சிங்கள மக்களும் இனத்தேசியமும்
ந.இரவீந்திரன்
தொழிலாளிவர்க்கம் வரலாற்று அரங்கில் புதிய சக்தியாகத் தோன்றிய முதல் களம் ஐரோப்;பாளூ அங்கு அவர்களது போராட்டங்கள் உக்கிரம் பெற்றபோது அந்தப் புதிய சக்திக்கான தத்துவம் தோற்றம் பெற்றது. மார்க்சியம் என்ற அத்தத்துவம் தொழிலாளி வர்க்க விடுதலையை வழங்குவதாக மட்டுமன்றி மனுக்குலப் பிணிகள் பலவற்றுக்கும் தீர்வு தரவல்லதாய் அமைந்தது. தனக்கெனச் சொத்து எதையும் கொண்டிராத தொழிலாளிவர்க்கம் தனது நிலைபேறுக்கும் தன் நலன் பெருக்கத்துக்கும் உழைப்பதாய் அல்லாமல், தனது இருப்பையும் அழிப்பதற்கான இயங்காற்றலை வெளிப்படுத்தியது. வர்க்க முறையை அழித்து ஒழித்து சமத்துவ சமூகம் படைப்பதே தனக்கான விடுதலைக்கும் உலகப் பிரச்சனைகளின் தீர்வுக்கும் ஒரேவழி என்பதை அந்தப் புதிய சக்திகாட்டியது. சோவியத் யூனியனில் அந்த வர்க்கத் தலைமையில் முக்கால் நூற்றாண்டுப் பயணம் சமத்துவம் நோக்கி முன்னேற இயலும் என்ற உதாரணத்தை வழங்கியது வாயிலாக ஐரோப்பா தனது தத்துவக்கண்டு பிடிப்புக்கு வலுச்சேர்த்தது. ஆயினும், மீண்டும் வெற்றிபெற்ற முதலாளித்துவம் ஐரோப்பாவை வரலாறுபடைக்கும் ஆற்றலிலிருந்து தூரப்படுத்தி விட்டுள்ளது.
புதிய வரலாறு படைக்கும் ஆற்றல் மீண்டும் ஆசியாவின் கரங்களுக்கு வர ஏற்றதாக புதிய சீpனம் உதயமானது. தொழிலாளி வர்க்க ஆட்சி நிலவிய சோவியத்தின் உதவியடன், விவசாயப் புரட்சியை முன்னெடுக்கும் புறநிலை நிலவிய சீனாவில் தொழிலாளிவர்க்கத் தத்துவத்தை சீனக் கொயூனிஸ்ட் கட்சியால் பிரயோகிக்க இயலுமாயிற்று. இதனைச் சாத்தியமாக்குவதற்கு முன்தேவையாக சீனாவில் நிலவிய வர்க்கங்கள் பற்றிய ஆய்வை மாஓ சேதுங் செய்தார்ளூ வர்க்க சக்திகளது இருப்பும் - உறவுகளும் மோதல்களும் அணிசேர்க்கைகளும், எனும் பலவகை நிலவரங்களை அலசி முன்னெடுத்த செயற்பாடுகள் வாயிலாகவே சீனப்புரட்சி வெறும் தேசிய விடுதலையாக அமைவதைக் கடந்து சமத்துவ சமூகம் படைப்பதற்கான தொழிலாளி வர்க்க அபிலாசை நோக்கி முன்னேற இயலுமாயிற்று.
வரலாறு நேர்கோட்டுப் பாதையில் செல்வதில்லைளூ வளைவு சுழிவுகளுடன் பல்திசை அலைக்கழிப்பு நிதர்சனம். இருபெரும் சோஷலிஸ நாடுகளான சோவியத் யூனியனும் சீனாவும் கோட்பாட்டு மோதலில் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பிளவுபடுத்தின. இந்தப் பிளவிலே வெறும் கோட்பாட்டுப் பிரச்சனை மட்டுந்தான் அடங்கியிருந்ததா? இல்லை, தேசிய உணர்வும் கலந்திருந்தது. அதெப்படி, தொழிலாளர் அணிக்குள் முதலாளித்துவத்தின் ஊடுருவலாக தேசியவாதம் உடறுத்ததா? இல்லை, தொழிலாளி வர்க்கத்;திடமும் தேசிய உணர்வு இருக்கிறது என்பதன் வெளிப்பாடே சோவியத் - சீன மோதல். அறுபதுகளில் சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ ஊடுருவலுடனான வலதுசாரித் திரிபுவாதத்தில் மூழ்கத் தொடங்கிவிட்டதாயினும் தொண்ணூறுகளில் கொர்ப்பச்சேவால் கலைக்கப்படும்;வரை தொழிலாளிவர்க்கக் கட்சியாக இருக்க முடிந்துள்ளது. தொழிலாளிவர்க்க இலட்சியத்தில் உறுதியாக இருந்த சோவியத் கொம்யூனிஸ்ட்டுகளிடமும் சீனதேச எதிர்படனான தேசிய உணர்வு இருந்தது.
அதனைவிடவும், மார்க்சியத்தைப் பாதுகாக்க முனைந்த சீனக்கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீனத்தேசியம் இருந்தது என்பதும் கவனிப்புக்குரியதுளூ தொழிலாளிவர்க்க சர்வதேச நோக்கு முனைப்புற்று இருந்திருப்பின் சோவியத் யூனியனைத் தொடர்ந்து நட்புச்சக்தியாக அரவணைத்தவாறு, வேறு வடிவத்தத்துவார்த்தப் போராட்டங்களை முன்னெடுத்திருக்க இயலும்ளூ சோவியத் திரிபுவாத முனைப்பை மேலும் உந்தித் தள்ளி அதன் சிதைவைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. ஒரு தசாப்தம் கடப்பதற்குள் ஆயுதப் போராட்டத்துக்குரிய அவசியத்தை வலியுறுத்திய சீனத்தரப்பு ஆயுதப்போராட்ட வடிவத்தை மட்டுமே போற்றும் வன்முறை வழிபாட்டு இடதுசாரித் திரிபுவாதத்துக்குள் சரிந்துவிட்டது. அதைச் சரிக்கட்ட முனையும் இன்றைய எத்தனிப்பில் வலதுசாரித் திரிபு சீனாவில் மேலோங்கியுள்ளது. அதற்காக, அன்று சோவியத்தை சிதைத்ததுபோல உலகத்தொழிலாளர் இயக்கம் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பது ஆபத்தானது. திரிபுவாதங்களை முறியடித்து தொழிலாளிவர்க்க அபிலாஷையை வென்றெடுக்க அவகாசம் இன்னமும் சீனாவுக்கு உள்ளது. முடியாமல் போய் அங்கேயும் கொம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டால் அது வேறுவிடயம்!
பிரச்சனை சோவியத் வழியா – சீன வழியா என உலகத் தொழிலாளர் இயக்கம் மல்லுக் கட்டியதில் உள்ளது. அவ்விரு நாடுகளது பாட்டாளிவர்க்க அணியினுள்ளேயே தேசியம் இருந்துள்ளது! அவர்கள், அவர்களுக்கான வழியில் சமத்துவத்தை அடைவர். ஏனைய தேசங்களில் பாட்டாளிவர்க்கக் கட்சிகள் மார்க்சிசம் - லெனினிசத்தைத் தத்தமது தேசங்களது வரலாற்றுப்போக்கைப் புரிந்துகொண்டு சமூகமாற்றம் சமத்துவம் நோக்கிச் செல்ல எவ்வாறு பிரயோகிக்கப்போகிறோம் என்பதே பிரச்சனை. இந்த இடைவெளிக்குள் மார்க்சியம் தோற்றுப் போனதாகப் பிதற்றியவர்களை மூடிப்;புதைத்துவிட்டு மார்க்சிய – லெனிசமே மக்கள் விடுதலைக்கான ஒரே மார்க்கம் என்பது இன்று மேலெழுந்துவிட்டது.
புது வரலாறு படைக்கும் முனைப்பில் இன்று துடிப்படன் முன்னணிப்பாத்திரம் வகிக்கும் தென்னமெரிக்க மார்க்சியர்களின் அனுபவம் 'தேசியம் முதலாளித்துவத்துக்கு மட்டும் உரியதல்ல, அனைத்து வர்க்கத்துக்கும் உரியது' என்பதாகும். முதலாளித்தவ சமூகமுறையே தேசியத்தைக் கட்டமைத்ததுளூ ஆயினும், பாட்டாளிவர்க்கம் உள்ளிட்ட அனைத்து சமூக சக்திகளிடமும் தேசிய உணர்வு உண்டு. அதேவேளை, வேறெந்த வர்க்கத்தைவிடவும் பாட்டாளிவர்க்கமே அனைத்து வர்க்க பேதங்களையும் தகர்க்கும் வரலாற்றுப் பணியின்தலைமை சக்தி என்றவகையில் சர்வதேசவாதம் அதற்கான அடிப்படைப் பண்பாக அமைந்துள்ளது என்பதும் கவனிப்புக்குரியது. அத்தகைய சர்வதேசவாதம் அதனிடம் முனைப்புற அதிகவாய்ப்புள்ள சந்தர்ப்பத்தை மனங்கொள்ளப்போய், பாட்டாளிவர்க்கத்திடம் தேசியம் செயலாற்றும் எனக் காணத்தவறிய கொம்யூனிஸ்ட் கட்சியின் கடந்தகாலத் தவறு இனி இடம்பெற அவசியமில்லை.
ஐ
'சிங்கள மக்களும் இனத் தேசியமும்' என்ற பேசுபொருளுக்கான மேற்படி முன்னுரை ஓரளவுக்கு விடயத்தை வெளிப்படுத்தியிருக்கும். சிங்களப் பாட்டாளி வர்க்கத்திடம் இலங்கைத் தேசிய உணர்வு சர்வதேசவாத நோக்குடன் உள்ள அதேவேளை சிங்கள இனத்தேசிமும் தாராளமாய் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் தொழிலாளி வர்க்கத்துக்கு அவசியமானதாய் விருத்தியாக்க வேண்டிய சர்வதேசவாதத்தைக் காட்டிலும் சிங்கள இனத்தேசியமே சிங்களத் தொழிலாளர்களிடம் முனைப்பாகியுள்ளது. அநேகமாய் இலங்கைத் தேசியம் என்பதாக சிங்கள இனத்தேசியத்தையே கருதுகிற போக்கு சிங்களத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய சக்திகளிடமும் உள்ளது.
அறுபதுகளில் கொம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் கோட்பாட்டு விவாதத்துடன் சோவியத் - சீனப் பிளவு எற்பட்டதைத்தொடர்ந்து இலங்கையிலும் மொஸ்க்கோ சார்பு – பீக்கிங்கார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள் என இரண்டு கட்சிகள் செயற்பட்டமையை அறிவோம். பாராளுமன்றத்;தின் வாயிலாகவே சோசலிஸத்தை அடைய இயலும் என்ற மொஸ்க்கோ சார்பு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, அதற்கு ஏற்றவகையில் சிங்கள இனவாதத்தைக் கையேற்பதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கவில்லை. இடதுசாரி சிங்கள இனத்தேசியம் என்ற ஏற்பபடைய அரசியல் வடிவத்தைக் கடந்து சிங்கள இனவாதத்தை அந்தக்கட்சி கையேற்பதற்கு ஏற்றதாக தமிழ்த் தேசியம் எகாதிபத்தியத்தோடு பலவகைகளில் கைகோர்த்து இயங்கியது,
சிங்கள இடதுசாரிகள் தேசிய முதலாளிவர்க்கத்துக்கு வழங்கிய ஆதரவு மூலுமாய் 1956 – 1965 களில் தேசிய உடைமையாக்கும் கொள்கை பின்பற்றப்பட்டபோது இடதுசாரித் தமிழ்த்தேசியர்கள் திழரசுக்கட்சியின் தலைமையில் இயங்கினார்கள்ளூ அத்தகைய முற்போக்கான எகாதிபத்திய எதிர்ப்புப் பொருளாதாரக் கொள்ளையை முழு அளவில் இடதுசாரித் தமிழ்த் தேசியர்கள் எற்றுக் கொள்ளவில்லை. தமிழின நலன் என்றபேரில் பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் தளங்கள் வடக்கு – கிழக்கில் இருக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தை தமிழரசுக் கட்சி வெளிப்படுத்தியிருந்தது. சிலவிடயங்களில் அந்த தேசிய நலன்சார்ந்த முற்போக்கு அரசாங்கத்தைத் தமிழரசுக்கட்சி ஆதரித்த போதிலும், இவ்வகையிலான விலகல் அப்போதே இருந்தத. அதைவிடவும் கல்வியில் தேசியமொழிகளான சிங்களம் - தமிழ் பயிற்று மொழிகளாய் இருக்கவேண்டும் என்ற முற்போக்காளர்களது நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியர்கள் எதிர்த்தனர்ளூ ஆங்கிலமே பயிற்றுமொழியாய்த் தொடரவேண்டும் என்றனர்.
இருந்த முற்போக்குக் குணாம்சங்களையும் இழந்து 1965 இன் பின்னர் ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான பிற்கோக்கு நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசியம் எடுத்துக்கொண்டது. முன்னதாக இடதுசாரித் தமிழ்தேசியம் மேவியிருந்த வேளையில் செய்துகொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்த ஐ.தே.க. உடன் டட்லி – செல்வாஒ ப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஐ.தே.க. அரசாங்கம் முழுமையாக எகாதிபத்திய அடிவருடித்தனமானது. தேசிய நலன்களோடு பூரண உடன்பாடுகொள்ளாத தமிழரசுக்கட்சி எகாதிபத்தியத்துக்கு நாட்டைக்காட்டிக்கொடுக்கும் சக்தி என்ற உணர்வோடு டட்லி – செல்வா ஒப்பந்தம் சிங்களத்தொழிலாளி வர்க்கத்தால் எதிர்க்கப்பட்டது. அந்த எதிர்ப்பு முற்போக்கு உணர்வைக் கடந்து சிங்கள இனவாதம் ஆகும் வகையில் 'மசாலா தோசை வடை எப்பா (வேண்டாம்)' என்று தமிழ் மக்களுக்கு எதிரானதாக கோசமாக்கப்பட்டு உர்வலங்கள் நடாத்தியது சோவியத்சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி.
சிங்களப் பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பான்மையான புரட்சிகர சக்திகள் சண் தலைமையிலான இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) அணியில் திரண்டிருந்தார்கள் என்பதே உண்மை. ஒரு தமிழ்க் கொம்யூனிஸ்ட் தலைமையில் மிகப்பெரும்பான்மையான சிங்களத் தொழிலாளர்கள் அணிதிரண்டனர் என்கிறபோது சிங்களத் தேசியம் அவர்களிடம் அதிகமாய் இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதைவிட, அறுபதுகளின் பிற்கூற்றில் றோஹண விஜேவீரவின் தலைமையில் எற்பட்ட பிளவு தமிழர் தலைமையை நிராகரிக்கும் இனவாத உணர்வுடையதாயும் (வேறு கோட்பாட்டுக் காரணங்களும் உள்ளிட்டதாக) அமைந்திருந்த போது சிங்களத் தொழிலாளிவர்க்கம் சண் தலைமையிலான தொழிற்சங்கங்களிNலுயே தொடரந்து நீடித்தனர்ளூ தொழிலாளர் ஆதரவைப் பெறாத சிங்கள இளைஞர்களின் அரசியலமை;பாகவே றோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. அமையக் கூடியதாயிற்றுளூ எனும்போது சிங்களத் தேசிய உணர்வு அவ்ர்களிடம் மேவியிருந்தது என்று எப்படிக் கூறமுடியும்?
ஒரு நேரடி அனுபவம் இங்கு சொல்லப்படுவது அவசியம். சண் தலைமையிலான இ.கொ.க. இன் வாலிபர்சங்க மாநாடு 1976 இல் எட்டியாந்தோட்டையில் இடம்பெற்றது. ஆயிரக் கணக்கான கொம்யூனிஸ்ட் வாலிபர் சங்க உறுப்பினர்கள் நாடுபூராவிலும் இருந்து வந்து கலந்துகொண்ட மிகப்பிரமாண்டமான மாநாடு அது. அங்கு சிறப்புரையாற்றிய சண்முக தாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, 'புரட்சிகரக் கட்சிக்கு பெரும்பான்மையினரான சிங்களமக்களின் பிரதிநிதி ஒருவர் தலைமை தாங்காதமையினால்தான் கட்சி மேலும் வளர இயலாது இருக்கிறதா? என்பதாகும். பாட்டாளிவர்க்கப் புரட்சிக்குத் தேசிய உணர்வு இருக்க இயலாதது பற்றியும் 'தொழிலாளர்களுக்கு என ஒரு தேசம் கிடையாது' என்பதையும் நிறையவே சண் விளக்கிப் பேசினார். இருப்பினும் சிங்களத் தொழிலாளர் அணி விரைவாக சண்முகதாசனை விட்டுவிலகி, அநாதரவான நிலையில் நாட்டைவிட்டு வெளியேற அவர் நிர்ப்பந்திக்கப்படும் அவலம் நேர்ந்தது.
வெளியேறுகிற என்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் தேசியத்தின் ஆயுதப்போரட்டத்தை வன்முறை வழிபாட்டுப் பக்திவிசுவாசத்துடன் சண் ஆதரித்திருந்தார்ளூ அது விரக்தியின் உச்சத்தில் வந்த ஞானம். இதுவரை இடதுசாரியுணர்வடைய தமிழ்த்தேசியத்தைக்கூட ஏற்க மறுத்து, சிங்களத் தேசியமாயே கருதப்பட்ட இலங்கைத் தேசியத்துக்காக சண் மனப்பூர்வமாகக் கருத்தியல் விவாதங்;களை நடாத்திருந்தார். அவர்வரையில் சிங்கள இனவாதத்துக்கு விட்டுக் கொடுக்காது, அனைத்து இனங்களும் சம உரிமைகளுடன் வாழும் இலங்கைத் தேசியத்துக்காகவே கருத்தியல் போராளியாக அவர் செயற்பட்டார். தமிழினவாதம் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், கட்சி சார்ந்த எந்தவொரு பேச்சும் எழுத்தும் சிங்கள மக்களைச் சந்தேகங்கொள்ள இடமளி;ககாத இலங்கைத் தேசிய வகைப்பாடு கொண்டதாயிருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். அவர் மட்டுமன்றி, ஒரு கட்டம்வரை அவர் தலைமையில் இயங்கிய அனைத்துத் தமிழ்க் கொம்யூனிஸ்ட் களினது நிலைப்பாடும் அவ்வாறுதான் அமைந்திருந்தது.
ஐஐ
தமிழினத் தேசியம் என்பதே இனவாதம் ஆகிவிடும் என்பதாகக் கருதி இலங்கைத் தேசியம் என்பதற்காக சண் தலைமையிலான இ.தொ.க. செயற்பட்டமைக்கு சிங்கள இனவாதம் எற்கப்பட்டமை காரணமல்ல என்பது தெளிவு. சிங்கள மக்கள் தமது பண்பாடு - இறைமை ஆகியவற்றை அழிக்கும் சக்தியாக இந்தியத் தமிழினத்தை (குறிப்பாகப் புலிக்கொடி ஏந்திய சோழர்களை) கருதுவது குறித்தது சண் எப்போதும் வலியுறுத்திவந்தார். சிங்களப் பண்பாட்டின் தொட்டிலான அநுராதபுரமும், பின்னர் சோழர்களால் உருவாக்கப்பட்டதைக் கையேற்று தமக்கானதாய் வளர்த்த பொலநறுவையும் சோழர்களாலேயே அழிக்கப்பட்டது. என்பதாக சிங்கள வரலாறு கூறும். வறிய நிலையிலும் சுற்றுலா மேற்கொள்ளும் சிங்கள மக்களுக்கு 'தமிழர்களால் அழிக்கப்பட்ட' சிங்களப் பண்பாட்டுச் சின்னங்கள் காட்சிப் பொருளாகக் காட்டப்பட்டு விளக்கப்படுவதுண்டு.
முன்னதாக அநுராதபுரம் 'சோழ இளவலான' எல்லாளனால் 'ஆக்கிரமிக்கப்பட்டு' நாற்பது ஆண்டுகள் ஆளப்பட்டது. 'வடக்கே தமிழனும் தெற்கில் கடலும் நெருக்கும் போது எப்படி நீட்டி நிமிர்ந்து படுக்க இயலும்' என்று முடங்கிப்படுத்த துட்டகைமுனு ஒருநாள் பெரும் படை திரட்டிவந்து எல்லாளனைப் போர்க்களத்தில் முகங்கொண்டான். ' நீயா – நானா ஆளப்போவது எனத்தீர்மானிக்கும் ஒரு போராட்டத்துக்காக இருதரப்பிலுமுள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் சாக வேண்டுமா? நாமிருவரும் மோதலாமே?' எனக்கேட்ட கைமுனுவின் நியாயத்தை ஏற்றுத் தனிப்போர் நிகழ்த்தி மாண்டான் எல்லாளன். வீழ்ந்;துபட்ட அந்த மூத்த வீரனை மதித்து, சமாதியெழுப்பி, அனைவரும் மரியாதை செலுத்த வேண்டுமெனக் கட்டளை பிறப்பித்தான் கைமுனு. முன்னதாகத் தனது படைதிரட்டும் வளர்ச்சியில் கொல்லப்பட்ட வீரர்களை நினைத்து வருந்துகிறவனாயும் கைமுனு இருந்துள்ளான்.
எல்லாளனின் நேர்மையான ஆட்சிபற்றியும், மேற்படியான வரலாறுகளையும், பின்னாலே பௌத்தம் பல்கிப்பெருக கைமுனு முன்னெடுத்த பணிகளையும் மகாவம்சம் விலாவாரியாகச் சொல்லியுள்ளது. அதற்குத் தமிழ் எதிர்ப்பு அவசியமில்லைளூ பௌத்தம் விருத்தியாகவேண்டும் என்பதே மகாவம்சத்தின் அக்கறை. நவீன சமூக உருவாக்கம்வரைகூட சோழர் எதிர்ப்பு சிங்கள மக்களுக்கு சொல்லப்பட்டு வந்தேயல்லாமல் தமிழ் எதிர்ப்பு சிங்கள வரலாற்றியலாளர்களிடம் இருந்ததில்லை. சிங்கள நடனம், நாட்டுக்கூத்து, இலக்கிய வடிவங்கள், இலக்கண அமைப்பு என அனைத்துத் துறைகளிலும் பாளி – சமஸ்கிருதத்திடம் பெற்றுக்கொண்டதைவிட அதிகமாகவே தமிழிடமிருந்து சிங்களம் பெற்றுக் கொண்டுள்ளது. மொழியியல் ரீதியானதும் பண்பாட்டு அடிப்படையிலானதுமான தமிழ் ஆதிக்கம் சிங்களத்துக்குப் பிரச்சினையில்லைளூ பௌத்தம் வாயிலாக தமது மக்களை ஆள உள்ள உரிமையில் சோழர்கள் தலையிட்டமையே பிரச்சனை சிங்கள மன்னர்கள் பெரும் பாலும் தமக்கான பட்டத்து ராணிகளை பாண்டியர்களிடமிருந்தே பெற்றார்கள்.
பேரரசான சோழர்களுடனான மோதலில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அச்சுறுத்தல் சிங்களவருக்கு இருந்தமை பழைய வரலாறு, நவீன வரலாற்றில் பெரும்பான்மை ஜனநாயகம் ஆட்சியாளரைத் தீர்மானிக்க இயலுமாயுள்ளபோது எழுபத்தைந்து வீதமாயுள்ள சிங்களத்தரப்பில் பெரு முதலாளிவர்க்க ஐ.தே.க.வும் தேசிய முதலாளிவர்க்க சிறீலங்கா சதந்திரக் கட்சியும் ஆட்சிக்கு மாறி மாறி வருவதற்காக இனவாதத்தைத் தாரளமாயே பயன்படுத்திக்கொள்டன. அந்த இனவாதத் தீவிரம் சிங்களத் தொழிலாளிவர்க்கத்திடமும் சுவறுவதற்கு வாய்ப்பாக தமிழ்த்தேசியம் சொந்த மண்ணில் நட்பு சக்திகளைத் தேடுவதைவிட்டு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் உறவுகொள்ளத் துடிப்பது அமைந்தது. எப்படியோ, சிங்கள மக்களிடம் இலங்கைத்தேசியம் என்பது மருந்துக்கும் இல்லாமல் போய்ச் சிங்கள இனத்தேசியமே முழுதாக நிறைந்துபோயுள்ளது என்பது மட்டும் உண்மை. எல்லோருமே பௌத்த – சிங்களப் பேரினவாதத்தை எற்பவர்கள் இல்லையென்றாலும் சிங்கள இனத்தேசியம் காரணமாய்ப் பேரினவாத ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாதவர்களாயுள்ளனர். பௌத்தமும் மக்களை ஒடுக்க உதவும் மதமாயினும் புத்தரின் கோட்பாடுகளின் அடிப்படை நல்ல அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருப்பது காரணமாய்ச் சிங்கள மக்களிடம் சிறந்த பண்புகள் அமைந்திருக்கக் காணலாம். இன்றைய பேரினவாதத்திடம் அந்த நல்ல அம்சங்களின் எந்த ஒரு கூறையும் காண இயலாது.
ஐஐஐ
இன்றைய கேடுகெட்ட பௌத்த - சிங்களப் பேரினவாத ஆளுகைக்குள் எல்லாளன் - கைமுனு வரலாற்றின் மீட்டுருவாக்கம் எவ்வாறு அமையும்? துட்டகைமுனுவின் பெரும்படை முன்னேறி வருவதை அறிந்த எல்லாளன் தன்னைப் பாதுகாக்க மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைக் கேடயமாகச் சூழத் தூக்கியெடுத்துக்கொண்டு ஓடியோடி முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிப்போனான். இனி முடியாது என்ற நிலையில் எல்லோரையும் கண்களை மூடியிருக்கப் பணித்துவிட்டு உயிர்ப்பிச்சை கேட்டு கைமுனுவின் படையிடம் சரணடைந்தான். எல்லாளன் அகப்பட்டதை படையணி கைமுனுவிடம் அறிவித்ததுளூ வெளிநாட்டில் இருந்தவாறு அதைக் கேட்டறிந்தவன் ஓடோடி வந்து தாய் மண்ணை முத்தமிட்டான். எக்காளமிட்டு தாண்டவமாடி எல்ளனின் மார்பில் ஓங்கியுதைத்தான். தலையைப்பந்தாடி மண்ணில் சாய்த்தான். போராட்டத்தையும் சொந்த மக்களையும் கொச்சைப்படுத்திய எல்லாளனை அவமதித்த அந்த மே பதினெட்டு நாளை ஆண்டாண்டு தோறும் கொண்டாடும் குதூகலிப்பில் மனுக்குலத்தையும் வரலாற்றையும் அவமதிப்பவனானகக் கைமுனு!
வரலாற்று நாயகன் கைமுனு இந்தக் கொலைவெறியர்களை மன்னிப்பானாகளூ எல்லாளன் சமாதியில் சாந்தி நிலவுக!!
ஐஏ
மார்க்சியம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என எழுப்பிய கோசம் லெனினிசத்தால் 'உலகததொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களை ஒன்று சேருங்கள்' என வளர்க்கப்பட்டது. இன்றைய விடுதலையை நாடும் சக்திகளுக்கு வர்க்க ஒடுக்குமுறை மட்டும் முன்னால் இருக்கவில்லைளூ ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் உள்ளன என்பதையே லெனினிசன் இவ்வகையில் காட்டியுள்ளதுளூ ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் பிரிந்துசெல்லப் போராட அவசியமில்லை. அவ்வாறு பிரிய முனைவது வேறொரு ஆக்கிரமிப்பாளருக்கு உதவுவதாய் ஆகலாம். வேறு வடிவங்களில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க இயலும். கடந்த காலத்தில் தமிழ்த் தேசியம் ஐந்தாம் படையாக இருந்து அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு உதவியமை விடுதலைக்கு வழிவகுக்கவில்லை என்பதைத் தெளிவாக அனுபவித்துவிட்டோம். இனியும் அந்நியருக்கு உதவுவதில் காலத்தை வீணாக வேண்டுமா?
அவ்வாறில்லாமல் சிங்கள மக்களில் நட்பு சக்தியை தேடமுடியும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்க முடியும்? இதற்கு யாழ்ப்பாணத்தில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் தந்த அனுபவம் போதுமானது. ஒதுக்கப்படும் தேசம் போல மருதத்திணையால் ஒடுக்கப்பட்ட சாதிகளான தீண்டாமைக்கொடுமைக்கு உட்பட்ட மக்கள் அதே ஒடுக்கும் திணையிலிருந்து வந்த வெள்ளாளரையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு போராடியிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் 'சமூக – பண்பாட்டு ஏகாதிபத்தியமான' பிராமணியத்தாலும் சைவசித்தாந்த வெள்ளாளரியத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்ட ஒருவகைத் தேசங்களே. இது குறித்துத் தனியாகப் பேசவேண்டும்.
சமூக – பண்பாட்டு ஒடுக்குமுறை நவீன தேசிய இனங்களுக்கும் ஏதோவொருவகையில் பொருந்தும். சாதியத்தகர்ப்பில் போல இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்திலும் பண்பாட்டுப் புரட்சி அம்சங்கள் இணைக்கப்பட்டாக வேண்டும். முழுதாக இனத்தேசியத்தில் மூழ்கிவிட்ட சிங்களத் தொழிலாளி வர்க்கத்தையும் சிங்கள மக்களையும் விடுதலை மார்க்கத்தில் வென்றெடுக்க ஏற்ற பண்பாட்டு இயக்க செயல் வடிவங்களை நாம் தேட வேண்டும். எமது தேசிய இன விடுதலைக்கு மட்டுமன்றி வர்க்க சமூகத்தகர்ப்புக்கும் அது அவசியம். ஒடுக்கப்படும் தேசமோ சாதியோ சமூக வர்க்கமாயுள்ளனளூ அவை, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்தின் சுரண்டப்படும் வர்க்கங்களோடு ஐக்கியப்பட உள்ள வாய்ப்பைத் தவறவிட இயலாது! ஆக்கிரமிப்பாளர்கள் வலு நேர்த்தியோடு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திவிடுகிறார்கள். நாம் என்ன செய்யப்போகிறோம்?
No comments:
Post a Comment