Tuesday, October 15, 2024
சிவப்பு - நீலம் - கருப்பு
இணைந்த
போராட்டங்கள் அவசியம்
- பாட்டாளி வர்க்கச்
சிந்தனையின் அடிப்படையில்
அம்பேத்கரும் பெரியாரும் இந்தியச் சமூகம் சாதித் தளத்தை உடையதெனக் கருதியவர்களல்ல;
அந்தப் புரிதல் இருந்திருப்பின் ‘சாதி ஒழிப்பு’ முதலில் தேசிய விடுதலையும் சமத்துவப் போராட்டமும் பின்னர் என்று இயங்கி இருக்க மாட்டார்கள்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் முதற்பணி
சோசலிசத்தை வென்றெடுத்தல்
என்ற
இலக்கை வந்தடைவதற்கானது
என்பதற்குச் சாதி தடையல்ல!
சாதி அமைப்பு எமக்கான ஏற்றத்தாழ்வு வாழ்முறை;
ஐரோப்பாவுக்கு வர்க்கம் இயல்பானது
என்பதைப் போல
சாதி
எமக்கென இயல்பாயமைந்த
சமூக முறைமை!
சாதிகள் ஐக்கியப்பட்டு முன்னரும் வரலாறு படைத்தோம்;
சாதி பேதம் பேசி
மக்களைப் பிளவுபடுத்தும்
முதலாளித்துவச்
சிந்தனை
முறைமைகளைக்
கைவிட்டு,
மார்க்சியச் சிந்தனையைக் கையேற்று,
அனைத்து மக்களையும்
ஒன்றிணைத்துச்
சாதிகள்,
இனத் தேசியங்கள்
இடையே சமத்துவத்தை
வென்றெடுப்பதன் ஊடாகப்
பொதுவுடைமைப் புத்துலகம் படைப்போம்!
No comments:
Post a Comment