Tuesday, October 22, 2024
வரலாற்றுத் தடத்தில்
தனித்துவப் பங்களிப்பு
சவுத் விஷன் புக்ஸ் நடாத்திவரும் மெய்நிகர் கருத்தாடல் அரங்கத் தொடரில் கடந்த இரண்டு வாரங்களின் ஞாயிற்றுக் கிழமைகளின் அமர்வு தமிழர் வரலாற்றுப் பங்களிப்புப் பற்றிய பேசுபொருளுக்கு உரியனவாய் அமைந்திருந்தன.
வர்க்க அரசியலுக்கு அப்பால் முழுச் சமூக சக்திகளாக ஒடுக்கப்படும் இனத்தேசியங்கள், சாதிகள், பாலினப் பிரிவினர்கள் போராட்ட களத்தில் முன்னிலை பெற்றுள்ள சூழலில் திணை அரசியலெனும் வேறு வடிவம் கவனங்கொள்ள அவசியமானதாகி உள்ளது!
மருதத் திணை மேலாதிக்கம் வாயிலாக வரலாற்றுத் தொடக்கம்பெற்ற தமிழர் அரசியல் செல்நெறி மட்டுமே அதற்கான முன்னனுபவத் தடம்!
தமிழக வரலாற்றுத் தனித்துவம் குறித்த இந்தப் பேசுபொருளுக்கு உதவுமெனக் கண்டு, பேராசிரியர் ஆர். சம்பகலக்ஷ்மி அவர்களது “வணிகம் கருத்தியல் நகர்மயம்” எனும் நூலை எனது கவனத்துக்கு தோழர் பாலாஜி கொண்டுவந்து, உடனேயே கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறித்து ஏற்கனவே பதிவிட்டு இருந்தேன் (தோழர்கள் பாலாஜி, பாரதி புத்தகாலய நாகராஜ்-சிராஜ், கையளித்த சத்தியன் ஆகியோர்க்கு மிகுந்த நன்றிகள்).
இப்போது அந்த நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழர் வரலாற்றுத் தனித்துவத் தடத்தைப் பலரது கவனத்துக்குக் கொண்டுவந்ததில் இந்த நூலுக்கு மிகப்பெரும் பங்குண்டு. நூல் பற்றிய விமரிசனத்தை விரிவாக எழுதுவேன். இத்தகைய பெறுமதிமிக்க நூலைக் கரிசனையெடுத்துத் தமிழில் வெளிக்கொணர்ந்தமைக்காக பாரதி புத்தகாலயத்தைப் பாராட்டியாக வேண்டும்!
No comments:
Post a Comment