Thursday, October 17, 2024
எழுநா இதழ் - 9
எழுநா இதழ் - 9
வெளியாகி உள்ளது
ஏப்ரல் மாத எழுநா இதழ் வழமை போலவே பல் வகைமை ஆக்கங்களுடன் வெளியாகி உள்ளது!
“தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” என்ற எனது தொடரின் முதல் பகுதிக்கான இறுதி அத்தியாயம் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது!
பொதுவாக அறநெறிக்காலம் (சங்கமருவிய காலம்) என்பதனை வணிக எழுச்சிக் காலமாக பேசி வருகிற சூழலில் அதனை மீளெழுச்சி என இந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது; முந்திய பகுதிகளில் விவசாய எழுச்சிக்கு முன்னரே, வணிக எழுச்சி தொடக்கி வைத்த தனிவகைப் பண்பாடு என்பதுதான் தமிழின் தனித்துவத்துக்கான அடிப்படை என்பதைப் பேசி வந்துள்ளேன்!
இந்த மீளெழுச்சியின் தனித்துவம் பற்றிய கருத்தில் உங்களது அபிப்பிராயங்களை எதிர்பார்த்துள்ளேன்; வளரும் தொடருக்கு உங்கள் கருத்துகள் உதவுவதாக அமையும்!
இதழை முழுமையாகப் படித்த கருத்துகளையும் பகிர்வோம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment