Wednesday, October 16, 2024
தவறேதுமற்ற வரலாறு அல்ல!
'மகத்தான ஒக்டோபர் புரட்சி' என்கிறபோது அது எந்தத் தவறுகளுக்கும் இடமளித்திருக்கவில்லை என்று பொருளல்ல. அதற்கு தலைமையளித்த ருஸ்யக் கொம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சிக்கு தலைமையேற்று வழிநடத்தியவர் லெனின். அவர் வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியதைப்போல, 'செயல் எதையும் செய்யாத ஒருவரே தவறேதும் செய்யாதவராக இருக்க இயலும்; செயற்பாடுகளின் போது தவறுகள் தவிர்க்க இயலாதன'.
இத்தகைய உலகைக் குலுக்கிய மிகப்பெரும் மக்கள் பங்கேற்பின்போது தவறுகள் எதுவுமே இடம்பெறாது கவனமாக முன்னேற அதிசிரத்தைகள் எடுத்தாலும், மீறலுடன் பல தவறுகள் இடம்பெறத்தான் செய்தது.
இதனை எமது 'அடைந்தால் தமிழீழம், இல்லையேல் சுடுகாடு' என்ற கோட்பாடற்ற முன்னெடுப்போடு ஒப்பிட முயல்வது முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட முயல்வதை விடவும் மோசமானது.
பிரதான விடயம், அவை மக்கள் விடுதலைக்கான போராட்டத்தின்போது தவிர்க்கவியலாது இடம்பெற்ற தவறுகள். "சிறுபிள்ளை வேளாண்மை விளைந்தாலும் வீடுவந்து சேராத" வகையறாவுக்குரிய ஈழப்போராட்டம் தவறுகளில் தொடங்கித் தவறுகளூடாக வளர்ந்து, இறுதியிலுமான தவறோடு அழிந்துபோன ஒன்று!!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழ் மக்கள் பௌத்த - சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையை முகங்கொள்கிறார்கள்; இதனை முறியடிக்கப் போராட முற்படும்போது ஏனைய ஒடுக்கப்படும் - சுரண்டப்படும் மக்களோடு ஐக்கியப்பட அவசியமுள்ளது. அதனைக் கவனங்கொள்ளாமல் தமிழின் ஆதிக்க சக்திகள் தமது ஒடுக்குமுறைக்கு ஆட்படுவோரைச் சுரண்டுவதற்காக ஒரு தனி நாடு அவசியம் என ஈழப் போராட்டத்தை முன்னெடுத்த போது உலக மேலாதிக்க சக்திகளின் நலன்களோடு இணைந்ததாக விடுதலைப் புலிகளின் தலைமை செயற்படவேண்டியதாய் ஒரு வரலாறு எமக்கு வாய்த்திருந்தது.
அவ்வாறன்றி மக்கள் விடுதலைக்கான ஈழம் பற்றிக் கனவு காண்பவர்கள், ஈழப்போராட்டத்தின் புலிகளது, மற்றைய இயக்கங்களினதும் தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்ற வீணான முயற்சிகளில் இறங்குகிறார்கள் . ஈழப்போராட்டத்தில் இடம்பெற்றதான தவறுகளை விடுத்து வேறொரு வழியில் ஈழத்தை வெல்ல இயலும் எனக் கருதுகிறவர்கள் இன்றைய வரலாற்று இருப்பையும் உலக இயக்கப்போக்கையும் புரிந்துகொள்ளாமல் வெறும் ஆசைகளை நிதர்சனமாக்கிவிட முற்படுகிறவர்கள்தான்.
ஈழம் சாத்தியமானதல்ல என்பதால் அதனைக் கைவிட வேண்டும் எனக் கூறவரவில்லை. மக்கள் விடுதலை என்பதற்கு ஈழத்தைத் தவிர்த்த வேறு வடிவம் மட்டுமே ஏற்புடையது என்ற வரலாற்று நிர்ப்பந்தம் கவனிக்கப்பட வேண்டும். அதுபற்றி இப்போது அலசுவது இங்கு அவசியமற்றது. ஈழம் அடையப்பட்டேதான் ஆக வேண்டுமெனில், புலிகள் முன்னெடுத்த வகையில் மட்டுமே சாத்தியமாக இயலும். எந்தப் பிழையையும், மக்கள் நலனுக்கு பாதகமானது என்ற சிறிய உறுத்தலும் இல்லாமல் கண்மூடித்தனமாக பிரபாகரன் செயற்பட்ட வேகம் மட்டுமே ஆதிக்கவாதிகள் விரும்பத்தக்க ஈழத்தை வெற்றிபெற இருந்திருக்கக் கூடிய ஒரே வழி. அப்படியும் அவரால் வெல்ல முடியவில்லை; அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட அரசியல் - 'இஸ்ரேல் வகை ஈழம்' என்றெல்லாம் இருந்தும் அந்த மேலாதிக்க சக்திகளும் பிரபாகரனுக்கு கை கொடுக்கவில்லை. இங்கு முழு 'இறைமையோடு' தான் மட்டுமே மேலாதிக்கம் பிரயோகிக்கவல்லவராக இருக்க வேண்டும் என்று அவர் முன்னெடுத்த நடைமுறைதான் அவரது தோல்விக்கு அடிகோலியது.
ஆக, ஏதாயினும் மேலாதிக்க சக்திக்கு கால்பதிக்க இடமளிக்கும் ஈழம் பிழைகள் பற்றிய அலட்டல் இல்லாத வழிமுறையால் எட்டப்பட வாய்ப்புள்ளது. அது மக்களுக்கான ஈழமல்ல. அதன் முன்னெடுப்பில் இடம்பெற்ற தவறுகளும் ஒக்டோபர் புரட்சியின்போதான தவறுகளும் ஒன்றாகமாட்டா.
உருப்பெற்ற சோவியத் சோஷலிஸக் குடியரசுகளின் ஒன்றியம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு விடுதலைத் திசைமார்க்கத்தை காட்டியிருந்தது. உழைப்புக்கான மதிப்பை உயர்த்தியது. பெண்விடுதலைக்கு வடிவங்கொடுத்தது. முதலாளித்துவ அரசுகள் கூட மக்கள் நல அரசுகளாக செயற்படும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதன் அழிவின் பின்னர் இவையனைத்தும் தலைகீழானதை அறிவோம். அந்த அழிவு மார்க்சிய - லெனினிசத்தின் தவறினால்லல்ல. ஏற்பட்ட தவறுகள் எதனால் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
*முகநூலில் உலவும் பல குழப்பங்களுக்கு விரிவான அடிப்படையை எழுத எண்ணினேன். *சில தொழில்நுட்ப பிரச்சனைகளால், தொடர்ந்து விரிவாக எழுத முடியாதுள்ளது. இதனையே பல வழிகளில் முயன்றேன் . இன்னும் முயற்சிக்கிறேன்......தவறேதுமற்ற வரலாறு அல்ல!

*முகநூலில் உலவும் பல குழப்பங்களுக்கு விரிவான அடிப்படையை எழுத எண்ணினேன். *சில தொழில்நுட்ப பிரச்சனைகளால், தொடர்ந்து விரிவாக எழுத முடியாதுள்ளது. இதனையே பல வழிகளில் முயன்றேன் . இன்னும் முயற்சிக்கிறேன்......
No comments:
Post a Comment