Wednesday, October 2, 2024
பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஒரு பார்வை
பாலஸ்தீனம் - இஸ்ரேல்
ஒரு பார்வை.
முதல் உலகப்போர் முடிந்தவுடன் 1919இல் பிரிட்டனுக்கும் பிரான்ஸ் இடையே ஒரு ஒப்பந்தம்( வெர்சைல்ஸ் ) ஏற்படுகிறது. அதில் பாலஸ்தீனம் பிரிட்டனின் காலனி நாடாகவும் சிரியா பிரான்ஸின் காலனி நாடாகவும் மாறியது. அப்போது அந்த நாடுகள் மீன் பிடி தளமாக பார்க்கப்பட்டது. அப்போது அவை எண்ணைவள நாடுகளாக வெளிப்படையாக அறியப்படவில்லை. ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் அங்கு எண்ணைவளம் இருப்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்ததை பிரிட்டன் அறிந்துகொண்டதால், பாலஸ்தீனத்தை தனது காலனி நாடாக வைத்துக்கொண்டது.. அப்போது பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனியர்களைத் தவிர வேறு எவரும் நிலம் வாங்கக்கூடாது என்று சட்டத்தைப் பிறப்பித்தது. 1946 இல் அதனை விலக்கிக் கொண்டது அப்போது இஸ்ரேலியர்கள் எவரும் அங்கு கிடையாது.
1917 இல் சோவியத் புரட்சி வெற்றிபெற்ற பின்னணியில் காலனியத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் துவங்கின. அது பாலஸ்தீனத்திலும் துளிர் விட்டது. இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள் இட்லரின் கொடுமைகளுக்கு ஆளாகி நடற்றவர்களாக அலைந்தனர். அப்போது பிரிட்டனின் காலனி நாடாக இருந்த பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் யூதர்களுக்கு இஸ்ரேல் எனும் நாட்டை அமைத்துக் கொடுத்தது. யூதர்களுக்கான நாடு ஒன்று கிடைத்தவுடன் உலகமெங்கிலும் இருந்து குடியேறத்துவங்கினர்.
கூடவே அவர்களின் தொல்லைகளும் துவங்கியது.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியைத் தாண்டி பாலஸ்தீனத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அதனால் மோதல்களும் அதிகரித்தது. ஆறு நாட்களாக யுத்தம் தொடர்ந்தது.இந்தப் பிரச்சனை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பிரச்சனையில் பிரிட்டன் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. United Nations Security Counci Resolution242/S/RES/242 was adopted uninimously by the Security Counsil on November 22 1967 under6 of the chapter{1}
எத்தனை தீர்மானங்கள் இருந்தாலும் அன்று முதல் இன்று வரை எதனையும் சட்டை செய்வதில்லை. மறைமுகமாக எக்கதிபத்திய நாடுகளின் ஆசி இருந்ததே முக்கிய காரணம். இன்று வெளிப்படையாகவே ஆதரிக்கும் போது சும்மா இருக்குமா?
இரண்டாம் உலகப்போரின்போது யூதர்கள் அனுபவித்த கொடுமையால் உலக மக்களிடம் உள்ள ஒருவித அனுதாப மன நிலையின் பின்னால் ஒழிந்துகொண்டு தனது அராஜகத்தை பாலஸ்தீனியகள் மீது அன்றுமுதல் இன்றுவரை தனது வெறியாட்டத்தை நடத்துகிறது.
தோழர்.வே.மீனாட்சி சுந்தரம் அவர்களுடன் நடந்த உரையாடல் நினைவுகளிலிருந்து.
No comments:
Post a Comment