Wednesday, October 16, 2024
இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு
இந்துக்கள்
ஒரு மாற்று வரலாறு
- வெண்டி டோனிகர்
இந்து மதம் பற்றிய சமஸ்கிருத, பிராமண வெளிப்பாடுகளுக்கு அப்பாலும் தேடலை மேற்கொண்டு முழுமைப்படுத்திய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு நூல்!
தமிழ், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் பார்வையிலான - அவர்களால் கட்டமைக்கப்பட்ட, இந்து மதம் எவ்வகையில் தொடர்ந்து இயங்குகிறது எனக் காட்டும் நூல்!
மேலைத்தேச (வர்க்க சமூக) - கிறிஸ்தவ மக்களிடையேயான - மதசார்பின்மையில் இருந்து
இந்தியச் சமூகத்தின் (இஸ்லாமிய, இந்து மத ஊடாட்டத்தின் போதான) மதசார்பின்மை கொண்டிருந்த அடிப்படை வேறுபாட்டை இந்நூல் தெளிவுற வெளிப்படுத்தி இருக்கக் காணலாம்!
பேராசிரியர் க. பூரணச்சந்திரனால் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த நூலை பாலம் சகஸ் வழங்கி இருந்தார்; அப்போதே படித்த புத்தகம், இப்போது வெளிப்படுத்த அவசியப்பட்டது!
(அதற்கான பிரதான காரணம் யாழ். பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் இராஜேஷ்கண்ணன் அவர்களது நேற்றைய உரை; ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ என்ற நூல் குறித்த அறிமுக உரையை அற்புதமாக ஆற்றியிருந்தார்.
தேவரையாளி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற புத்தக பண்பாட்டரங்கில் அந்த நூலறிமுகங்கள் இடம்பெற்றன. இன்றும் காலை 9 மணிக்கு நடைபெற இருப்பதை ஒட்டிப் அதற்காகப் புறப்பட்டவாறே இந்தப் பதிவு. அங்கே சந்திக்க வாய்ப்புள்ள நண்பர்களைச் சந்தித்து மேற்கொண்டு உரையாடுவேன்).
No comments:
Post a Comment