Wednesday, October 2, 2024
இராஜராஜ சோழனும் சைவசித்தாந்தமும்
இராஜராஜ சோழனும்
சைவசித்தாந்தமும்
இன்றைய பிரதான பேசுபொருளாக அதிகம் இடம்பிடித்துள்ள விவகாரங்களில் ஒன்று சோழப் பேரரசு - அதன் அதியுச்ச நாயகனான இராஜராஜ சோழன்!
திணை அரசியல் நோக்கில் எந்தக் கருத்தையும் இது தொடர்பில் ஏன் பதிவிடவில்லை எனத் தோழர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்; ஏற்கனவே பதிவிட்ட விடயங்களில் இவை பற்றிப் பேசியுள்ளேன் என்ற போதிலும் தனியாக எழுத வேண்டும் எனக் கேட்கப்பட்டதன் பேரில் இந்தப் பதிவு!
அந்தக் காலமும் அந்த மன்னனும் புரிந்த சாதனைகளில் எவருக்கும் சந்தேகங்கள் இல்லை; முன்னர் கருதியதைவிடவும் மிகப்பெரும் கடற்படையுடன் இந்தியாவிலேயே மிக அதிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்த பேரரசாக சோழராட்சியே இருந்தது என்ற புதிய தளச் சிந்தனையும் இன்று முதன்மைப் பேசுபொருளாகி இருப்பதையும் எவரும் மறுப்பது இல்லை!
மறுக்க இயலாவகையில் புதிய மிலேனியத்தின் ஆரம்பத்திலேயே ரோமிலா தாப்பர் எனும் வரலாற்றியல் பேராசிரியர் மிகுந்த அழுத்தத்துடன் அதனை வலியுறுத்தி இருந்தார்!
மாற்றுக் கருத்து வேறு வகைப்பட்டது!
இவற்றை வைத்து வீரப்பிரதாபங்களை வெளியிட்டுப் பழம்பெருமை பேசிக் காலங்கழிப்போரை நிராகரிக்கும் வண்ணம் எழுகின்ற கருத்துகள் புறக்கணிக்க இயலாதன!
‘எங்க தாத்தாவும் யானை கட்டிப் போரடிச்சார்’ என்றவகை வாய்ச்சவடால்கள் அவசியமற்றன; இன்றைய ஆளுமை எத்தகையது என்பதே பிரதானமானது.
அத்தகைய படைப்பாக்க ஆற்றலை வளர்த்தெடுக்க ஏற்றதாக வரலாற்று ஓட்டத்தில் பெற்றிருந்த ஆளுமைக் கூறுகளை மீட்டுப் பார்ப்பதில் தப்பில்லை.
‘தஞ்சைக்கு எத்தனையோ தடவை போன போதிலும் பெரிய கோயிலை ஒருபோதும் நான் சென்று பார்த்ததில்லை - எமது வளம் அனைத்தையும் கோயிலில் கொட்டி விரயமாக்கியதைக் கொண்டாடுவது என்ன வகை நியாயம்?’ என்று நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
சமூகத்தின் மையமான இயக்கு சக்தியாக கோயில் இருந்த போது தனது அரண்மனையை விடவும் அதனைப் பிரமாண்டமாக இராஜராஜ சோழன் உள்ளிட்ட தமிழ் மன்னர்கள் கட்டி எழுப்பினர் என்பதிலுள்ள நல்ல அம்சத்தை எப்படி நிராகரிக்கலாம்?
கோயில்களில் தேவரடியார்கள் எனப் பெண்களை இருக்க வைத்து தேவதாசி முறையை ஏற்படுத்தியமைக்காகவும் இராஜராஜ சோழன் கண்டிக்கப்படுகிறார்.
போர்களில் கைப்பற்றப்பட்ட பொன், பொருள்களைக் கோயில்களில் கொட்டி ‘அழகு பார்த்தது’ போல கைப்பற்றப்பட்ட பெண்களையும் பொருள்களாக்கிக் கோயில் சிறைக்குள் ஆட்படுத்திவிட்டமை கண்டனத்துக்கு உரியதுதான்!
இதிலும் உள்ள மறுபக்கத்தைக் கவனம் கொள்ளாது தனியே நிராகரிப்பை மேற்கொள்ளும் ஒருமுனைவாதத் தவறை ஏற்க இயலாது. கைப்பற்றப்பட்ட பெண்களைத் தனது அரண்மனையின் அந்தப்புர நாயகிகளாகச் சிறைப்படுத்தாமல் கோயில் பணிக்காக அமர்த்தியதிலுள்ள சாதகமான அம்சத்தை கவனங்கொள்ளாமல் இருந்துவிட இயலாது. பரதக் கலை பேணப்பட்டு வளர்க்கப்படுவதில் இந்தத் தேவரடியார்களது பங்களிப்பு முதன்மை மிக்கது.
இவர்கள் காலவோட்டத்தில் நிலக்கிழார்களது காமக்கிழத்திகள் ஆக்கப்பட்ட போது பரதம் குறுக்கப்பட்டு வெறும் காமரசனைக்கான ஆடற்கலையாக அது இருந்தது. அதனோடு தஞ்சைப் பெருங்கோயில் உள்ளிட்ட பலவேறு கோயிற் சிற்பங்களில் செதுக்கப்பட்ட அடைவுகளை ஆய்வுக்கு உள்ளாக்கிய நிலையிலேயே சென்ற நூற்றாண்டில் பரதக் கலை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது.
இந்தப் பேரரசன் மேலாதிக்கத்தின் சின்னம் என்பதில் சந்தேகம் இல்லை!
அதேவேளை,
வரலாற்று வளர்ச்சியில் தமிழின், தமிழரின் ஆற்றல்களை ஒருங்கமைத்துத் தலைமை தாங்கிப் பங்களித்த பக்கத்தை மதிக்கத் தவறுவது தொடர்ந்த எமது வளர்ச்சிக்கு எந்தவகையிலும் உதவக்கூடியதல்ல!
சைவசித்தாந்தத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
No comments:
Post a Comment