Wednesday, October 23, 2024

இதயமொன்று அதனது நிலைத்த இயக்கத்துக்கான போராட்டத் தருணங்களைப் பேசும் தனித்துவமான படைப்பாக்கம் நண்பர் வ. திவ்வியராஜன் எழுதியுள்ள நூல் “இன்னும் கொஞ்சநேரம் இருந்தால்தான் என்ன - ஓர் இதயத்தின் கதை - “ ! கலாலயம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்றாவது நூல்! ஏற்கனவே முக நூல் பக்கத்தில் தொடராக இதனை வெளியிட்ட போது எமது இதயங்களையும் எம்மோடு உரையாடத் தூண்டிய படைப்பாக்கமாக உணர முடிந்தது; கவனத்தில் எடுக்கிறோமென இதயத்துக்கு பதிலுரைத்தும் இருந்திருக்கிறேன்! நான் மட்டுமன்றிப் பல நண்பர்களும் தமது உடலங்கங்கங்களைக் காதல் கொண்டு உரையாடத் தூண்டிய ஆக்கமாக அதனை உணர்ந்துள்ளனர் என்பதை நூலின் இறுதிப் பக்கங்கள் காட்டி நிற்பதைக் கவனிக்கலாம்! ஒரு மாத த்தினுள் ஆயிரம் பிரதிகளை மக்களிடையே விநியோகிக்கும் உத்வேகத்துடன் பதிப்பகத்தார்! எமது இதயத் துடிப்பின் இரகசியங்களது வைத்திய நுட்பங்களை வைத்தியராக (அச்சமூட்டும் போதனையாக) அல்லாமல் பயனாளரின் பார்வையில் இருந்து (எமக்கான நோக்கு நிலையில் இருந்தவாறு) மிகச் சுவாரசியமாக நண்பர் திவ்வியராஜன் இந்நூலில் சொல்லிச் செல்கிறார்! தன்னைத் தான் காதலராக வாழ்தல் முதல் அறம் என்பது வள்ளுவம்; அத்தகையோரே பிறரை உயிர்ப்புடன் நேசித்தல் சாத்தியம். அந்த உணர்வை வளர்த்தெடுக்கும் இந்த நூலை ஒவ்வொருவரும் தம் வசம் வைத்திருந்து படிப்பது மிகமிக அவசியம்!

No comments:

Post a Comment