Thursday, October 3, 2024
இராஜதந்திர மல்யுத்த முடிவு ஏற்கனவே நிறைவடைந்துவிடவில்லை
இராஜதந்திர மல்யுத்த
முடிவு
ஏற்கனவே
நிறைவடைந்துவிடவில்லை
இதுவரையில் தமக்குள் பகையான நாடுகளோடு உறவாடி சிங்களத் தேசியம் ஆதாயம் பெற்று வந்ததான தோற்றம் இருந்தது. அதன் மாயை அண்மித்த ‘போராட்டங்கள்’ வாயிலாகத் தகர்க்கப்பட்டது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றை ஊடக அரக்கத்தனமான பிரசாரங்கள் வாயிலாக விரட்டுவதற்கு மேலாதிக்க (ஏகாதிபத்திய) சக்திகளுக்கு இயலுமாயிற்று; ‘மக்கள் போராட்ட’ இளைஞரணியினரது விருப்பங்களுக்கு மாறான சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளின் பிரகாரம் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள உகந்த அரசாங்கம் நிலைதிறுத்தப்பட்டு உள்ளது.
முப்பது வருட உள்நாட்டு யுத்தம் இலங்கை அதனது இறைமையை இந்தியாவிடம் தாரைவார்க்க வழிகோலியது; 1987, 2010 ஒப்பந்தங்கள் மூலமாக ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்து கொள்ளாதது போல இயங்க முற்பட்ட ராஜபக்சக்கள் அவமானங்களைச் சந்திக்க தேர்ந்தது.
பகுதியளவு இறைமையை வெளி உலகுக்கு காட்டும் சுதந்திர நாடு என்பதனையும் இழக்கும் இராஜதந்திர யுத்தம் இப்போது!
அமெரிக்க அணிக்கும் ருஷ்ய அணிக்கும் ஆதரவைக் காட்டி இயங்கும் இந்துத்துவ மேலாதிக்க இந்திய இராஜதந்திரத்தை பி.பி.சி. யோ பிரித்தானியாவோ ஊடக அரக்கக் காப்பிரேட் கும்பலோ அறியாமல் இல்லை!
மக்களின் தலையில் சம்பலரைக்கும் ஊடக விளையாட்டை அவர்கள் நிறுத்தப்போவதில்லை.
மக்கள் சக்தியைப் பலப்படுத்தி விடுதலை மார்க்கத்தில் முன்னேற ஏற்ற அரசியல் செயலொழுங்குகள் மேலெழ இயலாது இருப்பது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment