர் என்ற பேதம் நிதர்சனமாயுள்ள உண்மையையும் கவனங் கொள்வது அவசியமாகும். மேலாதிக்க சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், தம்மவரால் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக் குரல் கொடுத்துத் தனக்கான ஐக்கியப்படும் சக்தியை அணிதிரட்டுவதன் வாயிலாக மட்டுமே தமக்கான விடுதலையை வென்றெடுக்க இயலும். அதேபொல ஒடுக்கப்படும் சமூகப் பிரிவிலுள்ள உழைக்கும் மக்கள் தம்மைச் சுரண்டும் தமது சமூக பெருந்தனக்காரர்களோடு தவிர்க்கவியலாமல் ஐக்கியப்பட நேர்ந்தபோதிலும் இனவாத – மதவாத – சாதியவாத மனப்பாங்குக்கு ஆட்படாமல், அனைத்து உழைக்கும் மக்களோடு ஐக்கியமுறுவதற்கு முதன்மை கொடுப்பது அவசியம். இவை குறித்துப் பேசுவது இன்னொரு அரசியல் பரிமாணமாக விரியத்தக்கது.
ஐஏ
அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் - சுரண்டலையும் தகர்க்கப் போராடும் மார்க்கத்துக்கான கருத்தியலையும், கோட்பாடுகளையும், போராட்ட வழிமுறைகளையும் வழங்கும் மார்க்சியம் - லெனினியம் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற சிந்தனையை எம்மிடம் ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிந்தனைமுறை கால – தேச நிலவரங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிற ஒன்றாயிலும் உலகளவிலான மார்க்சிய அணியினரே போதிய சிரத்தையுடன் அதனை விருத்தியுறச் செய்வதற்குத் தவறியுள்ளனர்ளூ அவ்வாறு விருத்தியுறுத்த நெறிப்படுத்தும் முன்னுதாரணங்கள் மார்க்சிய இயக்க வளர்ச்சியில் இருக்கவே செய்கிறது.
பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் கொதிநிலை நீடித்த ஐரோப்பிய மண்ணில் ஊற்றெடுத்த மார்க்சியம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என முழக்கமிட்டபோது பட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாகவே ஐரோப்பா முழுமையும் முதலில் சோஷலிஸத்தை வெற்றி கொண்டு, அதனால் குடியேற்ற நாடுகளாக்கப்பட்ட ஏனைய நாடுகளுக்கும் அதனை யதார்த்தமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்தவகையிலான உலகப் புரட்சியின் சாத்தியம் இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலிலேயே தகர்ந்து போயிருந்தது.
அப்போது ஏகாதிபத்தியக் கட்டத்துக்கு முதலாளித்துவமும் பரிணமித்திருந்ததுளூ இன்னமும் ஐரோப்பிய மண்ணில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கொந்தளிப்பு நீடித்திருந்தது. புரட்சியின் மையம் கிழக்கு நோக்கி நகர்ந்து ருஷ்யாவில் தீவிரம் பெற்றிருந்தது. ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பல்வேறு வர்க்கங்களும் - ஜாரிஸ ருஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டிருந்த தேசங்களும் ஐக்கியப்பட்டுப் போராடும் விருப்புடையனவாய் இருந்தன. இத்தகைய ஏகாதிபத்தியக் கட்டத்தில் உலகப் புரட்சியின் சாத்தியமின்மையை வலியுறுத்திய லெனின், சமனற்ற வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவம் பலவீனமுற்றிருக்கும் தனியொரு நாட்டில் சோஷலிஸத்தை வென்றெடுக்க இயலும் எனக் காட்டினார். தனியே பாட்டாளி வர்க்கம் என்றில்லாமல் விவசாயிகளோடான ஐக்கியத்திலான புரட்சியைக் கையேற்க வேண்டுமென அழுத்தினார்ளூ ஒடுக்கப்பட்ட தேசங்களை அந்தப் புரட்சியில் ஐக்கியப்படுத்தும் வகையில் தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உள்ளது என வலியுறுத்தினார். பாட்டாளி வர்க்கப் புரட்சியினதும், ஏகாதிபத்தியக் கட்டத்தினதும் வளர்ச்சி நிலைக்குரிய மார்க்சியத்தின் விருத்தியான லெனினியம் 'உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்' என வளர்ச்சி பெற்ற சுலோகத்தை வழங்கியிருந்தது.
அதன் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் சோஷலிஸம் வென்றெடுக்கப்படுவது நடைமுறையில் நிகழவில்லை. முதலாளித்துவம் தனது தந்திரோபாயங்களில் ஏற்படுத்திய மாற்றங்களினால் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கொந்தளிப்பு ஐரோப்பாவில் பின்னடைவுகளுக்கு உள்ளானது. ஆயினும் புரட்சியின் மையம் இன்னும் கிழக்கு நோக்கி நகர்ந்து குடியேற்ற நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக சோஷலிஸத்தை வென்றெடுக்கும் வளர்ச்சி நிலையில் பாட்டாளி வர்க்கச் சிந்தனை புதிய வடிவப் பரிமாணத்தைப் பெற்றிருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயி வர்க்கத்தைப் பிரதான சக்தியாக அணி திரட்டி பாட்டாளி வர்க்க சிந்தனை முறையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது மா ஓசேதுங் சிந்தனை என்ற புதிய வடிவத்தை மார்க்சிய – லெனினியம் பெற்றிருந்தது. ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த சீனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமை பலவீனத்தை ஏற்படுத்திவிடும் எனச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. மார்க்சிய – லெனினியம் வசனங்களில் முடங்கியதாயில்லாத விஞ்ஞானபூர்வ சிந்தனை முறை என்பதால், ஏகாதிபத்திய நாடாக இருந்த ருஷ்ய நிலைக்குரியதாக லெனின் வலியுறத்திய சுயநரிணய உரிமை இலக்கணத்தில் சீ.க.க. மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரிந்து செல்லும் உரிமை அற்ற சுயநிர்ணய உரிமையைச் சீ.க.க சோஷலிஸ சீனத்தில் வெற்றிகரமாய்ப் பிரயோகித்து உலகின் முதல்நிலை நாடாக இன்று சீனா வளர்ச்சிபெறும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


பட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாக மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறையை வழிகாட்டு நெறியாக வரித்துக்கொண்ட தேசிய விடுதலபை; போரட்டமூடாகவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்துச் சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க இயலும் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சினையையும் சுயநிர்ணயப் பிரயோகத்தையும் மேலும் வளர்ச்சிபெற்ற வரலாற்று நிலவரத்துக்கு அமைவாக மார்க்சியர்கள் விருத்தி செய்துள்ளனர்.
            பிரதானமாய், தேசியம் முதலாளித்துவத்துக்குரியது என்ற லெனின் பார்வையிலிருந்து விடுபட்டு அனைத்து வர்க்கங்களிடமும் தேசிய உணர்வு உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் தேசியம் சீன – சோவியத் பிளவில் வகித்த பாத்திரம் இன்றைய மீளவாசிப்பில் வெளிப்பட்டுவரக் காணலாம்ளூ கோட்பாட்டு விவாதத்தை இரு பாட்டாளி வர்க்க அரசியல் அணிகளும் தமக்கான தேசிய உணர்வு இல்லாதிருந்திருப்பின் சுமுகநிலையில் அணுகி, பாட்டாளி வர்க்க இயக்கம் இன்றைய பின்னடைவை ஏற்படுத்துவதிலிருந்து தவிர்த்திருக்கவியலும்.
     எவ்வாறாயினும், எமது தேசியப் பிரச்சினையை எமது வரலாற்று செல்நெறியூடு மார்க்சிய – லெனினிய சிந்தனை முறைமையைப் பிரயோகித்துப் புதிய அணுகுமுறையில் கண்டறிய வழிப்படுத்துவதாய் இந்த வரலாற்று உண்மை அமைந்துள்ளமை தெளிவு. வர்க்கப் பிளவுறாமல் விவசாய வாய்ப்புப் பெற்ற இனமரபுக் குழு ஆளும் சாதியாக மாறி ஏனைய இனமரபுக் குழுக்களை ஒடுக்கப்படும் மற்றும் இடைச்சாதிகளாக மாற்றி சமூக வர்க்கங்களாய் ஒட்டுமொத்தமாக சுரண்டுவதாக எமது ஏற்றத்தாழ்வு சமூக வரலாறு அமைந்துள்ளது. ஒடுக்கப்படும் தேசங்கள் ஏகாதிபத்திய நாட்டினால் சமூக வர்க்கமாய்ச் சுரண்டப்படுவது போன்ற ஒடுக்கப்படும் சாதிகளும் சமூக வர்க்கங்களாய்ச் சுரண்டப்படுகின்றன.
     அந்தவகையில் எமது பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாய் எம்மைச் சுரண்டும் இந்தியாவினுள் தலித் மக்கள் தமது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியவர்களாயுள்ளனர். அதேவேளை, தலித் பிரிவினரான தமிழக மீனவர்கள் எமது கடல் வளத்தின்மீது மேலாதிக்கம் புரிய அவாப்படுகின்றனர். அவர்களும் எம்மைப் போன்ற தமிழர்களே ஆயினும் அவர்கள் இந்திய தேசியத்துக்குட்பட்ட தமிழ்த் தேசியத்துக்குரியவர்கள். (அதனுள் மூன்றாவது தேசிய வடிவமாய் அவர்களுக்கான தலித் தேசியத்தையும் உடையவர்கள்.) எமது மீனவர்கள் தலித் தேசியமாய் யாழ் வெள்ளாளத் தேசிய மேலாதிக்கத்துக்கு அடங்கிப் போகாத சுயநிர்ணயத்தைக் கொண்டிருக்கும் அதேவேளை, சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணயத்தையும் வலியுறத்த வேண்டியவர்களாயுள்ளனர்.
     எமது கடல்வளம் இந்திய மேலாதிக்கச் சுரண்டலுக்கு ஆட்படும்போது, தவிர்க்கவியலாமல் எமது தமிழ்த் தேசியம் இலங்கைத் தேசியத்தின் பகுதி என்பதை ஏற்கும் நிர்ப்பந்தத்தையுடையவர்களாய் உள்ளோம். இந்தியத் தேசியம் - தமிழகத் தமிழ்த் தேசியம் - தலித் தேசியம் என்பவற்றை போராடட்ங்களினூடே அவர்கள் பேணும் அதேவேளை எம்மை இவ்வகையில் இயங்கவியலாவகையில் மிக மோசமாய்ப் பிளவுபடுத்தியுள்ளனர். இந்தச் சதிக்கு நாம் தொடர்ந்து பலியாக வேண்டுமா? இந்தியாவினுள் தலித் தேசியம் - இனத் தேசியம் என்பன பிரிவினை உணர்வின்றி ஒன்றுபட்ட இந்தியத் தேசியத்தினுள் தமது சுயநிர்ணய உரிமையை விரிவுபடுத்த ஏற்ற போராட்டங்களை முன்னெடுக்கக் கற்றுக்கொண்டுள்ளதைப் போல எம்மால் இயலாதா?
     நாம் அவ்வகையில் இயங்காற்றல் கொள்ள இயலாத வகையில் தமிழக - இந்திய மேலாதிக்கவாதச் சக்திகளின் கருத்தியல் ஆக்கிரமிப்புப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே உலக மேலததிக்கவாதத்தின் ஐந்தாம் படையாக இருந்து புலம்பெயர் தமிழுணர்வாளர்களும் எமது விடுதலைக்கு கேடு செய்கிறவர்களாயுள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் இனியும் இலங்கை அல்லது ஈழத்தமிழ்த் தேசியத்துக்குரியவர்களல்லளூ தத்தமது நாட்டு தேசியத்துக்கு உட்பட்ட தமிழ்த் தேசியத்தை வேண்டுமாயின் பெற்றுக் கொள்க - இந்திய தமிழ்த் தேசியம், இலங்கையின் ஈழத்தமிழ்த் தேசியம் என இங்கே வேறுபட்டு இருப்பதுபோல, இரத்தபந்தத்தால் எம்மீது உண்மைப் பற்று இருப்பின், நாம் எமக்கான விவாதங்கள் வாயிலாக வந்தடையும் தீர்வுக்குப் பங்கம் ஏற்படாத வகையில் உங்களுடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
     அதேவேளை புலம்பெயர் இனவாதிகளைக் காரணமாயக் காட்டி எமது சுயநிர்ணய உரிமையைச் சிங்களப் பேரினவாதம் மறுக்க இடமற்ற வகையில் நாம் பிரிவினையற்ற சுயநிர்ணயத்தையே வலியுறுத்துகிறோம் என அழுத்தியுரைப்போம். ஏனைய இனங்களோடு இணக்கமாய் வாழ்வதில் மிகச் சிறந்த பண்புகளுடைய சிங்கள மக்கள் பேரினவாதிகளின் சதிகளுக்கு ஆட்பட்டுச் சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பது இந்தப் பிரிவினை அச்சத்தினாலேயே. கடந்தகால வரலாற்றில் புலிக்கொடி ஏந்திய சோழர்களின் படையெடுப்பினால் சிங்கள பண்பாட்டின் அநுராதபுர – பொலனறுவ நகரங்கள் அழிக்கப்பட்டமை பற்றிய அச்சம் அவர்களிடம் எப்போதும் மீள் வலியுறுத்தப்படுவதுண்டு. பிரிந்து செல்லும் ஈழம் தமக்கு மீள இயலாத அழிவு என அவர்கள் அச்சங் கொள்வதை நியாயமற்றதெனக் கூறவியலாது.
     அந்தவகையில் எமது பிரத்தியேக இருப்பையும், வரலாற்றுக் கட்டத்தையும் கவனங் கொண்டு தேசிய இனப்பிரச்சினை குறித்த ஆழமான விவாதங்களை முன்னெடுப்போம். பிரிந்து செல்லும் உரிமையற்ற சுயநிர்ணயம் குறித்து அழுத்தி வலியுறுத்தி உழைக்கும் சிங்கள மக்களது போராட்டங்களுடன் இணைந்து செயற்பட்டு எமது தேசிய இனத் தீர்வுக்கு வழிசமைப்போம். அனைத்துச் சிறு தேசிய இனங்களது சுயநிர்ணய அமைப்பாக்கங்களைச் சரியான முறையில் வடிவமைப்போம்ளூ சிக்கலான இந்த விவகாரத்தில் ஈடுபடாமல் பொதுப்படப் பேசிக் காலங்கழிப்பது தொடர்ந்தும் எமது அடிமைத்தனத்தை நீடிக்கவே வழிகோலும். புதிய தலைமுறை அதனைத் தகர்த்து வரலாற்றைக் கையேற்று மக்கள் விடுதலையை வெற்றி கொள்ளும் என்பது நிச்சயம்.
'உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, தலித் மக்களே ஒன்று சேருங்கள்'

நன்றி மல்லிகை  47 வது ஆண்டுமலர் 

Sunday, February 26, 2012

1___ .....

ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி 
                                                      கல்லூரியின் முகப்பு


1992 -05 -11  ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரியில் இணைந்து கொண்டேன். இந்தக் கல்லூரிக்கும் எனக்குமான உறவை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. அதன் வெளிப்பாடு தான் இந்தத்  தொடர்... 




                                                                             வெள்ளிக்கிழமை (24.02.2012 )    ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரி பீடாதிபதி சுந்தரலிங்கத்தை கல்வி அமைச்சில் சந்தித்தேன்.இரு தினங்களுக்கு முந்திய கல்லூரி இருபதாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஏன் அறிவிக்கவில்லை எனக் கேட்டேன் .அந்தக் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.அதேவேளை இது போன்ற சிறிய தவறுகளும் நடந்துவிட்டது எனக் கவலை தெரிவித்தார்.அறிவிக்கப் பட்டிருந்தாலும் போயிருக்க இயலாதுதான்.சுகவீனம் தடையாக உள்ளது.இருப்பினும் அந்தநிகழ்வூடாக கல்லூரித்தொடக்க கால நினைவுகளுக்கு செல்லக்கூடியதாக அமைந்திருந்தது.அது வைரம் பாய்ந்த மறக்கவியலாத நாட்கள்.


                                                            அந்தக் கொண்டாட்டத்துக்கு அடுத்தநாளே முரளி வீட்டுக்கு வந்திருந்தார்.என்சுகவீனம் பொருட்டாக என்னைப் பார்க்க வந்தபோது அந்தக்கால பயன்மிக்க நினைவுகளை மீட்டுக்கொண்டார்.மதிவானமும் செல்வராசா மற்றும் முரளி ஆகியோரின் இரு வேறு பார்வைகள் தன்னோடு தொடர்பாடியமையை கூறியிருதார்.எனது அணி சார்ந்த இன்னொரு பார்வையும் ஜோதிக்குமாரின் நந்தலாலா அணியின் பார்வையும் தனித்தனியாக இயங்கின.எனது அணிக்குரிய நிலைப்பாட்டை வலுப்படுத்துவதே என் பிரதான செயற்பாடாக அமைந்தபோதிலும் மாற்றுக்கன்னோட்டம் உடையவர்களோடு ஊடாடுவதற்கு தடை இருக்கவில்லை.உயிர்ப்பான வரலாற்று பங்களிப்புக்கான தருணங்கள் அவை என்பதால் வேறுபட்ட பார்வை உடைய நண்பர்கள் மாற்றுக் கருத்துக்களுடனும் ஒன்றுபட்டு இயங்க இயலுமாயிருந்தது.

                                                              இன்று பல சிதைவுகளோடு காலம் அவலமாக அனைத்தையும் பிளவுபடுத்தி தனியன்களாகஆட்களை மாற்றியுள்ளது.எனது அணி என்பதும் காணாமல் போயுள்ளது.தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதற்காக வால் ஒன்றை சேர்த்து அகோரமாக தோற்றம் தருகிறது.அதுபற்றி பின்னர் பார்க்கலாம்.இப்போது அன்றைய ஆரோக்கியமான காலம்பற்றி மீட்டுப் பார்ப்போம்.  ...
                                                                                                            (தொடர்வேன்...)


                                                                       2
  ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி .....                             
  
                                                
                      தனராஜ் சேர் , மாணவர்கள் ,மற்றும் திருமதி சுப்ரமணியம் , எனது மகள் சுபரா .
                                       
                                               வவுனியா மத்திய மஹா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிகமாக இணைந்திருந்த அந்தக் காலம்.ஒருநாள் பாடசாலையின் நிகழ்வு ஒன்றுக்கு ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரியின் பீடாதிபதி வந்திருந்தார். செல்வி இராசரத்தினம் என்கிற அவர் பெரிதும் அறியப்பட்டவராக இருந்தார்.சில வருடங்களில் ஒய்வு பெறும் நிலையில் இருந்த அவர் திருமணம் செய்யாமலே இருந்தார்.பின்னர் ஒரு நாள் எங்கள் விடுதிக்கு அவர் வந்தபோது பபி(என் மனைவி) அவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டார்."செய்யக்கூடாது என்ற எந்த நோக்கமும் எனக்கு இருக்கவில்லை;சொல்லப்போனால் செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தேன்.கிறிஸ்த்தவராகவும் உயர்சாதிக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்ததனால் மாப்பிள்ளை கிடைக்காததினால் வீட்டாரினால் எனக்கு திருமணம் செய்துதர இயலவில்லை.என் அனுபவித்தினால் பின்னர் என் சகோதரிகளுக்கு சாதி சமயம் எல்லாம் பொருந்திவர வேண்டும் என்று பார்க்காமல் நான் திருமணம் செய்து வைத்திருந்தேன்" என்றார்.அவரது சகோதரிகளில் ஒருவர் என் வாழ்க்கை விளக்காக அமைந்த விஞ்ஞான ஆசிரியர்.அதுபற்றி வேறோர் சந்தர்ப்பத்தில் உங்களோடு பேச வேண்டும்;அந்தச்   சந்தர்ப்பத்தில் பீடாதிபதியிடம் அவரது சகோதரி எனக்கான அறிவியல் பார்வையை ஊட்டியது பற்றி சொல்லியிருந்தேன்.அவரது சந்தோசத்துக்கு அளவில்லை என்பதைச் சொல்லத்தேவையில்லை.


இப்போது வவுனியாவில் அவரை சந்தித்த இடத்துக்குப் போயாக வேண்டும்.சகல ஆசிரியர்களோடும் அளவளாவியபோதும் ஸ்ரீ பாதவுக்கு விரிவுரையாளர்களை எடுக்கவேண்டும் என்ற நினைவோட்டம   அவரிடம் இருந்திருக்க வேண்டும்.எனது பட்டப்படிப்பு பெறுபேற்றை கேட்டதும் வர்த்தமானியப் பார்க்கும்படியும் கண்டிப்பாக விண்ணப்பியுங்கள் என்றும் கூறினார்.கீருவும்(சகோதரன் )  வர்த்தமானிபற்றி அறிந்து விண்ணப்பங்கள் எடுக்க வழி செய்திருந்தார்.விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சையும் முடிந்து ஓரிரு மாதங்களில்  மே மாதம் பதினோராம் திகதி வந்தபோது நான் ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரிக்கு கடமை ஏற்க சென்றேன்.அந்தப் புதிய நிலை மிகப் பெரும் மகிழ்வாக முடியாதவகையில் பீடாதிபதி இருக்கையில் செல்வி இராசரத்தினம்.இருக்கவில்லை.அரசியல் நெருக்குவாரங்களுக்கு உடன்பட மறுக்கும் அவரது ஆளுமை காரணமாக அவர் வெளியேறியிருந்தார்.புதிய பீடாதிபதி அங்குள்ள அரசியல் ஆதிக்கத்தால் இருத்தப்பட்டவர் என்பதெல்லாம்  எங்களுக்கு எங்கே தெரியப் போகிறது?


ஜெர்மனி அரசால் புதிதாகக் கட்டப்பட்ட அங்குள்ள விரிவுரையாளர்  விடுதியில் குடும்பத்துடன் குடியேறினேன்.எல்லாமே புதிது.ஏற்கனவே மலையகத்தில் புதிய வாழ்க்கை,புதிய பண்பாடு படைக்கும் அரசியல் செயற்பாடுகளை செய்திருந்த அனுபவத்துடன் இந்தப் புதிய சூழல் மேலும் காத்திரமான பங்களிப்பைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையுடன் கால் பதித்தேன்.வவுனியா மத்திய மஹா வித்தியாலயத்தில் எனக்கான பிரியாவிடையை பாடசாலை செய்தபோது அதிபர் தனது உரையில் ,அடுத்த வருடம் வவுனியாவில் கல்விக் கல்லூரி வர இருப்பதால் ,அப்போது இடமாற்றம் பெற்று வந்துவிடுங்கள் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருந்தார்.எனது ஏற்பு உரையில் ,பெரும் நடப்பாக சொல்லியிருந்தேன்,இனி எனது வேலை முழுமையும் மலையகத்தில்தான் என்று.


          அதற்கு ஏற்ப மே மாத ஸ்ரீ பாத சூழல் மிகுந்த இதமாக வரவேற்றது.மலைகளின்  நடுவே கல்லூரி கம்பீரமாக எழுந்து நின்றது.அதைவிட வீரியமிக்க பயிலுனர்களை அது கொண்டிருந்தது.கல்லூரியைவிட்டு வெளியே வந்தால் டெவன் அருவியின் சலசல ஓசை காதில் வரவேற்பு இசையை ஒலிக்கும்.இருநூறு மீட்டர் நடந்தால் அதனைக் கண்ணாரக் கண்டு களிக்க இயலும்.இன்னும் நூறு மீட்டர் தூரத்தில் சென்ட் கிளையர் அருவி.ஒரு திசையில் bus எடுத்தால் ஹட்டன்.மறு திசையில் தலவாகலை.இடையில் பத்தன சந்தி ஊடாக போனால் நாவலப்பிட்டி. அற்புதமான அந்தச் சூழலில் அமைந்த கல்வி நிறுவனத்தில் எத்தகைய அரசியல் எல்லாம் இயங்கின?எத்தகைய உன்னதமிக்க படிப்பினைகளைப்  பெற்றோம்?      தொடர்வேன்......

                                                3---
ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி 

பொதுவான நினைவலைகளுக்குள் போவதற்கு முன் ,முதல் பயிலுனர்கள் போர்க்குணமும் சமூக அக்கறையும் மிக்கவர்களாக இருந்தார்கள் எனச் சொன்னதுபற்றி பார்ப்பது அவசியம் எனக் கருதுகின்றேன்.


மூன்று வருடங்களுக்கு முன்னர்(2009) புதிதாக பயிலுனர்கள் எடுக்கப்படாமல் தாமதமாக்கப்பட்டது.எடுக்கப்போவதில்லை என்றும் கல்விக் கல்லூரிமுறை தோல்வியடைந்துவிட்டது என்றும் அன்றைய கல்வி அமைச்சர் சொன்னார்.அதனை நம்பியிருந்த மாணவர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தி இருந்த நிலையில் ஆறு மாதங்களின் பின்னர் பயிலுனர்கள் உள்வாங்கப்பட்டனர்.      

             புதிதாக உள்வாங்கப்பட்ட பயிலுனர்கள் உள்ள நிலையில் தர்காநகர் தேசியக் கவிக் கல்லூரியில் இருந்து பணி நிமித்தம் ஸ்ரீ பாதா தேசியக் கல்விக் கல்லூரிக்கு  சென்றேன்.அப்போது பயிலுனர்கள்,விரிவுரையாளர்கள் மத்தியில் பேசவேண்டிய  சந்தர்ப்பம்  ஒன்று ஏற்பட்டது.ஆரம்பத்தில் கல்விக் கல்லூரிமுறை மிகுந்த பாராட்டைப் பெற்றிருந்து , இன்று தோல்வி அடைந்ததாக சொல்லப்படக் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பி எனது பதிலைச் சொன்னேன்.


நிர்வாகக் காரணம் தவிர்த்து பயிலுனர்கள் தொடர்பான அம்சத்தை இங்கு பார்த்தால் போதும்.முதல் தொகுதியினர் கல்லூரிக்குள் வருவதற்கு முன்னர் இரண்டு வருடங்களுக்கு மேலாக நம்பிக்கை அற்ற சூழலில் தவித்தவர்கள்.கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த வேலையையும் செய்தனர்;சமூகத்துடன் நன்கு ஊடாடினர்.சமூகம் தன்னிடம் எதனை எதிர் பார்க்கிறது?நான் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பணி என்ன? என்பது  போன்ற  சில புரிதல்களோடு  கல்லூரிக்குள் வந்தார்கள்.இப்போது அப்படி அல்ல.உயர்தரப் பரீட்சைப் பெறு பேறு வெளியான  கையோடு வந்துவிடுகிறார்கள்.இங்கு மாணவர்கள் என்ற உணர்வோடு இருக்கிறார்களே அல்லாமல் ஆசிரியர்கள் ஆகப் போகிறோம் ;எம்மிடம் சமூகம் எதை எல்லாம் எதிர் பார்க்கிறது என்ற புரிதல் கொள்ள இயலாதவர்களாகவே உள்ளனர்.


தவிர,ஒரு புதிய அமைப்பாக அப்போது அதன் நல்ல அம்சங்கள் வெளிப்பட,இன்று அந்த அமைப்பின் நல்ல அம்சங்கள் முழுதாக அமுங்கிப் போய் தீய அம்சங்களே மேலோங்கி நிற்கிறது.அப்போதும் நல்ல அம்சங்களை தீய அம்சங்கள் அமுக்கிவிட முயன்றனதான்;ஆயினும் அதனை முறியடித்து நல்ல அம்சத்தால் வெற்றி பெற இயலுமாயிற்று.இங்கேதான் பயிலுனர்களது போர்க்குணமும் சமூக அக்கறையும் பெரும் பங்களிப்பை நல்கின.


அன்று புதிதாக வந்த விரிவுரையாளர்களும் ஸ்ரீ பாதா கல்லூரியில் ஆரோக்கியமான பங்களிப்பை நல்கினர்.பொதுவாகவே எல்லாக் கல்விக் கல்லூரிகளிலும் ஆரம்ப காலம் வீறுள்ளதாக இருந்து பின்னர் தேய்வடைந்ததாக கருத்து உண்டு .இது முனைப்பாக வெளிப்படுவது ஸ்ரீ பாதவில்தான்.இதற்கு மலையக அரசியல் செல்நெறிப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களும் பிரதான காரணமாகும்;நாங்கள் அன்றைய மலையகத்தின் விடிவெள்ளியாகப் பார்க்கப்பட்ட ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரி பற்றிப் பார்ப்போம். ...
தொடர்வேன்....


                                      4---
  ஸ்ரீ பாத கல்விக் கல்லுரி 

கல்லூரிக்கு புதிய விரிவுரையாளர்களாக நாங்கள் செல்வதற்கு முன்னதாக பயிலுனர்கள் அங்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.அதற்கு ஆறேழு மாதங்களுக்கு முன்னரே பீடாதிபதியுடன் சில விரிவுரையாளர்கள் அங்கு இணைக்கப்பட்டு இருந்தனர்.செல்வராசா,முரளி,தனராஜ் போன்றவர்கள் அவ்வகையில் முன்னரே வந்தவர்கள்.என்னுடன் சமகாலத்தில் ராஜ்குமார்,ராஜேந்திரன் போன்றவர்கள் வந்தனர்.


ராஜ்குமார் நினைவூட்டப் பட அடிப்படையான இரு காரணங்கள் உண்டு.தொடர்ந்து மலையகத்தில்தான் எனது பணி என்று வவுனியா மத்திய மஹா வித்தியாசாலையில் சூளுரைத்த போதிலும் கடும் குளிருக்கு தாக்குப் பிடிக்க இயலாமல் மூன்று வருடங்களின் பின்னர் நான் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாற்றம் பெற வேண்டியாகிவிட்டது.அப்படி வெளியேறிய போது எங்களை தனது காரில் ராஜ்குமார் நாவலபிட்டியாவில் கொண்டுவந்து விட்டார்.அதைவிட சுவாரசியமானது சேர்ந்த புதிதில் எங்களுக்குள் சிறு முரண்பாடு முகிழ்க்க முனைந்து அவரது பெருந்தன்மையால்  தவிர்க்கப்பட்டது.


முதலில் அவருக்கு ஒரு விடுதி தருவதாக கூறப்பட்டிருந்தது;அதன் திறப்பை பெறாமலே அவர் குடும்பத்தை கூட்டி வருவதாக ஓரிரு நாள் விடுப்பில் போய்விட்டார்.அதனை மறந்து ,அந்த இடையில் வந்த என்னிடம் அதேவிடுதித் திறப்பை பீடாதிபதி தந்துவிட்டார்;நான் அதனை சுத்தப்படுத்தி குடும்பத்துடன் குடியேறிய பின்னர் வந்த ராஜ்குமாருக்கு தான் விரும்பிய விடுதி கை நழுவிப்போய்விட்டமை தெரியவந்தது .அடுத்த ஒரு விடுதியை பெற முடியுமாயினும்,பெரிதாக உள்ள உப பீடாதிபதியின் விடுதியை இரண்டாக்கி , அதில் ஒன்றையே பெறவேண்டி இருந்தது.இப்போது பிரச்சனை நான் சுத்தப்படுத்திக் குடியேற வந்துவிட்ட நிலையில் அதனைக் கொடுக்க முடியாது என்பதுதான்.என்னையும் ராஜ்குமாரையும் பீடாதிபதி காரியாலையத்தில் அழைத்து கைமாற்றுவதட்கு பேச்சுவார்த்தை நடத்தியபோது ,வேறு விடுதிக்கு என்னால் மாற இயலாது;அப்படி இதனை நான் தர வேண்டுமாயின் நான் வெளியில் வாடகை வீட்டைப் பார்க்கிறேன் என்று உறுதியாக கூறிவிட்டேன்.


சண்டைபோட விரும்பாத  ராஜ்குமார் எனத் இறுக்கமான நிலைப்பாடு கண்டு அதிர்ந்து போனார்.இப்படி முதல் நாளே பீடாதிபதியுடன் போராடமுடியுமா என்ன?அவர் பின்வாங்கி மற்ற  விடுதியையே பெறுகிறேன் என்றுவிட்டார்.அந்த மாற்றிக்கூறிய நாட்டாமைத்தீர்ப்போடு வெளியே வந்தபோதுதான் நானும் அவரும் முதன்முதலில் கதைத்துக்கொண்டோம்.பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம்;முடிவாக அவர் நான் அதிரும்வகையில்,சர்வசாதாரணமாகவே சிரித்தபடி என்கோவம் பற்றி எதோ சொன்னார்.

முதலில் அவர் என்னைக் கொச்சைப்படுத்தியதாகத்தான் கருதினேன்;இருப்பினும் பிரச்சனை தராமல் அவர் பின்வாங்கியதை உத்தேசித்து அவரிடமிருந்து சுமுகமாகவே அன்று விடைபெற்றேன்.தவறுக்கு எதிராக எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி நான் போராடுவதைப் பரவணி இயல்பாக கொண்டிருப்பவன் என்பதனை அவர் விரைவில் தெரிந்துகொள்ளக்கூடியதாக காலம் கனிந்தே இருந்தது;எங்கள் விடையத்தில் முதல் கோணலாக இருந்ததைப்போலவே நிர்வாக விடயங்களில் பல கோல்மால்களுடன் பீடாதிபதி இருந்தார் .அவற்றுக்கு எதிராக நாங்கள் போராடியபோது முதலில் தனது இயல்புக்கு ஏற்ப மென்மையாக இருந்த ராஜ்குமார் ,பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் எவரையும்விட கடும் தொனியில் ஏசினார் என்பது வேறு விடயம்.


உண்மையில் பல போராட்டங்களுக்கு களமாக அமைந்து கல்லூரி எங்களைப் புடம் போட்டு எடுத்தது.அவைபற்றி தொடர்வேன் .....




ஸ்ரீ பாத கல்விக் கல்லுரி   5

                               இங்கு  எனக்கு கிடைத்த சில நன் நட்புகள் இன்று  வரை தொடர்கின்றது 
                           ந. இரவீந்திரன் , சு .முரளீதரன் , திருமதி கணேஷன் , திரு கணேஷன் -இவர் தான் ஐயர்                                                  -                         ஈழ போராடத்தின் ஆரம்ப உறுப்பினர் )

எந்த ஒரு குறிப்பும்,அல்லது எழுத்துபூர்வமான எந்த ஆவணமும் இல்லாமல் வெறும் மனப்பதிவை மட்டுமே கொண்டுதான் இதனை எழுதுகிறேன்.கற்றலுக்கான ஒரு நிறுவனத்துக்கு,புதிய கனவுகளுடன் போன எங்களுக்கு முன்னால் கல்வியியல்  சார்  கல்வியை விடவும் ,சாமூக மாற்ற இயங்காற்றல் தொடர்பான  கல்விக்கான  களமே வரிந்து பரந்து கிடந்தது எனக் குறிப்பிட்டிருந்தேன் .



சமூக அக்கறையுடனான பயிலுனர்களும்,புத்திய சிந்தனையுடனான விரிவுரையாளர்களும்,மலையக அதிகாரத்துவ தொழிற்சங்க அரசியல் தொடர்பு பீடாதிபதியும் ஊடாடிய களம் என்ற வகையில் நெருப்பும் பஞ்சும் அக்கம் பக்கமாக இருந்த nilai என்கிறவகையில் போராட்டங்கள் வலிந்து வரவேற்க அவசியமற்றது ;வாராதது போலிருந்து எப்போதும் வெடிக்கக் கூடியதுதான்.


இந்தக்  கள நிலவரத்தில் இன்னொரு அம்சமும் சேர்த்தி;முதலே நீங்கள் ஊகித்திருக்கக் கூடியது தான்.புதிதாகக் கட்டி ஜொலிஜோளித்த அதனை ஜெர்மனி கட்டித்தந்தது என்றேன் அல்லவா?ஜெர்மனி என்றால் பின்னாலே அமரிக்கா என்று பொருள்;ஆக, இந்தப் போராட்டக் களத்தில் அமரிக்காவும் பிரசன்னம்.
ஓ! ,உங்கடை பெரிய போராட்டத்துக்குள்ளை அமெரிக்காவையும் கண்டு பிடிச்சிருக்கிறீர்கள் என்கிறீர்களா? தொடர்வேன் ..... 


ஸ்ரீ கல்விக்கலூரி - 6 



ஸ்ரீபாதா கல்விக்கல்லூரி விரிவுரையாளர்கள் என்ற வகையில் நீர்கொழும்பில் ஆசிரியர்களாக களமிறங்க உள்ள பயிலுனர்கள் சிலருக்கு ஆசிரிய வாண்மைத்துவம் தொடர்பான பயிர்ச்சியளிக்கச் சென்றிருந்தோம். அங்கு எமது போராட்டக் களங்களில் அமெரிக்கா உள்ளதை உணர்த்திய சம்பவம் ஒன்று 
இடம்பெற்றிருந்தது. கடைசியாக சந்தித்தபோது இதுபற்றிய கேள்வியோடு தான் பிரிந்திருந்தோம்.


முன்னதாக நீர்கொழும்பு முன் ஆசிரிய பயிர்ச்சியாளர்கள் பற்றி சொல்வது அவசியம். இரண்டொரு வருடங்களின் முன்னர் வடக்கிலிருந்து புலிகளினால் 
வெளியேற்றப் பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், சிலாபம் பகுதிகளில் அகதி முகாங்களில் குடியிருத்தப்பட்டிருந்தனர். அவர்களது பிள்ளைகளின் கல்விக்காக
அமைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அவர்கள் மத்தியிலிருந்தே படித்த வாலிபர்களும், யுவதிகளும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு முழுமையான
பயிற்சி வழங்க இயலாத நிலையில் இருவாரங்கள் வதிவிட பயிற்சி வழங்கவேண்டியிருந்தது.


அந்தப் பயிற்சி வழங்கும் பொறுப்பை ஜி.ரி.இசட். எடுத்திருந்தது. இதுவே எமது கல்லூரி கட்டிடங்களையும் ஏனைய வளங்களையும் வழங்கி, குறிப்பிட்ட காலம்வரை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தது என்பதை முன்னரே பார்த்திருந்தோம்.அவர்களது ஒரு வளமான எங்களை பயிற்றுவிப்பாளர்களாக 
நீர்கொழும்புக்கு வரவழைத்திருந்தனர்.


இருவாரங்கள் சிறப்பாக பயிற்சி முடியும் இறுதிக் கட்டத்தில் அதன் முன்னேற்றம் பற்றி பார்வையிடுவதற்காக அமைச்சர் மஜீத் வந்திருந்தார். மஜீத் அவர்கள் 
அன்றைய  பேரினவாத - ஐ.தே.க. அரசில் அங்கம் வகிப்பவர் என்கிற வகையில் இனவாதியாக இருப்பத்ற்கே சந்தர்ப்பம் அதிகம் என்று நீங்கள் கருதக்கூடும்; அவ்வாறு இல்லை என்பதை வலியுறுத்துவது அவசியம். ஐ.தே.க.இன் பெரும்பாலான அமைச்சர்கள் மோசமான இனவாதிகளே. மாறாக,மஜீத் இதய
சுத்தியுடன் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காக செயற்பட்டிருந்தார்.


இந்த உமது சான்றிதழுக்கு என்ன அவசியம் வந்தது என்று கேட்டால் அதுவும் சரிதான். பல தவறான புரிதல்களுடன் பலரையும் தட்டிக்கழித்து விடுகிறோம் என்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது. இன்னொரு அதிகம் தேவையாயில்லாத ஒரு விசயத்தையும் சொல்லிவிட்டு மேற்கொண்டு போவோம்.


வந்த அமைச்சரை மகிழ்விப்பதற்காகவும், தமது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் ஆசிரியப் பயிலுனர்கள் சிறிய கலை நிகழ்வை நிகழ்த்தினர். தேவை கருதி ஒருசில தமிழ்ப் பெண்கள் இருந்த போதிலும் மற்றவர்கள் அனைவரும் முஸ்லிம் பெண்களும் ஆண்களுமே பயிலுனர்கள். நடன நிகழ்த்துகையை ஆற்றிய
ஒன்றிரண்டில் முஸ்லிம் பெண்கள் அதிகமாய் இடம்பெற்றிருந்தனர்.


இது ஒரு முஸ்லிம் அமைச்சர் என்கிறவகையில் மஜீத் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம் பெண்கள் நடனம் ஆடுவது தடுக்கப்பட்ட ஒன்று.
அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி அந்த நடனங்கள் அமைந்திருந்தமையே அமைச்சருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் தனது உரையில் அதுபற்றி அவர் பேசியிருந்தார். மாறிவரும் உலகில் இப்போதும் முஸ்லிம் பெண்கள் நடனம் ஆடக்கூடாது என்று சொல்கிற பழமைவாதி அல்ல நான்; ஆசிரியைகளாகப் பயிற்சி பெற்ற உங்களுக்கு நடனம் அவசியம், பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான கற்பித்தலை வழங்கப்போகிற உங்களுக்கு மிகமிக அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் எனக்கு முன்னால் நடனத்தை நீங்கள் தவிர்த்திருக்கலாம். எவராவது இதனை அறிந்தால், அதெப்படி முஸ்லிம் பெண்கள் தன் முன்னே ஆடுவதை அமைச்சர் அனுமதித்தார் என்று என்மீது குற்றச்சாட்டை சுமத்த இடம் உண்டு.


இங்கு அவசியப்படுகிற ஒருவிடயமும் அவரது உரையில் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு பெறுமதிமிக்க பயிற்சியை ஜி.ரி.இசட். வழங்கியிருந்தது என்கிறவகையில்
அது தொடர்பில் அவர் பேச வேண்டியிருந்தது. அந்த நிறுவனம் ஜெர்மனிக்குரியது. ஜெர்மனிக்கு நன்றியைச் சொன்னவர், இதுபோல அமெரிக்கா ஏன் முன்வந்து உதவ வருவதில்லை என்பதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டார். என்ன இருந்தாலும் ஐ.தே.க. அமைச்சர் ஒருவர் அமரிக்காவை சந்தேகப்படும் தனது மக்களிடம் அந்த நாடு பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் அரசியல் பொறுப்பு இருக்கிறதுஅல்லவா?


அமரிக்க தூதுவருக்கு முஸ்லிம்களின் அகதி முகாங்களை அழைத்துச்சென்று தான் காட்டியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஜெர்மனி இவர்களுக்கு நிறையவே உதவுகிறது நீங்கள் ஏன் உதவக்கூடாது என்று கேட்டிருந்தாராம்; அதற்கு அமரிக்க தூதர் சொன்ன பதில்தான் முக்கியமானது; ஜெர்மனிக்கூடாக எமது உதவி இவர்களை வந்தடைகிறது. நேரடியாக நாமே உதவி செய்வதில் அரசியல் பிரச்சனை உண்டு. சி.ஐ.ஏ. ஊடுருவல் என்று பிரச்சாரங்கள் வலுத்துவிடும் என்பதால் தவிர்த்துக்கொண்டு ஜெர்மனிக்கூடாக உதவிகளைச் செய்கிறோம் என்று அமரிக்க தூதர் சொன்ன பெரியதொரு உன்மையை அங்கே போட்டுடைத்தார் அமைச்சர்.


ஆக, அமெரிக்க கண்காணிப்பு ஜி.ரி.இசட். ஊடாகவும் செயல்படும். எங்களுடைய சிறிய கல்லூரிப் போராட்டம் அமெரிக்காவின் கண்காணிப்புக்குள்ளாகாதா என்ன?
இப்படிச் சொல்வதால் அமெரிக்கா கல்லூரியில் வந்து இறங்கிய கதை ஏதோ அளக்கப்போவதாக நினைக்க வேண்டாம். நேரே விசயத்துக்கு வருகிறேனே! தொடர்வேன்.. 








சிங்கள மக்களும் இனத்தேசியமும் ந.இரவீந்திரன்


சிங்கள மக்களும் இனத்தேசியமும்
ந.இரவீந்திரன்




தொழிலாளிவர்க்கம் வரலாற்று அரங்கில் புதிய சக்தியாகத் தோன்றிய முதல் களம் ஐரோப்;பாளூ அங்கு அவர்களது போராட்டங்கள் உக்கிரம் பெற்றபோது அந்தப் புதிய சக்திக்கான தத்துவம் தோற்றம் பெற்றது. மார்க்சியம் என்ற அத்தத்துவம் தொழிலாளி வர்க்க விடுதலையை வழங்குவதாக மட்டுமன்றி மனுக்குலப் பிணிகள் பலவற்றுக்கும் தீர்வு தரவல்லதாய் அமைந்தது. தனக்கெனச் சொத்து எதையும் கொண்டிராத தொழிலாளிவர்க்கம் தனது நிலைபேறுக்கும் தன் நலன் பெருக்கத்துக்கும் உழைப்பதாய் அல்லாமல், தனது இருப்பையும் அழிப்பதற்கான இயங்காற்றலை வெளிப்படுத்தியது. வர்க்க முறையை அழித்து ஒழித்து சமத்துவ சமூகம் படைப்பதே தனக்கான விடுதலைக்கும் உலகப் பிரச்சனைகளின் தீர்வுக்கும் ஒரேவழி என்பதை அந்தப் புதிய சக்திகாட்டியது. சோவியத் யூனியனில் அந்த வர்க்கத் தலைமையில் முக்கால் நூற்றாண்டுப் பயணம் சமத்துவம் நோக்கி முன்னேற இயலும் என்ற உதாரணத்தை வழங்கியது வாயிலாக ஐரோப்பா தனது தத்துவக்கண்டு பிடிப்புக்கு வலுச்சேர்த்தது. ஆயினும், மீண்டும் வெற்றிபெற்ற முதலாளித்துவம் ஐரோப்பாவை வரலாறுபடைக்கும் ஆற்றலிலிருந்து தூரப்படுத்தி விட்டுள்ளது.
புதிய வரலாறு படைக்கும் ஆற்றல் மீண்டும் ஆசியாவின் கரங்களுக்கு வர ஏற்றதாக புதிய சீpனம் உதயமானது. தொழிலாளி வர்க்க ஆட்சி நிலவிய சோவியத்தின் உதவியடன், விவசாயப் புரட்சியை முன்னெடுக்கும் புறநிலை நிலவிய சீனாவில் தொழிலாளிவர்க்கத் தத்துவத்தை சீனக் கொயூனிஸ்ட் கட்சியால் பிரயோகிக்க இயலுமாயிற்று. இதனைச் சாத்தியமாக்குவதற்கு முன்தேவையாக சீனாவில் நிலவிய வர்க்கங்கள் பற்றிய ஆய்வை மாஓ சேதுங் செய்தார்ளூ வர்க்க சக்திகளது இருப்பும் - உறவுகளும் மோதல்களும் அணிசேர்க்கைகளும், எனும் பலவகை நிலவரங்களை அலசி முன்னெடுத்த செயற்பாடுகள் வாயிலாகவே சீனப்புரட்சி வெறும் தேசிய விடுதலையாக அமைவதைக் கடந்து சமத்துவ சமூகம் படைப்பதற்கான தொழிலாளி வர்க்க அபிலாசை நோக்கி முன்னேற இயலுமாயிற்று.
வரலாறு நேர்கோட்டுப் பாதையில் செல்வதில்லைளூ வளைவு சுழிவுகளுடன் பல்திசை அலைக்கழிப்பு நிதர்சனம். இருபெரும் சோஷலிஸ நாடுகளான சோவியத் யூனியனும் சீனாவும் கோட்பாட்டு மோதலில் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பிளவுபடுத்தின. இந்தப் பிளவிலே வெறும் கோட்பாட்டுப் பிரச்சனை மட்டுந்தான் அடங்கியிருந்ததா? இல்லை, தேசிய உணர்வும் கலந்திருந்தது. அதெப்படி, தொழிலாளர் அணிக்குள் முதலாளித்துவத்தின் ஊடுருவலாக தேசியவாதம் உடறுத்ததா? இல்லை, தொழிலாளி வர்க்கத்;திடமும் தேசிய உணர்வு இருக்கிறது என்பதன் வெளிப்பாடே சோவியத் - சீன மோதல். அறுபதுகளில் சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ ஊடுருவலுடனான வலதுசாரித் திரிபுவாதத்தில் மூழ்கத் தொடங்கிவிட்டதாயினும் தொண்ணூறுகளில் கொர்ப்பச்சேவால் கலைக்கப்படும்;வரை தொழிலாளிவர்க்கக் கட்சியாக இருக்க முடிந்துள்ளது. தொழிலாளிவர்க்க இலட்சியத்தில் உறுதியாக இருந்த சோவியத் கொம்யூனிஸ்ட்டுகளிடமும் சீனதேச எதிர்படனான தேசிய உணர்வு இருந்தது.
அதனைவிடவும், மார்க்சியத்தைப் பாதுகாக்க முனைந்த சீனக்கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீனத்தேசியம் இருந்தது என்பதும் கவனிப்புக்குரியதுளூ தொழிலாளிவர்க்க சர்வதேச நோக்கு முனைப்புற்று இருந்திருப்பின் சோவியத் யூனியனைத் தொடர்ந்து நட்புச்சக்தியாக அரவணைத்தவாறு, வேறு வடிவத்தத்துவார்த்தப் போராட்டங்களை முன்னெடுத்திருக்க இயலும்ளூ சோவியத் திரிபுவாத முனைப்பை மேலும் உந்தித் தள்ளி அதன் சிதைவைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. ஒரு தசாப்தம் கடப்பதற்குள் ஆயுதப் போராட்டத்துக்குரிய அவசியத்தை வலியுறுத்திய சீனத்தரப்பு ஆயுதப்போராட்ட வடிவத்தை மட்டுமே போற்றும் வன்முறை வழிபாட்டு இடதுசாரித் திரிபுவாதத்துக்குள் சரிந்துவிட்டது. அதைச் சரிக்கட்ட முனையும் இன்றைய எத்தனிப்பில் வலதுசாரித் திரிபு சீனாவில் மேலோங்கியுள்ளது. அதற்காக, அன்று சோவியத்தை சிதைத்ததுபோல உலகத்தொழிலாளர் இயக்கம் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பது ஆபத்தானது. திரிபுவாதங்களை முறியடித்து தொழிலாளிவர்க்க அபிலாஷையை வென்றெடுக்க அவகாசம் இன்னமும் சீனாவுக்கு உள்ளது. முடியாமல் போய் அங்கேயும் கொம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டால் அது வேறுவிடயம்!
பிரச்சனை சோவியத் வழியா – சீன வழியா என உலகத் தொழிலாளர் இயக்கம் மல்லுக் கட்டியதில் உள்ளது. அவ்விரு நாடுகளது பாட்டாளிவர்க்க அணியினுள்ளேயே தேசியம் இருந்துள்ளது! அவர்கள், அவர்களுக்கான வழியில் சமத்துவத்தை அடைவர். ஏனைய தேசங்களில் பாட்டாளிவர்க்கக் கட்சிகள் மார்க்சிசம் - லெனினிசத்தைத் தத்தமது தேசங்களது வரலாற்றுப்போக்கைப் புரிந்துகொண்டு சமூகமாற்றம் சமத்துவம் நோக்கிச் செல்ல எவ்வாறு பிரயோகிக்கப்போகிறோம் என்பதே பிரச்சனை. இந்த இடைவெளிக்குள் மார்க்சியம் தோற்றுப் போனதாகப் பிதற்றியவர்களை மூடிப்;புதைத்துவிட்டு மார்க்சிய – லெனிசமே மக்கள் விடுதலைக்கான ஒரே மார்க்கம் என்பது இன்று மேலெழுந்துவிட்டது.
புது வரலாறு படைக்கும் முனைப்பில் இன்று துடிப்படன் முன்னணிப்பாத்திரம் வகிக்கும் தென்னமெரிக்க மார்க்சியர்களின் அனுபவம் 'தேசியம் முதலாளித்துவத்துக்கு மட்டும் உரியதல்ல, அனைத்து வர்க்கத்துக்கும் உரியது' என்பதாகும். முதலாளித்தவ சமூகமுறையே தேசியத்தைக் கட்டமைத்ததுளூ ஆயினும், பாட்டாளிவர்க்கம் உள்ளிட்ட அனைத்து சமூக சக்திகளிடமும் தேசிய உணர்வு உண்டு. அதேவேளை, வேறெந்த வர்க்கத்தைவிடவும் பாட்டாளிவர்க்கமே அனைத்து வர்க்க பேதங்களையும் தகர்க்கும் வரலாற்றுப் பணியின்தலைமை சக்தி என்றவகையில் சர்வதேசவாதம் அதற்கான அடிப்படைப் பண்பாக அமைந்துள்ளது என்பதும் கவனிப்புக்குரியது. அத்தகைய சர்வதேசவாதம் அதனிடம் முனைப்புற அதிகவாய்ப்புள்ள சந்தர்ப்பத்தை மனங்கொள்ளப்போய், பாட்டாளிவர்க்கத்திடம் தேசியம் செயலாற்றும் எனக் காணத்தவறிய கொம்யூனிஸ்ட் கட்சியின் கடந்தகாலத் தவறு இனி இடம்பெற அவசியமில்லை.

'சிங்கள மக்களும் இனத் தேசியமும்' என்ற பேசுபொருளுக்கான மேற்படி முன்னுரை ஓரளவுக்கு விடயத்தை வெளிப்படுத்தியிருக்கும். சிங்களப் பாட்டாளி வர்க்கத்திடம் இலங்கைத் தேசிய உணர்வு சர்வதேசவாத நோக்குடன் உள்ள அதேவேளை சிங்கள இனத்தேசிமும் தாராளமாய் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் தொழிலாளி வர்க்கத்துக்கு அவசியமானதாய் விருத்தியாக்க வேண்டிய சர்வதேசவாதத்தைக் காட்டிலும் சிங்கள இனத்தேசியமே சிங்களத் தொழிலாளர்களிடம் முனைப்பாகியுள்ளது. அநேகமாய் இலங்கைத் தேசியம் என்பதாக சிங்கள இனத்தேசியத்தையே கருதுகிற போக்கு சிங்களத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய சக்திகளிடமும் உள்ளது.

அறுபதுகளில் கொம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் கோட்பாட்டு விவாதத்துடன் சோவியத் - சீனப் பிளவு எற்பட்டதைத்தொடர்ந்து இலங்கையிலும் மொஸ்க்கோ சார்பு – பீக்கிங்கார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள் என இரண்டு கட்சிகள் செயற்பட்டமையை அறிவோம். பாராளுமன்றத்;தின் வாயிலாகவே சோசலிஸத்தை அடைய இயலும் என்ற மொஸ்க்கோ சார்பு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, அதற்கு ஏற்றவகையில் சிங்கள இனவாதத்தைக் கையேற்பதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கவில்லை. இடதுசாரி சிங்கள இனத்தேசியம் என்ற ஏற்பபடைய அரசியல் வடிவத்தைக் கடந்து சிங்கள இனவாதத்தை அந்தக்கட்சி கையேற்பதற்கு ஏற்றதாக தமிழ்த் தேசியம் எகாதிபத்தியத்தோடு பலவகைகளில் கைகோர்த்து இயங்கியது,

சிங்கள இடதுசாரிகள் தேசிய முதலாளிவர்க்கத்துக்கு வழங்கிய ஆதரவு மூலுமாய் 1956 – 1965 களில் தேசிய உடைமையாக்கும் கொள்கை பின்பற்றப்பட்டபோது இடதுசாரித் தமிழ்த்தேசியர்கள் திழரசுக்கட்சியின் தலைமையில் இயங்கினார்கள்ளூ அத்தகைய முற்போக்கான எகாதிபத்திய எதிர்ப்புப் பொருளாதாரக் கொள்ளையை முழு அளவில் இடதுசாரித் தமிழ்த் தேசியர்கள் எற்றுக் கொள்ளவில்லை. தமிழின நலன் என்றபேரில் பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் தளங்கள் வடக்கு – கிழக்கில் இருக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தை தமிழரசுக் கட்சி வெளிப்படுத்தியிருந்தது. சிலவிடயங்களில் அந்த தேசிய நலன்சார்ந்த முற்போக்கு அரசாங்கத்தைத் தமிழரசுக்கட்சி ஆதரித்த போதிலும், இவ்வகையிலான விலகல் அப்போதே இருந்தத. அதைவிடவும் கல்வியில் தேசியமொழிகளான சிங்களம் - தமிழ் பயிற்று மொழிகளாய் இருக்கவேண்டும் என்ற முற்போக்காளர்களது நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியர்கள் எதிர்த்தனர்ளூ ஆங்கிலமே பயிற்றுமொழியாய்த் தொடரவேண்டும் என்றனர்.
இருந்த முற்போக்குக் குணாம்சங்களையும் இழந்து 1965 இன் பின்னர் ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான பிற்கோக்கு நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசியம் எடுத்துக்கொண்டது. முன்னதாக இடதுசாரித் தமிழ்தேசியம் மேவியிருந்த வேளையில் செய்துகொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்த ஐ.தே.க. உடன் டட்லி – செல்வாஒ ப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஐ.தே.க. அரசாங்கம் முழுமையாக எகாதிபத்திய அடிவருடித்தனமானது. தேசிய நலன்களோடு பூரண உடன்பாடுகொள்ளாத தமிழரசுக்கட்சி எகாதிபத்தியத்துக்கு நாட்டைக்காட்டிக்கொடுக்கும் சக்தி என்ற உணர்வோடு டட்லி – செல்வா ஒப்பந்தம் சிங்களத்தொழிலாளி வர்க்கத்தால் எதிர்க்கப்பட்டது. அந்த எதிர்ப்பு முற்போக்கு உணர்வைக் கடந்து சிங்கள இனவாதம் ஆகும் வகையில் 'மசாலா தோசை வடை எப்பா (வேண்டாம்)' என்று தமிழ் மக்களுக்கு எதிரானதாக கோசமாக்கப்பட்டு உர்வலங்கள் நடாத்தியது சோவியத்சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி.
சிங்களப் பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பான்மையான புரட்சிகர சக்திகள் சண் தலைமையிலான இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) அணியில் திரண்டிருந்தார்கள் என்பதே உண்மை. ஒரு தமிழ்க் கொம்யூனிஸ்ட் தலைமையில் மிகப்பெரும்பான்மையான சிங்களத் தொழிலாளர்கள் அணிதிரண்டனர் என்கிறபோது சிங்களத் தேசியம் அவர்களிடம் அதிகமாய் இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதைவிட, அறுபதுகளின் பிற்கூற்றில் றோஹண விஜேவீரவின் தலைமையில் எற்பட்ட பிளவு தமிழர் தலைமையை நிராகரிக்கும் இனவாத உணர்வுடையதாயும் (வேறு கோட்பாட்டுக் காரணங்களும் உள்ளிட்டதாக) அமைந்திருந்த போது சிங்களத் தொழிலாளிவர்க்கம் சண் தலைமையிலான தொழிற்சங்கங்களிNலுயே தொடரந்து நீடித்தனர்ளூ தொழிலாளர் ஆதரவைப் பெறாத சிங்கள இளைஞர்களின் அரசியலமை;பாகவே றோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. அமையக் கூடியதாயிற்றுளூ எனும்போது சிங்களத் தேசிய உணர்வு அவ்ர்களிடம் மேவியிருந்தது என்று எப்படிக் கூறமுடியும்?
ஒரு நேரடி அனுபவம் இங்கு சொல்லப்படுவது அவசியம். சண் தலைமையிலான இ.கொ.க. இன் வாலிபர்சங்க மாநாடு 1976 இல் எட்டியாந்தோட்டையில் இடம்பெற்றது. ஆயிரக் கணக்கான கொம்யூனிஸ்ட் வாலிபர் சங்க உறுப்பினர்கள் நாடுபூராவிலும் இருந்து வந்து கலந்துகொண்ட மிகப்பிரமாண்டமான மாநாடு அது. அங்கு சிறப்புரையாற்றிய சண்முக தாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, 'புரட்சிகரக் கட்சிக்கு பெரும்பான்மையினரான சிங்களமக்களின் பிரதிநிதி ஒருவர் தலைமை தாங்காதமையினால்தான் கட்சி மேலும் வளர இயலாது இருக்கிறதா? என்பதாகும். பாட்டாளிவர்க்கப் புரட்சிக்குத் தேசிய உணர்வு இருக்க இயலாதது பற்றியும் 'தொழிலாளர்களுக்கு என ஒரு தேசம் கிடையாது' என்பதையும் நிறையவே சண் விளக்கிப் பேசினார். இருப்பினும் சிங்களத் தொழிலாளர் அணி விரைவாக சண்முகதாசனை விட்டுவிலகி, அநாதரவான நிலையில் நாட்டைவிட்டு வெளியேற அவர் நிர்ப்பந்திக்கப்படும் அவலம் நேர்ந்தது.
வெளியேறுகிற என்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் தேசியத்தின் ஆயுதப்போரட்டத்தை வன்முறை வழிபாட்டுப் பக்திவிசுவாசத்துடன் சண் ஆதரித்திருந்தார்ளூ அது விரக்தியின் உச்சத்தில் வந்த ஞானம். இதுவரை இடதுசாரியுணர்வடைய தமிழ்த்தேசியத்தைக்கூட ஏற்க மறுத்து, சிங்களத் தேசியமாயே கருதப்பட்ட இலங்கைத் தேசியத்துக்காக சண் மனப்பூர்வமாகக் கருத்தியல் விவாதங்;களை நடாத்திருந்தார். அவர்வரையில் சிங்கள இனவாதத்துக்கு விட்டுக் கொடுக்காது, அனைத்து இனங்களும் சம உரிமைகளுடன் வாழும் இலங்கைத் தேசியத்துக்காகவே கருத்தியல் போராளியாக அவர் செயற்பட்டார். தமிழினவாதம் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், கட்சி சார்ந்த எந்தவொரு பேச்சும் எழுத்தும் சிங்கள மக்களைச் சந்தேகங்கொள்ள இடமளி;ககாத இலங்கைத் தேசிய வகைப்பாடு கொண்டதாயிருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். அவர் மட்டுமன்றி, ஒரு கட்டம்வரை அவர் தலைமையில் இயங்கிய அனைத்துத் தமிழ்க் கொம்யூனிஸ்ட் களினது நிலைப்பாடும் அவ்வாறுதான் அமைந்திருந்தது.
ஐஐ
தமிழினத் தேசியம் என்பதே இனவாதம் ஆகிவிடும் என்பதாகக் கருதி இலங்கைத் தேசியம் என்பதற்காக சண் தலைமையிலான இ.தொ.க. செயற்பட்டமைக்கு சிங்கள இனவாதம் எற்கப்பட்டமை காரணமல்ல என்பது தெளிவு. சிங்கள மக்கள் தமது பண்பாடு - இறைமை ஆகியவற்றை அழிக்கும் சக்தியாக இந்தியத் தமிழினத்தை (குறிப்பாகப் புலிக்கொடி ஏந்திய சோழர்களை) கருதுவது குறித்தது சண் எப்போதும் வலியுறுத்திவந்தார். சிங்களப் பண்பாட்டின் தொட்டிலான அநுராதபுரமும், பின்னர் சோழர்களால் உருவாக்கப்பட்டதைக் கையேற்று தமக்கானதாய் வளர்த்த பொலநறுவையும் சோழர்களாலேயே அழிக்கப்பட்டது. என்பதாக சிங்கள வரலாறு கூறும். வறிய நிலையிலும் சுற்றுலா மேற்கொள்ளும் சிங்கள மக்களுக்கு   'தமிழர்களால் அழிக்கப்பட்ட' சிங்களப் பண்பாட்டுச் சின்னங்கள் காட்சிப் பொருளாகக் காட்டப்பட்டு விளக்கப்படுவதுண்டு.
முன்னதாக அநுராதபுரம் 'சோழ இளவலான' எல்லாளனால் 'ஆக்கிரமிக்கப்பட்டு' நாற்பது ஆண்டுகள் ஆளப்பட்டது. 'வடக்கே தமிழனும் தெற்கில் கடலும் நெருக்கும் போது எப்படி நீட்டி நிமிர்ந்து படுக்க இயலும்' என்று முடங்கிப்படுத்த துட்டகைமுனு ஒருநாள் பெரும் படை திரட்டிவந்து எல்லாளனைப் போர்க்களத்தில் முகங்கொண்டான். ' நீயா – நானா ஆளப்போவது எனத்தீர்மானிக்கும் ஒரு போராட்டத்துக்காக இருதரப்பிலுமுள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் சாக வேண்டுமா? நாமிருவரும் மோதலாமே?' எனக்கேட்ட கைமுனுவின் நியாயத்தை ஏற்றுத் தனிப்போர் நிகழ்த்தி மாண்டான் எல்லாளன். வீழ்ந்;துபட்ட அந்த மூத்த வீரனை மதித்து, சமாதியெழுப்பி, அனைவரும் மரியாதை செலுத்த வேண்டுமெனக் கட்டளை பிறப்பித்தான் கைமுனு. முன்னதாகத் தனது படைதிரட்டும் வளர்ச்சியில் கொல்லப்பட்ட வீரர்களை நினைத்து வருந்துகிறவனாயும் கைமுனு இருந்துள்ளான்.
எல்லாளனின் நேர்மையான ஆட்சிபற்றியும், மேற்படியான வரலாறுகளையும், பின்னாலே பௌத்தம் பல்கிப்பெருக கைமுனு முன்னெடுத்த பணிகளையும் மகாவம்சம் விலாவாரியாகச் சொல்லியுள்ளது. அதற்குத் தமிழ் எதிர்ப்பு அவசியமில்லைளூ பௌத்தம் விருத்தியாகவேண்டும் என்பதே மகாவம்சத்தின் அக்கறை. நவீன சமூக உருவாக்கம்வரைகூட சோழர் எதிர்ப்பு சிங்கள மக்களுக்கு சொல்லப்பட்டு வந்தேயல்லாமல் தமிழ் எதிர்ப்பு சிங்கள வரலாற்றியலாளர்களிடம் இருந்ததில்லை. சிங்கள நடனம், நாட்டுக்கூத்து, இலக்கிய வடிவங்கள், இலக்கண அமைப்பு என அனைத்துத் துறைகளிலும் பாளி – சமஸ்கிருதத்திடம் பெற்றுக்கொண்டதைவிட அதிகமாகவே தமிழிடமிருந்து சிங்களம் பெற்றுக் கொண்டுள்ளது. மொழியியல் ரீதியானதும் பண்பாட்டு அடிப்படையிலானதுமான தமிழ் ஆதிக்கம் சிங்களத்துக்குப் பிரச்சினையில்லைளூ பௌத்தம் வாயிலாக தமது மக்களை ஆள உள்ள உரிமையில் சோழர்கள் தலையிட்டமையே பிரச்சனை சிங்கள மன்னர்கள் பெரும் பாலும் தமக்கான பட்டத்து ராணிகளை பாண்டியர்களிடமிருந்தே பெற்றார்கள்.
பேரரசான சோழர்களுடனான மோதலில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அச்சுறுத்தல் சிங்களவருக்கு இருந்தமை பழைய வரலாறு, நவீன வரலாற்றில் பெரும்பான்மை ஜனநாயகம் ஆட்சியாளரைத் தீர்மானிக்க இயலுமாயுள்ளபோது எழுபத்தைந்து வீதமாயுள்ள சிங்களத்தரப்பில் பெரு முதலாளிவர்க்க ஐ.தே.க.வும் தேசிய முதலாளிவர்க்க சிறீலங்கா சதந்திரக் கட்சியும் ஆட்சிக்கு மாறி மாறி வருவதற்காக இனவாதத்தைத் தாரளமாயே பயன்படுத்திக்கொள்டன. அந்த இனவாதத் தீவிரம் சிங்களத் தொழிலாளிவர்க்கத்திடமும் சுவறுவதற்கு வாய்ப்பாக தமிழ்த்தேசியம் சொந்த மண்ணில் நட்பு சக்திகளைத் தேடுவதைவிட்டு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் உறவுகொள்ளத் துடிப்பது அமைந்தது. எப்படியோ, சிங்கள மக்களிடம் இலங்கைத்தேசியம் என்பது மருந்துக்கும் இல்லாமல் போய்ச் சிங்கள இனத்தேசியமே முழுதாக நிறைந்துபோயுள்ளது என்பது மட்டும் உண்மை. எல்லோருமே பௌத்த – சிங்களப் பேரினவாதத்தை எற்பவர்கள் இல்லையென்றாலும் சிங்கள இனத்தேசியம் காரணமாய்ப் பேரினவாத ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாதவர்களாயுள்ளனர். பௌத்தமும் மக்களை ஒடுக்க உதவும் மதமாயினும் புத்தரின் கோட்பாடுகளின் அடிப்படை நல்ல அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருப்பது காரணமாய்ச் சிங்கள மக்களிடம் சிறந்த பண்புகள் அமைந்திருக்கக் காணலாம். இன்றைய பேரினவாதத்திடம் அந்த நல்ல அம்சங்களின் எந்த ஒரு கூறையும் காண இயலாது.
ஐஐஐ
இன்றைய கேடுகெட்ட பௌத்த - சிங்களப் பேரினவாத ஆளுகைக்குள் எல்லாளன் - கைமுனு வரலாற்றின் மீட்டுருவாக்கம் எவ்வாறு அமையும்?  துட்டகைமுனுவின் பெரும்படை முன்னேறி வருவதை அறிந்த எல்லாளன் தன்னைப் பாதுகாக்க மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைக் கேடயமாகச் சூழத் தூக்கியெடுத்துக்கொண்டு ஓடியோடி முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிப்போனான்.  இனி முடியாது என்ற நிலையில் எல்லோரையும் கண்களை மூடியிருக்கப் பணித்துவிட்டு உயிர்ப்பிச்சை கேட்டு கைமுனுவின் படையிடம் சரணடைந்தான்.  எல்லாளன் அகப்பட்டதை படையணி கைமுனுவிடம் அறிவித்ததுளூ  வெளிநாட்டில் இருந்தவாறு அதைக் கேட்டறிந்தவன் ஓடோடி வந்து தாய் மண்ணை முத்தமிட்டான்.  எக்காளமிட்டு தாண்டவமாடி எல்ளனின் மார்பில் ஓங்கியுதைத்தான்.  தலையைப்பந்தாடி மண்ணில் சாய்த்தான்.  போராட்டத்தையும் சொந்த மக்களையும் கொச்சைப்படுத்திய எல்லாளனை அவமதித்த அந்த மே பதினெட்டு நாளை ஆண்டாண்டு தோறும் கொண்டாடும் குதூகலிப்பில் மனுக்குலத்தையும் வரலாற்றையும் அவமதிப்பவனானகக் கைமுனு!
வரலாற்று நாயகன் கைமுனு இந்தக் கொலைவெறியர்களை மன்னிப்பானாகளூ  எல்லாளன் சமாதியில் சாந்தி நிலவுக!!
ஐஏ
மார்க்சியம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என எழுப்பிய கோசம் லெனினிசத்தால் 'உலகததொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களை ஒன்று சேருங்கள்'  என வளர்க்கப்பட்டது.  இன்றைய விடுதலையை நாடும் சக்திகளுக்கு வர்க்க ஒடுக்குமுறை மட்டும் முன்னால் இருக்கவில்லைளூ  ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் உள்ளன என்பதையே லெனினிசன் இவ்வகையில் காட்டியுள்ளதுளூ  ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் பிரிந்துசெல்லப் போராட அவசியமில்லை.  அவ்வாறு பிரிய முனைவது வேறொரு ஆக்கிரமிப்பாளருக்கு உதவுவதாய் ஆகலாம்.  வேறு வடிவங்களில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க இயலும்.  கடந்த காலத்தில் தமிழ்த் தேசியம் ஐந்தாம் படையாக இருந்து அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு உதவியமை விடுதலைக்கு வழிவகுக்கவில்லை என்பதைத் தெளிவாக அனுபவித்துவிட்டோம்.  இனியும் அந்நியருக்கு உதவுவதில் காலத்தை வீணாக வேண்டுமா?
அவ்வாறில்லாமல் சிங்கள மக்களில் நட்பு சக்தியை தேடமுடியும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்க முடியும்?  இதற்கு யாழ்ப்பாணத்தில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் தந்த அனுபவம் போதுமானது.  ஒதுக்கப்படும் தேசம் போல மருதத்திணையால் ஒடுக்கப்பட்ட சாதிகளான தீண்டாமைக்கொடுமைக்கு உட்பட்ட மக்கள் அதே ஒடுக்கும் திணையிலிருந்து வந்த வெள்ளாளரையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு போராடியிருக்கிறார்கள்.  ஒடுக்கப்பட்ட மக்கள் 'சமூக – பண்பாட்டு ஏகாதிபத்தியமான' பிராமணியத்தாலும் சைவசித்தாந்த வெள்ளாளரியத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்ட ஒருவகைத் தேசங்களே.  இது குறித்துத் தனியாகப் பேசவேண்டும்.
சமூக – பண்பாட்டு ஒடுக்குமுறை நவீன தேசிய இனங்களுக்கும் ஏதோவொருவகையில் பொருந்தும்.  சாதியத்தகர்ப்பில் போல இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்திலும் பண்பாட்டுப் புரட்சி அம்சங்கள் இணைக்கப்பட்டாக வேண்டும்.  முழுதாக இனத்தேசியத்தில் மூழ்கிவிட்ட சிங்களத் தொழிலாளி வர்க்கத்தையும் சிங்கள மக்களையும் விடுதலை மார்க்கத்தில் வென்றெடுக்க ஏற்ற பண்பாட்டு இயக்க செயல் வடிவங்களை நாம் தேட வேண்டும்.  எமது தேசிய இன விடுதலைக்கு மட்டுமன்றி வர்க்க சமூகத்தகர்ப்புக்கும் அது அவசியம்.  ஒடுக்கப்படும் தேசமோ சாதியோ சமூக வர்க்கமாயுள்ளனளூ  அவை, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்தின் சுரண்டப்படும் வர்க்கங்களோடு ஐக்கியப்பட உள்ள வாய்ப்பைத் தவறவிட இயலாது!  ஆக்கிரமிப்பாளர்கள் வலு நேர்த்தியோடு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திவிடுகிறார்கள்.  நாம் என்ன செய்யப்போகிறோம்?