Tuesday, October 22, 2024

மண்ணில் புதைந்திருந்து வெளிப்படும் புத்தர்!

மண்ணில் புதைந்திருந்து வெளிப்படும் புத்தர்! சீனத்தில் இந்த (படத்திலுள்ள) நான்கு தலைப் புத்தர் பிரசித்தமானதில் கிழக்காசிய, தெற்காசிய நாடுகளில் எல்லாம் சிவன், விஷ்ணு, பிரம்மா, புத்தர் தலைகளோடுள்ள ‘நான்கு தலைப் புத்தர்’ சிலைகளைப் பார்க்க இயலும்! அசோகன் உலகெங்கும் பௌத்தத்தைப் பரப்பிய போது சீனாவுக்கும் புத்தர் சென்றாராயினும் கிபி 6 ம் நூற்றாண்டளவிலே (முன் பின்னாக) தமிழகத்தில் இருந்து போன பௌத்தமே சீனம் எங்கும் பரவலடைந்து நிலைபேறடைந்தது. புத்தரின் பேரில் தமிழின் ‘மேன்மைகொள் சிவன்’ சீனாவில் கால் பதித்துத் தொடர்ந்து வந்துள்ளார் என்பது சீனச் சமூகவியலாளர் கருத்து!
இந்தச் சிலை அதற்கான ஒரு ஆதாரம்! ஐயனார் வழிபாடாக இந்து மதத்திலும் பலவேறு வடிவங்களில் தமிழ்ப் பௌத்த-சமண மதங்களிலும் தமிழின் முதல் மதமான (விவசாய விரிவாக்கத்தின் முன்னரே எழுச்சி பெற்ற தமிழ் வணிகத்தின் மதமான) ஆசீவகம் தொடர்ந்து தாக்கம் செலுத்தி வந்துள்ளது! இன்று பெரிதும் தேடலுக்கு உள்ளாகி வருகிறது ஆசீவகம் (இதன்பொருட்டு, அண்மையில் மறைந்த பேராசிரியர் க. நெடுஞ்செழியன் நன்றி உணர்வுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்) அந்தவகையில் சீனத்தில் சிவனைவிட (அல்லது சிவனில் கரந்துறையும்) ஆசீவக ‘ஐயனாரை’ தேடுவதற்கு அவசியம் உள்ளது! முன்னதாக இன்றைக்கான அரசியல் தேடல்

No comments:

Post a Comment