Sunday, February 26, 2012

1___ .....

ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி 
                                                      கல்லூரியின் முகப்பு


1992 -05 -11  ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரியில் இணைந்து கொண்டேன். இந்தக் கல்லூரிக்கும் எனக்குமான உறவை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. அதன் வெளிப்பாடு தான் இந்தத்  தொடர்... 




                                                                             வெள்ளிக்கிழமை (24.02.2012 )    ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரி பீடாதிபதி சுந்தரலிங்கத்தை கல்வி அமைச்சில் சந்தித்தேன்.இரு தினங்களுக்கு முந்திய கல்லூரி இருபதாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஏன் அறிவிக்கவில்லை எனக் கேட்டேன் .அந்தக் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.அதேவேளை இது போன்ற சிறிய தவறுகளும் நடந்துவிட்டது எனக் கவலை தெரிவித்தார்.அறிவிக்கப் பட்டிருந்தாலும் போயிருக்க இயலாதுதான்.சுகவீனம் தடையாக உள்ளது.இருப்பினும் அந்தநிகழ்வூடாக கல்லூரித்தொடக்க கால நினைவுகளுக்கு செல்லக்கூடியதாக அமைந்திருந்தது.அது வைரம் பாய்ந்த மறக்கவியலாத நாட்கள்.


                                                            அந்தக் கொண்டாட்டத்துக்கு அடுத்தநாளே முரளி வீட்டுக்கு வந்திருந்தார்.என்சுகவீனம் பொருட்டாக என்னைப் பார்க்க வந்தபோது அந்தக்கால பயன்மிக்க நினைவுகளை மீட்டுக்கொண்டார்.மதிவானமும் செல்வராசா மற்றும் முரளி ஆகியோரின் இரு வேறு பார்வைகள் தன்னோடு தொடர்பாடியமையை கூறியிருதார்.எனது அணி சார்ந்த இன்னொரு பார்வையும் ஜோதிக்குமாரின் நந்தலாலா அணியின் பார்வையும் தனித்தனியாக இயங்கின.எனது அணிக்குரிய நிலைப்பாட்டை வலுப்படுத்துவதே என் பிரதான செயற்பாடாக அமைந்தபோதிலும் மாற்றுக்கன்னோட்டம் உடையவர்களோடு ஊடாடுவதற்கு தடை இருக்கவில்லை.உயிர்ப்பான வரலாற்று பங்களிப்புக்கான தருணங்கள் அவை என்பதால் வேறுபட்ட பார்வை உடைய நண்பர்கள் மாற்றுக் கருத்துக்களுடனும் ஒன்றுபட்டு இயங்க இயலுமாயிருந்தது.

                                                              இன்று பல சிதைவுகளோடு காலம் அவலமாக அனைத்தையும் பிளவுபடுத்தி தனியன்களாகஆட்களை மாற்றியுள்ளது.எனது அணி என்பதும் காணாமல் போயுள்ளது.தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதற்காக வால் ஒன்றை சேர்த்து அகோரமாக தோற்றம் தருகிறது.அதுபற்றி பின்னர் பார்க்கலாம்.இப்போது அன்றைய ஆரோக்கியமான காலம்பற்றி மீட்டுப் பார்ப்போம்.  ...
                                                                                                            (தொடர்வேன்...)


                                                                       2
  ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி .....                             
  
                                                
                      தனராஜ் சேர் , மாணவர்கள் ,மற்றும் திருமதி சுப்ரமணியம் , எனது மகள் சுபரா .
                                       
                                               வவுனியா மத்திய மஹா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிகமாக இணைந்திருந்த அந்தக் காலம்.ஒருநாள் பாடசாலையின் நிகழ்வு ஒன்றுக்கு ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரியின் பீடாதிபதி வந்திருந்தார். செல்வி இராசரத்தினம் என்கிற அவர் பெரிதும் அறியப்பட்டவராக இருந்தார்.சில வருடங்களில் ஒய்வு பெறும் நிலையில் இருந்த அவர் திருமணம் செய்யாமலே இருந்தார்.பின்னர் ஒரு நாள் எங்கள் விடுதிக்கு அவர் வந்தபோது பபி(என் மனைவி) அவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டார்."செய்யக்கூடாது என்ற எந்த நோக்கமும் எனக்கு இருக்கவில்லை;சொல்லப்போனால் செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தேன்.கிறிஸ்த்தவராகவும் உயர்சாதிக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்ததனால் மாப்பிள்ளை கிடைக்காததினால் வீட்டாரினால் எனக்கு திருமணம் செய்துதர இயலவில்லை.என் அனுபவித்தினால் பின்னர் என் சகோதரிகளுக்கு சாதி சமயம் எல்லாம் பொருந்திவர வேண்டும் என்று பார்க்காமல் நான் திருமணம் செய்து வைத்திருந்தேன்" என்றார்.அவரது சகோதரிகளில் ஒருவர் என் வாழ்க்கை விளக்காக அமைந்த விஞ்ஞான ஆசிரியர்.அதுபற்றி வேறோர் சந்தர்ப்பத்தில் உங்களோடு பேச வேண்டும்;அந்தச்   சந்தர்ப்பத்தில் பீடாதிபதியிடம் அவரது சகோதரி எனக்கான அறிவியல் பார்வையை ஊட்டியது பற்றி சொல்லியிருந்தேன்.அவரது சந்தோசத்துக்கு அளவில்லை என்பதைச் சொல்லத்தேவையில்லை.


இப்போது வவுனியாவில் அவரை சந்தித்த இடத்துக்குப் போயாக வேண்டும்.சகல ஆசிரியர்களோடும் அளவளாவியபோதும் ஸ்ரீ பாதவுக்கு விரிவுரையாளர்களை எடுக்கவேண்டும் என்ற நினைவோட்டம   அவரிடம் இருந்திருக்க வேண்டும்.எனது பட்டப்படிப்பு பெறுபேற்றை கேட்டதும் வர்த்தமானியப் பார்க்கும்படியும் கண்டிப்பாக விண்ணப்பியுங்கள் என்றும் கூறினார்.கீருவும்(சகோதரன் )  வர்த்தமானிபற்றி அறிந்து விண்ணப்பங்கள் எடுக்க வழி செய்திருந்தார்.விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சையும் முடிந்து ஓரிரு மாதங்களில்  மே மாதம் பதினோராம் திகதி வந்தபோது நான் ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரிக்கு கடமை ஏற்க சென்றேன்.அந்தப் புதிய நிலை மிகப் பெரும் மகிழ்வாக முடியாதவகையில் பீடாதிபதி இருக்கையில் செல்வி இராசரத்தினம்.இருக்கவில்லை.அரசியல் நெருக்குவாரங்களுக்கு உடன்பட மறுக்கும் அவரது ஆளுமை காரணமாக அவர் வெளியேறியிருந்தார்.புதிய பீடாதிபதி அங்குள்ள அரசியல் ஆதிக்கத்தால் இருத்தப்பட்டவர் என்பதெல்லாம்  எங்களுக்கு எங்கே தெரியப் போகிறது?


ஜெர்மனி அரசால் புதிதாகக் கட்டப்பட்ட அங்குள்ள விரிவுரையாளர்  விடுதியில் குடும்பத்துடன் குடியேறினேன்.எல்லாமே புதிது.ஏற்கனவே மலையகத்தில் புதிய வாழ்க்கை,புதிய பண்பாடு படைக்கும் அரசியல் செயற்பாடுகளை செய்திருந்த அனுபவத்துடன் இந்தப் புதிய சூழல் மேலும் காத்திரமான பங்களிப்பைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையுடன் கால் பதித்தேன்.வவுனியா மத்திய மஹா வித்தியாலயத்தில் எனக்கான பிரியாவிடையை பாடசாலை செய்தபோது அதிபர் தனது உரையில் ,அடுத்த வருடம் வவுனியாவில் கல்விக் கல்லூரி வர இருப்பதால் ,அப்போது இடமாற்றம் பெற்று வந்துவிடுங்கள் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருந்தார்.எனது ஏற்பு உரையில் ,பெரும் நடப்பாக சொல்லியிருந்தேன்,இனி எனது வேலை முழுமையும் மலையகத்தில்தான் என்று.


          அதற்கு ஏற்ப மே மாத ஸ்ரீ பாத சூழல் மிகுந்த இதமாக வரவேற்றது.மலைகளின்  நடுவே கல்லூரி கம்பீரமாக எழுந்து நின்றது.அதைவிட வீரியமிக்க பயிலுனர்களை அது கொண்டிருந்தது.கல்லூரியைவிட்டு வெளியே வந்தால் டெவன் அருவியின் சலசல ஓசை காதில் வரவேற்பு இசையை ஒலிக்கும்.இருநூறு மீட்டர் நடந்தால் அதனைக் கண்ணாரக் கண்டு களிக்க இயலும்.இன்னும் நூறு மீட்டர் தூரத்தில் சென்ட் கிளையர் அருவி.ஒரு திசையில் bus எடுத்தால் ஹட்டன்.மறு திசையில் தலவாகலை.இடையில் பத்தன சந்தி ஊடாக போனால் நாவலப்பிட்டி. அற்புதமான அந்தச் சூழலில் அமைந்த கல்வி நிறுவனத்தில் எத்தகைய அரசியல் எல்லாம் இயங்கின?எத்தகைய உன்னதமிக்க படிப்பினைகளைப்  பெற்றோம்?      தொடர்வேன்......

                                                3---
ஸ்ரீ பாதா கல்விக் கல்லுரி 

பொதுவான நினைவலைகளுக்குள் போவதற்கு முன் ,முதல் பயிலுனர்கள் போர்க்குணமும் சமூக அக்கறையும் மிக்கவர்களாக இருந்தார்கள் எனச் சொன்னதுபற்றி பார்ப்பது அவசியம் எனக் கருதுகின்றேன்.


மூன்று வருடங்களுக்கு முன்னர்(2009) புதிதாக பயிலுனர்கள் எடுக்கப்படாமல் தாமதமாக்கப்பட்டது.எடுக்கப்போவதில்லை என்றும் கல்விக் கல்லூரிமுறை தோல்வியடைந்துவிட்டது என்றும் அன்றைய கல்வி அமைச்சர் சொன்னார்.அதனை நம்பியிருந்த மாணவர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தி இருந்த நிலையில் ஆறு மாதங்களின் பின்னர் பயிலுனர்கள் உள்வாங்கப்பட்டனர்.      

             புதிதாக உள்வாங்கப்பட்ட பயிலுனர்கள் உள்ள நிலையில் தர்காநகர் தேசியக் கவிக் கல்லூரியில் இருந்து பணி நிமித்தம் ஸ்ரீ பாதா தேசியக் கல்விக் கல்லூரிக்கு  சென்றேன்.அப்போது பயிலுனர்கள்,விரிவுரையாளர்கள் மத்தியில் பேசவேண்டிய  சந்தர்ப்பம்  ஒன்று ஏற்பட்டது.ஆரம்பத்தில் கல்விக் கல்லூரிமுறை மிகுந்த பாராட்டைப் பெற்றிருந்து , இன்று தோல்வி அடைந்ததாக சொல்லப்படக் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பி எனது பதிலைச் சொன்னேன்.


நிர்வாகக் காரணம் தவிர்த்து பயிலுனர்கள் தொடர்பான அம்சத்தை இங்கு பார்த்தால் போதும்.முதல் தொகுதியினர் கல்லூரிக்குள் வருவதற்கு முன்னர் இரண்டு வருடங்களுக்கு மேலாக நம்பிக்கை அற்ற சூழலில் தவித்தவர்கள்.கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த வேலையையும் செய்தனர்;சமூகத்துடன் நன்கு ஊடாடினர்.சமூகம் தன்னிடம் எதனை எதிர் பார்க்கிறது?நான் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பணி என்ன? என்பது  போன்ற  சில புரிதல்களோடு  கல்லூரிக்குள் வந்தார்கள்.இப்போது அப்படி அல்ல.உயர்தரப் பரீட்சைப் பெறு பேறு வெளியான  கையோடு வந்துவிடுகிறார்கள்.இங்கு மாணவர்கள் என்ற உணர்வோடு இருக்கிறார்களே அல்லாமல் ஆசிரியர்கள் ஆகப் போகிறோம் ;எம்மிடம் சமூகம் எதை எல்லாம் எதிர் பார்க்கிறது என்ற புரிதல் கொள்ள இயலாதவர்களாகவே உள்ளனர்.


தவிர,ஒரு புதிய அமைப்பாக அப்போது அதன் நல்ல அம்சங்கள் வெளிப்பட,இன்று அந்த அமைப்பின் நல்ல அம்சங்கள் முழுதாக அமுங்கிப் போய் தீய அம்சங்களே மேலோங்கி நிற்கிறது.அப்போதும் நல்ல அம்சங்களை தீய அம்சங்கள் அமுக்கிவிட முயன்றனதான்;ஆயினும் அதனை முறியடித்து நல்ல அம்சத்தால் வெற்றி பெற இயலுமாயிற்று.இங்கேதான் பயிலுனர்களது போர்க்குணமும் சமூக அக்கறையும் பெரும் பங்களிப்பை நல்கின.


அன்று புதிதாக வந்த விரிவுரையாளர்களும் ஸ்ரீ பாதா கல்லூரியில் ஆரோக்கியமான பங்களிப்பை நல்கினர்.பொதுவாகவே எல்லாக் கல்விக் கல்லூரிகளிலும் ஆரம்ப காலம் வீறுள்ளதாக இருந்து பின்னர் தேய்வடைந்ததாக கருத்து உண்டு .இது முனைப்பாக வெளிப்படுவது ஸ்ரீ பாதவில்தான்.இதற்கு மலையக அரசியல் செல்நெறிப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களும் பிரதான காரணமாகும்;நாங்கள் அன்றைய மலையகத்தின் விடிவெள்ளியாகப் பார்க்கப்பட்ட ஸ்ரீ பாதா கல்விக் கல்லூரி பற்றிப் பார்ப்போம். ...
தொடர்வேன்....


                                      4---
  ஸ்ரீ பாத கல்விக் கல்லுரி 

கல்லூரிக்கு புதிய விரிவுரையாளர்களாக நாங்கள் செல்வதற்கு முன்னதாக பயிலுனர்கள் அங்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.அதற்கு ஆறேழு மாதங்களுக்கு முன்னரே பீடாதிபதியுடன் சில விரிவுரையாளர்கள் அங்கு இணைக்கப்பட்டு இருந்தனர்.செல்வராசா,முரளி,தனராஜ் போன்றவர்கள் அவ்வகையில் முன்னரே வந்தவர்கள்.என்னுடன் சமகாலத்தில் ராஜ்குமார்,ராஜேந்திரன் போன்றவர்கள் வந்தனர்.


ராஜ்குமார் நினைவூட்டப் பட அடிப்படையான இரு காரணங்கள் உண்டு.தொடர்ந்து மலையகத்தில்தான் எனது பணி என்று வவுனியா மத்திய மஹா வித்தியாசாலையில் சூளுரைத்த போதிலும் கடும் குளிருக்கு தாக்குப் பிடிக்க இயலாமல் மூன்று வருடங்களின் பின்னர் நான் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாற்றம் பெற வேண்டியாகிவிட்டது.அப்படி வெளியேறிய போது எங்களை தனது காரில் ராஜ்குமார் நாவலபிட்டியாவில் கொண்டுவந்து விட்டார்.அதைவிட சுவாரசியமானது சேர்ந்த புதிதில் எங்களுக்குள் சிறு முரண்பாடு முகிழ்க்க முனைந்து அவரது பெருந்தன்மையால்  தவிர்க்கப்பட்டது.


முதலில் அவருக்கு ஒரு விடுதி தருவதாக கூறப்பட்டிருந்தது;அதன் திறப்பை பெறாமலே அவர் குடும்பத்தை கூட்டி வருவதாக ஓரிரு நாள் விடுப்பில் போய்விட்டார்.அதனை மறந்து ,அந்த இடையில் வந்த என்னிடம் அதேவிடுதித் திறப்பை பீடாதிபதி தந்துவிட்டார்;நான் அதனை சுத்தப்படுத்தி குடும்பத்துடன் குடியேறிய பின்னர் வந்த ராஜ்குமாருக்கு தான் விரும்பிய விடுதி கை நழுவிப்போய்விட்டமை தெரியவந்தது .அடுத்த ஒரு விடுதியை பெற முடியுமாயினும்,பெரிதாக உள்ள உப பீடாதிபதியின் விடுதியை இரண்டாக்கி , அதில் ஒன்றையே பெறவேண்டி இருந்தது.இப்போது பிரச்சனை நான் சுத்தப்படுத்திக் குடியேற வந்துவிட்ட நிலையில் அதனைக் கொடுக்க முடியாது என்பதுதான்.என்னையும் ராஜ்குமாரையும் பீடாதிபதி காரியாலையத்தில் அழைத்து கைமாற்றுவதட்கு பேச்சுவார்த்தை நடத்தியபோது ,வேறு விடுதிக்கு என்னால் மாற இயலாது;அப்படி இதனை நான் தர வேண்டுமாயின் நான் வெளியில் வாடகை வீட்டைப் பார்க்கிறேன் என்று உறுதியாக கூறிவிட்டேன்.


சண்டைபோட விரும்பாத  ராஜ்குமார் எனத் இறுக்கமான நிலைப்பாடு கண்டு அதிர்ந்து போனார்.இப்படி முதல் நாளே பீடாதிபதியுடன் போராடமுடியுமா என்ன?அவர் பின்வாங்கி மற்ற  விடுதியையே பெறுகிறேன் என்றுவிட்டார்.அந்த மாற்றிக்கூறிய நாட்டாமைத்தீர்ப்போடு வெளியே வந்தபோதுதான் நானும் அவரும் முதன்முதலில் கதைத்துக்கொண்டோம்.பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம்;முடிவாக அவர் நான் அதிரும்வகையில்,சர்வசாதாரணமாகவே சிரித்தபடி என்கோவம் பற்றி எதோ சொன்னார்.

முதலில் அவர் என்னைக் கொச்சைப்படுத்தியதாகத்தான் கருதினேன்;இருப்பினும் பிரச்சனை தராமல் அவர் பின்வாங்கியதை உத்தேசித்து அவரிடமிருந்து சுமுகமாகவே அன்று விடைபெற்றேன்.தவறுக்கு எதிராக எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி நான் போராடுவதைப் பரவணி இயல்பாக கொண்டிருப்பவன் என்பதனை அவர் விரைவில் தெரிந்துகொள்ளக்கூடியதாக காலம் கனிந்தே இருந்தது;எங்கள் விடையத்தில் முதல் கோணலாக இருந்ததைப்போலவே நிர்வாக விடயங்களில் பல கோல்மால்களுடன் பீடாதிபதி இருந்தார் .அவற்றுக்கு எதிராக நாங்கள் போராடியபோது முதலில் தனது இயல்புக்கு ஏற்ப மென்மையாக இருந்த ராஜ்குமார் ,பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் எவரையும்விட கடும் தொனியில் ஏசினார் என்பது வேறு விடயம்.


உண்மையில் பல போராட்டங்களுக்கு களமாக அமைந்து கல்லூரி எங்களைப் புடம் போட்டு எடுத்தது.அவைபற்றி தொடர்வேன் .....




ஸ்ரீ பாத கல்விக் கல்லுரி   5

                               இங்கு  எனக்கு கிடைத்த சில நன் நட்புகள் இன்று  வரை தொடர்கின்றது 
                           ந. இரவீந்திரன் , சு .முரளீதரன் , திருமதி கணேஷன் , திரு கணேஷன் -இவர் தான் ஐயர்                                                  -                         ஈழ போராடத்தின் ஆரம்ப உறுப்பினர் )

எந்த ஒரு குறிப்பும்,அல்லது எழுத்துபூர்வமான எந்த ஆவணமும் இல்லாமல் வெறும் மனப்பதிவை மட்டுமே கொண்டுதான் இதனை எழுதுகிறேன்.கற்றலுக்கான ஒரு நிறுவனத்துக்கு,புதிய கனவுகளுடன் போன எங்களுக்கு முன்னால் கல்வியியல்  சார்  கல்வியை விடவும் ,சாமூக மாற்ற இயங்காற்றல் தொடர்பான  கல்விக்கான  களமே வரிந்து பரந்து கிடந்தது எனக் குறிப்பிட்டிருந்தேன் .



சமூக அக்கறையுடனான பயிலுனர்களும்,புத்திய சிந்தனையுடனான விரிவுரையாளர்களும்,மலையக அதிகாரத்துவ தொழிற்சங்க அரசியல் தொடர்பு பீடாதிபதியும் ஊடாடிய களம் என்ற வகையில் நெருப்பும் பஞ்சும் அக்கம் பக்கமாக இருந்த nilai என்கிறவகையில் போராட்டங்கள் வலிந்து வரவேற்க அவசியமற்றது ;வாராதது போலிருந்து எப்போதும் வெடிக்கக் கூடியதுதான்.


இந்தக்  கள நிலவரத்தில் இன்னொரு அம்சமும் சேர்த்தி;முதலே நீங்கள் ஊகித்திருக்கக் கூடியது தான்.புதிதாகக் கட்டி ஜொலிஜோளித்த அதனை ஜெர்மனி கட்டித்தந்தது என்றேன் அல்லவா?ஜெர்மனி என்றால் பின்னாலே அமரிக்கா என்று பொருள்;ஆக, இந்தப் போராட்டக் களத்தில் அமரிக்காவும் பிரசன்னம்.
ஓ! ,உங்கடை பெரிய போராட்டத்துக்குள்ளை அமெரிக்காவையும் கண்டு பிடிச்சிருக்கிறீர்கள் என்கிறீர்களா? தொடர்வேன் ..... 


ஸ்ரீ கல்விக்கலூரி - 6 



ஸ்ரீபாதா கல்விக்கல்லூரி விரிவுரையாளர்கள் என்ற வகையில் நீர்கொழும்பில் ஆசிரியர்களாக களமிறங்க உள்ள பயிலுனர்கள் சிலருக்கு ஆசிரிய வாண்மைத்துவம் தொடர்பான பயிர்ச்சியளிக்கச் சென்றிருந்தோம். அங்கு எமது போராட்டக் களங்களில் அமெரிக்கா உள்ளதை உணர்த்திய சம்பவம் ஒன்று 
இடம்பெற்றிருந்தது. கடைசியாக சந்தித்தபோது இதுபற்றிய கேள்வியோடு தான் பிரிந்திருந்தோம்.


முன்னதாக நீர்கொழும்பு முன் ஆசிரிய பயிர்ச்சியாளர்கள் பற்றி சொல்வது அவசியம். இரண்டொரு வருடங்களின் முன்னர் வடக்கிலிருந்து புலிகளினால் 
வெளியேற்றப் பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், சிலாபம் பகுதிகளில் அகதி முகாங்களில் குடியிருத்தப்பட்டிருந்தனர். அவர்களது பிள்ளைகளின் கல்விக்காக
அமைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அவர்கள் மத்தியிலிருந்தே படித்த வாலிபர்களும், யுவதிகளும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு முழுமையான
பயிற்சி வழங்க இயலாத நிலையில் இருவாரங்கள் வதிவிட பயிற்சி வழங்கவேண்டியிருந்தது.


அந்தப் பயிற்சி வழங்கும் பொறுப்பை ஜி.ரி.இசட். எடுத்திருந்தது. இதுவே எமது கல்லூரி கட்டிடங்களையும் ஏனைய வளங்களையும் வழங்கி, குறிப்பிட்ட காலம்வரை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தது என்பதை முன்னரே பார்த்திருந்தோம்.அவர்களது ஒரு வளமான எங்களை பயிற்றுவிப்பாளர்களாக 
நீர்கொழும்புக்கு வரவழைத்திருந்தனர்.


இருவாரங்கள் சிறப்பாக பயிற்சி முடியும் இறுதிக் கட்டத்தில் அதன் முன்னேற்றம் பற்றி பார்வையிடுவதற்காக அமைச்சர் மஜீத் வந்திருந்தார். மஜீத் அவர்கள் 
அன்றைய  பேரினவாத - ஐ.தே.க. அரசில் அங்கம் வகிப்பவர் என்கிற வகையில் இனவாதியாக இருப்பத்ற்கே சந்தர்ப்பம் அதிகம் என்று நீங்கள் கருதக்கூடும்; அவ்வாறு இல்லை என்பதை வலியுறுத்துவது அவசியம். ஐ.தே.க.இன் பெரும்பாலான அமைச்சர்கள் மோசமான இனவாதிகளே. மாறாக,மஜீத் இதய
சுத்தியுடன் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காக செயற்பட்டிருந்தார்.


இந்த உமது சான்றிதழுக்கு என்ன அவசியம் வந்தது என்று கேட்டால் அதுவும் சரிதான். பல தவறான புரிதல்களுடன் பலரையும் தட்டிக்கழித்து விடுகிறோம் என்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது. இன்னொரு அதிகம் தேவையாயில்லாத ஒரு விசயத்தையும் சொல்லிவிட்டு மேற்கொண்டு போவோம்.


வந்த அமைச்சரை மகிழ்விப்பதற்காகவும், தமது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் ஆசிரியப் பயிலுனர்கள் சிறிய கலை நிகழ்வை நிகழ்த்தினர். தேவை கருதி ஒருசில தமிழ்ப் பெண்கள் இருந்த போதிலும் மற்றவர்கள் அனைவரும் முஸ்லிம் பெண்களும் ஆண்களுமே பயிலுனர்கள். நடன நிகழ்த்துகையை ஆற்றிய
ஒன்றிரண்டில் முஸ்லிம் பெண்கள் அதிகமாய் இடம்பெற்றிருந்தனர்.


இது ஒரு முஸ்லிம் அமைச்சர் என்கிறவகையில் மஜீத் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம் பெண்கள் நடனம் ஆடுவது தடுக்கப்பட்ட ஒன்று.
அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி அந்த நடனங்கள் அமைந்திருந்தமையே அமைச்சருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் தனது உரையில் அதுபற்றி அவர் பேசியிருந்தார். மாறிவரும் உலகில் இப்போதும் முஸ்லிம் பெண்கள் நடனம் ஆடக்கூடாது என்று சொல்கிற பழமைவாதி அல்ல நான்; ஆசிரியைகளாகப் பயிற்சி பெற்ற உங்களுக்கு நடனம் அவசியம், பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான கற்பித்தலை வழங்கப்போகிற உங்களுக்கு மிகமிக அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் எனக்கு முன்னால் நடனத்தை நீங்கள் தவிர்த்திருக்கலாம். எவராவது இதனை அறிந்தால், அதெப்படி முஸ்லிம் பெண்கள் தன் முன்னே ஆடுவதை அமைச்சர் அனுமதித்தார் என்று என்மீது குற்றச்சாட்டை சுமத்த இடம் உண்டு.


இங்கு அவசியப்படுகிற ஒருவிடயமும் அவரது உரையில் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு பெறுமதிமிக்க பயிற்சியை ஜி.ரி.இசட். வழங்கியிருந்தது என்கிறவகையில்
அது தொடர்பில் அவர் பேச வேண்டியிருந்தது. அந்த நிறுவனம் ஜெர்மனிக்குரியது. ஜெர்மனிக்கு நன்றியைச் சொன்னவர், இதுபோல அமெரிக்கா ஏன் முன்வந்து உதவ வருவதில்லை என்பதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டார். என்ன இருந்தாலும் ஐ.தே.க. அமைச்சர் ஒருவர் அமரிக்காவை சந்தேகப்படும் தனது மக்களிடம் அந்த நாடு பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் அரசியல் பொறுப்பு இருக்கிறதுஅல்லவா?


அமரிக்க தூதுவருக்கு முஸ்லிம்களின் அகதி முகாங்களை அழைத்துச்சென்று தான் காட்டியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஜெர்மனி இவர்களுக்கு நிறையவே உதவுகிறது நீங்கள் ஏன் உதவக்கூடாது என்று கேட்டிருந்தாராம்; அதற்கு அமரிக்க தூதர் சொன்ன பதில்தான் முக்கியமானது; ஜெர்மனிக்கூடாக எமது உதவி இவர்களை வந்தடைகிறது. நேரடியாக நாமே உதவி செய்வதில் அரசியல் பிரச்சனை உண்டு. சி.ஐ.ஏ. ஊடுருவல் என்று பிரச்சாரங்கள் வலுத்துவிடும் என்பதால் தவிர்த்துக்கொண்டு ஜெர்மனிக்கூடாக உதவிகளைச் செய்கிறோம் என்று அமரிக்க தூதர் சொன்ன பெரியதொரு உன்மையை அங்கே போட்டுடைத்தார் அமைச்சர்.


ஆக, அமெரிக்க கண்காணிப்பு ஜி.ரி.இசட். ஊடாகவும் செயல்படும். எங்களுடைய சிறிய கல்லூரிப் போராட்டம் அமெரிக்காவின் கண்காணிப்புக்குள்ளாகாதா என்ன?
இப்படிச் சொல்வதால் அமெரிக்கா கல்லூரியில் வந்து இறங்கிய கதை ஏதோ அளக்கப்போவதாக நினைக்க வேண்டாம். நேரே விசயத்துக்கு வருகிறேனே! தொடர்வேன்.. 








சிங்கள மக்களும் இனத்தேசியமும் ந.இரவீந்திரன்


சிங்கள மக்களும் இனத்தேசியமும்
ந.இரவீந்திரன்




தொழிலாளிவர்க்கம் வரலாற்று அரங்கில் புதிய சக்தியாகத் தோன்றிய முதல் களம் ஐரோப்;பாளூ அங்கு அவர்களது போராட்டங்கள் உக்கிரம் பெற்றபோது அந்தப் புதிய சக்திக்கான தத்துவம் தோற்றம் பெற்றது. மார்க்சியம் என்ற அத்தத்துவம் தொழிலாளி வர்க்க விடுதலையை வழங்குவதாக மட்டுமன்றி மனுக்குலப் பிணிகள் பலவற்றுக்கும் தீர்வு தரவல்லதாய் அமைந்தது. தனக்கெனச் சொத்து எதையும் கொண்டிராத தொழிலாளிவர்க்கம் தனது நிலைபேறுக்கும் தன் நலன் பெருக்கத்துக்கும் உழைப்பதாய் அல்லாமல், தனது இருப்பையும் அழிப்பதற்கான இயங்காற்றலை வெளிப்படுத்தியது. வர்க்க முறையை அழித்து ஒழித்து சமத்துவ சமூகம் படைப்பதே தனக்கான விடுதலைக்கும் உலகப் பிரச்சனைகளின் தீர்வுக்கும் ஒரேவழி என்பதை அந்தப் புதிய சக்திகாட்டியது. சோவியத் யூனியனில் அந்த வர்க்கத் தலைமையில் முக்கால் நூற்றாண்டுப் பயணம் சமத்துவம் நோக்கி முன்னேற இயலும் என்ற உதாரணத்தை வழங்கியது வாயிலாக ஐரோப்பா தனது தத்துவக்கண்டு பிடிப்புக்கு வலுச்சேர்த்தது. ஆயினும், மீண்டும் வெற்றிபெற்ற முதலாளித்துவம் ஐரோப்பாவை வரலாறுபடைக்கும் ஆற்றலிலிருந்து தூரப்படுத்தி விட்டுள்ளது.
புதிய வரலாறு படைக்கும் ஆற்றல் மீண்டும் ஆசியாவின் கரங்களுக்கு வர ஏற்றதாக புதிய சீpனம் உதயமானது. தொழிலாளி வர்க்க ஆட்சி நிலவிய சோவியத்தின் உதவியடன், விவசாயப் புரட்சியை முன்னெடுக்கும் புறநிலை நிலவிய சீனாவில் தொழிலாளிவர்க்கத் தத்துவத்தை சீனக் கொயூனிஸ்ட் கட்சியால் பிரயோகிக்க இயலுமாயிற்று. இதனைச் சாத்தியமாக்குவதற்கு முன்தேவையாக சீனாவில் நிலவிய வர்க்கங்கள் பற்றிய ஆய்வை மாஓ சேதுங் செய்தார்ளூ வர்க்க சக்திகளது இருப்பும் - உறவுகளும் மோதல்களும் அணிசேர்க்கைகளும், எனும் பலவகை நிலவரங்களை அலசி முன்னெடுத்த செயற்பாடுகள் வாயிலாகவே சீனப்புரட்சி வெறும் தேசிய விடுதலையாக அமைவதைக் கடந்து சமத்துவ சமூகம் படைப்பதற்கான தொழிலாளி வர்க்க அபிலாசை நோக்கி முன்னேற இயலுமாயிற்று.
வரலாறு நேர்கோட்டுப் பாதையில் செல்வதில்லைளூ வளைவு சுழிவுகளுடன் பல்திசை அலைக்கழிப்பு நிதர்சனம். இருபெரும் சோஷலிஸ நாடுகளான சோவியத் யூனியனும் சீனாவும் கோட்பாட்டு மோதலில் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பிளவுபடுத்தின. இந்தப் பிளவிலே வெறும் கோட்பாட்டுப் பிரச்சனை மட்டுந்தான் அடங்கியிருந்ததா? இல்லை, தேசிய உணர்வும் கலந்திருந்தது. அதெப்படி, தொழிலாளர் அணிக்குள் முதலாளித்துவத்தின் ஊடுருவலாக தேசியவாதம் உடறுத்ததா? இல்லை, தொழிலாளி வர்க்கத்;திடமும் தேசிய உணர்வு இருக்கிறது என்பதன் வெளிப்பாடே சோவியத் - சீன மோதல். அறுபதுகளில் சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ ஊடுருவலுடனான வலதுசாரித் திரிபுவாதத்தில் மூழ்கத் தொடங்கிவிட்டதாயினும் தொண்ணூறுகளில் கொர்ப்பச்சேவால் கலைக்கப்படும்;வரை தொழிலாளிவர்க்கக் கட்சியாக இருக்க முடிந்துள்ளது. தொழிலாளிவர்க்க இலட்சியத்தில் உறுதியாக இருந்த சோவியத் கொம்யூனிஸ்ட்டுகளிடமும் சீனதேச எதிர்படனான தேசிய உணர்வு இருந்தது.
அதனைவிடவும், மார்க்சியத்தைப் பாதுகாக்க முனைந்த சீனக்கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீனத்தேசியம் இருந்தது என்பதும் கவனிப்புக்குரியதுளூ தொழிலாளிவர்க்க சர்வதேச நோக்கு முனைப்புற்று இருந்திருப்பின் சோவியத் யூனியனைத் தொடர்ந்து நட்புச்சக்தியாக அரவணைத்தவாறு, வேறு வடிவத்தத்துவார்த்தப் போராட்டங்களை முன்னெடுத்திருக்க இயலும்ளூ சோவியத் திரிபுவாத முனைப்பை மேலும் உந்தித் தள்ளி அதன் சிதைவைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. ஒரு தசாப்தம் கடப்பதற்குள் ஆயுதப் போராட்டத்துக்குரிய அவசியத்தை வலியுறுத்திய சீனத்தரப்பு ஆயுதப்போராட்ட வடிவத்தை மட்டுமே போற்றும் வன்முறை வழிபாட்டு இடதுசாரித் திரிபுவாதத்துக்குள் சரிந்துவிட்டது. அதைச் சரிக்கட்ட முனையும் இன்றைய எத்தனிப்பில் வலதுசாரித் திரிபு சீனாவில் மேலோங்கியுள்ளது. அதற்காக, அன்று சோவியத்தை சிதைத்ததுபோல உலகத்தொழிலாளர் இயக்கம் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பது ஆபத்தானது. திரிபுவாதங்களை முறியடித்து தொழிலாளிவர்க்க அபிலாஷையை வென்றெடுக்க அவகாசம் இன்னமும் சீனாவுக்கு உள்ளது. முடியாமல் போய் அங்கேயும் கொம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டால் அது வேறுவிடயம்!
பிரச்சனை சோவியத் வழியா – சீன வழியா என உலகத் தொழிலாளர் இயக்கம் மல்லுக் கட்டியதில் உள்ளது. அவ்விரு நாடுகளது பாட்டாளிவர்க்க அணியினுள்ளேயே தேசியம் இருந்துள்ளது! அவர்கள், அவர்களுக்கான வழியில் சமத்துவத்தை அடைவர். ஏனைய தேசங்களில் பாட்டாளிவர்க்கக் கட்சிகள் மார்க்சிசம் - லெனினிசத்தைத் தத்தமது தேசங்களது வரலாற்றுப்போக்கைப் புரிந்துகொண்டு சமூகமாற்றம் சமத்துவம் நோக்கிச் செல்ல எவ்வாறு பிரயோகிக்கப்போகிறோம் என்பதே பிரச்சனை. இந்த இடைவெளிக்குள் மார்க்சியம் தோற்றுப் போனதாகப் பிதற்றியவர்களை மூடிப்;புதைத்துவிட்டு மார்க்சிய – லெனிசமே மக்கள் விடுதலைக்கான ஒரே மார்க்கம் என்பது இன்று மேலெழுந்துவிட்டது.
புது வரலாறு படைக்கும் முனைப்பில் இன்று துடிப்படன் முன்னணிப்பாத்திரம் வகிக்கும் தென்னமெரிக்க மார்க்சியர்களின் அனுபவம் 'தேசியம் முதலாளித்துவத்துக்கு மட்டும் உரியதல்ல, அனைத்து வர்க்கத்துக்கும் உரியது' என்பதாகும். முதலாளித்தவ சமூகமுறையே தேசியத்தைக் கட்டமைத்ததுளூ ஆயினும், பாட்டாளிவர்க்கம் உள்ளிட்ட அனைத்து சமூக சக்திகளிடமும் தேசிய உணர்வு உண்டு. அதேவேளை, வேறெந்த வர்க்கத்தைவிடவும் பாட்டாளிவர்க்கமே அனைத்து வர்க்க பேதங்களையும் தகர்க்கும் வரலாற்றுப் பணியின்தலைமை சக்தி என்றவகையில் சர்வதேசவாதம் அதற்கான அடிப்படைப் பண்பாக அமைந்துள்ளது என்பதும் கவனிப்புக்குரியது. அத்தகைய சர்வதேசவாதம் அதனிடம் முனைப்புற அதிகவாய்ப்புள்ள சந்தர்ப்பத்தை மனங்கொள்ளப்போய், பாட்டாளிவர்க்கத்திடம் தேசியம் செயலாற்றும் எனக் காணத்தவறிய கொம்யூனிஸ்ட் கட்சியின் கடந்தகாலத் தவறு இனி இடம்பெற அவசியமில்லை.

'சிங்கள மக்களும் இனத் தேசியமும்' என்ற பேசுபொருளுக்கான மேற்படி முன்னுரை ஓரளவுக்கு விடயத்தை வெளிப்படுத்தியிருக்கும். சிங்களப் பாட்டாளி வர்க்கத்திடம் இலங்கைத் தேசிய உணர்வு சர்வதேசவாத நோக்குடன் உள்ள அதேவேளை சிங்கள இனத்தேசிமும் தாராளமாய் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் தொழிலாளி வர்க்கத்துக்கு அவசியமானதாய் விருத்தியாக்க வேண்டிய சர்வதேசவாதத்தைக் காட்டிலும் சிங்கள இனத்தேசியமே சிங்களத் தொழிலாளர்களிடம் முனைப்பாகியுள்ளது. அநேகமாய் இலங்கைத் தேசியம் என்பதாக சிங்கள இனத்தேசியத்தையே கருதுகிற போக்கு சிங்களத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய சக்திகளிடமும் உள்ளது.

அறுபதுகளில் கொம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் கோட்பாட்டு விவாதத்துடன் சோவியத் - சீனப் பிளவு எற்பட்டதைத்தொடர்ந்து இலங்கையிலும் மொஸ்க்கோ சார்பு – பீக்கிங்கார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள் என இரண்டு கட்சிகள் செயற்பட்டமையை அறிவோம். பாராளுமன்றத்;தின் வாயிலாகவே சோசலிஸத்தை அடைய இயலும் என்ற மொஸ்க்கோ சார்பு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, அதற்கு ஏற்றவகையில் சிங்கள இனவாதத்தைக் கையேற்பதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கவில்லை. இடதுசாரி சிங்கள இனத்தேசியம் என்ற ஏற்பபடைய அரசியல் வடிவத்தைக் கடந்து சிங்கள இனவாதத்தை அந்தக்கட்சி கையேற்பதற்கு ஏற்றதாக தமிழ்த் தேசியம் எகாதிபத்தியத்தோடு பலவகைகளில் கைகோர்த்து இயங்கியது,

சிங்கள இடதுசாரிகள் தேசிய முதலாளிவர்க்கத்துக்கு வழங்கிய ஆதரவு மூலுமாய் 1956 – 1965 களில் தேசிய உடைமையாக்கும் கொள்கை பின்பற்றப்பட்டபோது இடதுசாரித் தமிழ்த்தேசியர்கள் திழரசுக்கட்சியின் தலைமையில் இயங்கினார்கள்ளூ அத்தகைய முற்போக்கான எகாதிபத்திய எதிர்ப்புப் பொருளாதாரக் கொள்ளையை முழு அளவில் இடதுசாரித் தமிழ்த் தேசியர்கள் எற்றுக் கொள்ளவில்லை. தமிழின நலன் என்றபேரில் பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் தளங்கள் வடக்கு – கிழக்கில் இருக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தை தமிழரசுக் கட்சி வெளிப்படுத்தியிருந்தது. சிலவிடயங்களில் அந்த தேசிய நலன்சார்ந்த முற்போக்கு அரசாங்கத்தைத் தமிழரசுக்கட்சி ஆதரித்த போதிலும், இவ்வகையிலான விலகல் அப்போதே இருந்தத. அதைவிடவும் கல்வியில் தேசியமொழிகளான சிங்களம் - தமிழ் பயிற்று மொழிகளாய் இருக்கவேண்டும் என்ற முற்போக்காளர்களது நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியர்கள் எதிர்த்தனர்ளூ ஆங்கிலமே பயிற்றுமொழியாய்த் தொடரவேண்டும் என்றனர்.
இருந்த முற்போக்குக் குணாம்சங்களையும் இழந்து 1965 இன் பின்னர் ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான பிற்கோக்கு நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசியம் எடுத்துக்கொண்டது. முன்னதாக இடதுசாரித் தமிழ்தேசியம் மேவியிருந்த வேளையில் செய்துகொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்த ஐ.தே.க. உடன் டட்லி – செல்வாஒ ப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஐ.தே.க. அரசாங்கம் முழுமையாக எகாதிபத்திய அடிவருடித்தனமானது. தேசிய நலன்களோடு பூரண உடன்பாடுகொள்ளாத தமிழரசுக்கட்சி எகாதிபத்தியத்துக்கு நாட்டைக்காட்டிக்கொடுக்கும் சக்தி என்ற உணர்வோடு டட்லி – செல்வா ஒப்பந்தம் சிங்களத்தொழிலாளி வர்க்கத்தால் எதிர்க்கப்பட்டது. அந்த எதிர்ப்பு முற்போக்கு உணர்வைக் கடந்து சிங்கள இனவாதம் ஆகும் வகையில் 'மசாலா தோசை வடை எப்பா (வேண்டாம்)' என்று தமிழ் மக்களுக்கு எதிரானதாக கோசமாக்கப்பட்டு உர்வலங்கள் நடாத்தியது சோவியத்சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி.
சிங்களப் பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பான்மையான புரட்சிகர சக்திகள் சண் தலைமையிலான இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) அணியில் திரண்டிருந்தார்கள் என்பதே உண்மை. ஒரு தமிழ்க் கொம்யூனிஸ்ட் தலைமையில் மிகப்பெரும்பான்மையான சிங்களத் தொழிலாளர்கள் அணிதிரண்டனர் என்கிறபோது சிங்களத் தேசியம் அவர்களிடம் அதிகமாய் இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதைவிட, அறுபதுகளின் பிற்கூற்றில் றோஹண விஜேவீரவின் தலைமையில் எற்பட்ட பிளவு தமிழர் தலைமையை நிராகரிக்கும் இனவாத உணர்வுடையதாயும் (வேறு கோட்பாட்டுக் காரணங்களும் உள்ளிட்டதாக) அமைந்திருந்த போது சிங்களத் தொழிலாளிவர்க்கம் சண் தலைமையிலான தொழிற்சங்கங்களிNலுயே தொடரந்து நீடித்தனர்ளூ தொழிலாளர் ஆதரவைப் பெறாத சிங்கள இளைஞர்களின் அரசியலமை;பாகவே றோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. அமையக் கூடியதாயிற்றுளூ எனும்போது சிங்களத் தேசிய உணர்வு அவ்ர்களிடம் மேவியிருந்தது என்று எப்படிக் கூறமுடியும்?
ஒரு நேரடி அனுபவம் இங்கு சொல்லப்படுவது அவசியம். சண் தலைமையிலான இ.கொ.க. இன் வாலிபர்சங்க மாநாடு 1976 இல் எட்டியாந்தோட்டையில் இடம்பெற்றது. ஆயிரக் கணக்கான கொம்யூனிஸ்ட் வாலிபர் சங்க உறுப்பினர்கள் நாடுபூராவிலும் இருந்து வந்து கலந்துகொண்ட மிகப்பிரமாண்டமான மாநாடு அது. அங்கு சிறப்புரையாற்றிய சண்முக தாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, 'புரட்சிகரக் கட்சிக்கு பெரும்பான்மையினரான சிங்களமக்களின் பிரதிநிதி ஒருவர் தலைமை தாங்காதமையினால்தான் கட்சி மேலும் வளர இயலாது இருக்கிறதா? என்பதாகும். பாட்டாளிவர்க்கப் புரட்சிக்குத் தேசிய உணர்வு இருக்க இயலாதது பற்றியும் 'தொழிலாளர்களுக்கு என ஒரு தேசம் கிடையாது' என்பதையும் நிறையவே சண் விளக்கிப் பேசினார். இருப்பினும் சிங்களத் தொழிலாளர் அணி விரைவாக சண்முகதாசனை விட்டுவிலகி, அநாதரவான நிலையில் நாட்டைவிட்டு வெளியேற அவர் நிர்ப்பந்திக்கப்படும் அவலம் நேர்ந்தது.
வெளியேறுகிற என்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் தேசியத்தின் ஆயுதப்போரட்டத்தை வன்முறை வழிபாட்டுப் பக்திவிசுவாசத்துடன் சண் ஆதரித்திருந்தார்ளூ அது விரக்தியின் உச்சத்தில் வந்த ஞானம். இதுவரை இடதுசாரியுணர்வடைய தமிழ்த்தேசியத்தைக்கூட ஏற்க மறுத்து, சிங்களத் தேசியமாயே கருதப்பட்ட இலங்கைத் தேசியத்துக்காக சண் மனப்பூர்வமாகக் கருத்தியல் விவாதங்;களை நடாத்திருந்தார். அவர்வரையில் சிங்கள இனவாதத்துக்கு விட்டுக் கொடுக்காது, அனைத்து இனங்களும் சம உரிமைகளுடன் வாழும் இலங்கைத் தேசியத்துக்காகவே கருத்தியல் போராளியாக அவர் செயற்பட்டார். தமிழினவாதம் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், கட்சி சார்ந்த எந்தவொரு பேச்சும் எழுத்தும் சிங்கள மக்களைச் சந்தேகங்கொள்ள இடமளி;ககாத இலங்கைத் தேசிய வகைப்பாடு கொண்டதாயிருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். அவர் மட்டுமன்றி, ஒரு கட்டம்வரை அவர் தலைமையில் இயங்கிய அனைத்துத் தமிழ்க் கொம்யூனிஸ்ட் களினது நிலைப்பாடும் அவ்வாறுதான் அமைந்திருந்தது.
ஐஐ
தமிழினத் தேசியம் என்பதே இனவாதம் ஆகிவிடும் என்பதாகக் கருதி இலங்கைத் தேசியம் என்பதற்காக சண் தலைமையிலான இ.தொ.க. செயற்பட்டமைக்கு சிங்கள இனவாதம் எற்கப்பட்டமை காரணமல்ல என்பது தெளிவு. சிங்கள மக்கள் தமது பண்பாடு - இறைமை ஆகியவற்றை அழிக்கும் சக்தியாக இந்தியத் தமிழினத்தை (குறிப்பாகப் புலிக்கொடி ஏந்திய சோழர்களை) கருதுவது குறித்தது சண் எப்போதும் வலியுறுத்திவந்தார். சிங்களப் பண்பாட்டின் தொட்டிலான அநுராதபுரமும், பின்னர் சோழர்களால் உருவாக்கப்பட்டதைக் கையேற்று தமக்கானதாய் வளர்த்த பொலநறுவையும் சோழர்களாலேயே அழிக்கப்பட்டது. என்பதாக சிங்கள வரலாறு கூறும். வறிய நிலையிலும் சுற்றுலா மேற்கொள்ளும் சிங்கள மக்களுக்கு   'தமிழர்களால் அழிக்கப்பட்ட' சிங்களப் பண்பாட்டுச் சின்னங்கள் காட்சிப் பொருளாகக் காட்டப்பட்டு விளக்கப்படுவதுண்டு.
முன்னதாக அநுராதபுரம் 'சோழ இளவலான' எல்லாளனால் 'ஆக்கிரமிக்கப்பட்டு' நாற்பது ஆண்டுகள் ஆளப்பட்டது. 'வடக்கே தமிழனும் தெற்கில் கடலும் நெருக்கும் போது எப்படி நீட்டி நிமிர்ந்து படுக்க இயலும்' என்று முடங்கிப்படுத்த துட்டகைமுனு ஒருநாள் பெரும் படை திரட்டிவந்து எல்லாளனைப் போர்க்களத்தில் முகங்கொண்டான். ' நீயா – நானா ஆளப்போவது எனத்தீர்மானிக்கும் ஒரு போராட்டத்துக்காக இருதரப்பிலுமுள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் சாக வேண்டுமா? நாமிருவரும் மோதலாமே?' எனக்கேட்ட கைமுனுவின் நியாயத்தை ஏற்றுத் தனிப்போர் நிகழ்த்தி மாண்டான் எல்லாளன். வீழ்ந்;துபட்ட அந்த மூத்த வீரனை மதித்து, சமாதியெழுப்பி, அனைவரும் மரியாதை செலுத்த வேண்டுமெனக் கட்டளை பிறப்பித்தான் கைமுனு. முன்னதாகத் தனது படைதிரட்டும் வளர்ச்சியில் கொல்லப்பட்ட வீரர்களை நினைத்து வருந்துகிறவனாயும் கைமுனு இருந்துள்ளான்.
எல்லாளனின் நேர்மையான ஆட்சிபற்றியும், மேற்படியான வரலாறுகளையும், பின்னாலே பௌத்தம் பல்கிப்பெருக கைமுனு முன்னெடுத்த பணிகளையும் மகாவம்சம் விலாவாரியாகச் சொல்லியுள்ளது. அதற்குத் தமிழ் எதிர்ப்பு அவசியமில்லைளூ பௌத்தம் விருத்தியாகவேண்டும் என்பதே மகாவம்சத்தின் அக்கறை. நவீன சமூக உருவாக்கம்வரைகூட சோழர் எதிர்ப்பு சிங்கள மக்களுக்கு சொல்லப்பட்டு வந்தேயல்லாமல் தமிழ் எதிர்ப்பு சிங்கள வரலாற்றியலாளர்களிடம் இருந்ததில்லை. சிங்கள நடனம், நாட்டுக்கூத்து, இலக்கிய வடிவங்கள், இலக்கண அமைப்பு என அனைத்துத் துறைகளிலும் பாளி – சமஸ்கிருதத்திடம் பெற்றுக்கொண்டதைவிட அதிகமாகவே தமிழிடமிருந்து சிங்களம் பெற்றுக் கொண்டுள்ளது. மொழியியல் ரீதியானதும் பண்பாட்டு அடிப்படையிலானதுமான தமிழ் ஆதிக்கம் சிங்களத்துக்குப் பிரச்சினையில்லைளூ பௌத்தம் வாயிலாக தமது மக்களை ஆள உள்ள உரிமையில் சோழர்கள் தலையிட்டமையே பிரச்சனை சிங்கள மன்னர்கள் பெரும் பாலும் தமக்கான பட்டத்து ராணிகளை பாண்டியர்களிடமிருந்தே பெற்றார்கள்.
பேரரசான சோழர்களுடனான மோதலில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அச்சுறுத்தல் சிங்களவருக்கு இருந்தமை பழைய வரலாறு, நவீன வரலாற்றில் பெரும்பான்மை ஜனநாயகம் ஆட்சியாளரைத் தீர்மானிக்க இயலுமாயுள்ளபோது எழுபத்தைந்து வீதமாயுள்ள சிங்களத்தரப்பில் பெரு முதலாளிவர்க்க ஐ.தே.க.வும் தேசிய முதலாளிவர்க்க சிறீலங்கா சதந்திரக் கட்சியும் ஆட்சிக்கு மாறி மாறி வருவதற்காக இனவாதத்தைத் தாரளமாயே பயன்படுத்திக்கொள்டன. அந்த இனவாதத் தீவிரம் சிங்களத் தொழிலாளிவர்க்கத்திடமும் சுவறுவதற்கு வாய்ப்பாக தமிழ்த்தேசியம் சொந்த மண்ணில் நட்பு சக்திகளைத் தேடுவதைவிட்டு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் உறவுகொள்ளத் துடிப்பது அமைந்தது. எப்படியோ, சிங்கள மக்களிடம் இலங்கைத்தேசியம் என்பது மருந்துக்கும் இல்லாமல் போய்ச் சிங்கள இனத்தேசியமே முழுதாக நிறைந்துபோயுள்ளது என்பது மட்டும் உண்மை. எல்லோருமே பௌத்த – சிங்களப் பேரினவாதத்தை எற்பவர்கள் இல்லையென்றாலும் சிங்கள இனத்தேசியம் காரணமாய்ப் பேரினவாத ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாதவர்களாயுள்ளனர். பௌத்தமும் மக்களை ஒடுக்க உதவும் மதமாயினும் புத்தரின் கோட்பாடுகளின் அடிப்படை நல்ல அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருப்பது காரணமாய்ச் சிங்கள மக்களிடம் சிறந்த பண்புகள் அமைந்திருக்கக் காணலாம். இன்றைய பேரினவாதத்திடம் அந்த நல்ல அம்சங்களின் எந்த ஒரு கூறையும் காண இயலாது.
ஐஐஐ
இன்றைய கேடுகெட்ட பௌத்த - சிங்களப் பேரினவாத ஆளுகைக்குள் எல்லாளன் - கைமுனு வரலாற்றின் மீட்டுருவாக்கம் எவ்வாறு அமையும்?  துட்டகைமுனுவின் பெரும்படை முன்னேறி வருவதை அறிந்த எல்லாளன் தன்னைப் பாதுகாக்க மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைக் கேடயமாகச் சூழத் தூக்கியெடுத்துக்கொண்டு ஓடியோடி முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிப்போனான்.  இனி முடியாது என்ற நிலையில் எல்லோரையும் கண்களை மூடியிருக்கப் பணித்துவிட்டு உயிர்ப்பிச்சை கேட்டு கைமுனுவின் படையிடம் சரணடைந்தான்.  எல்லாளன் அகப்பட்டதை படையணி கைமுனுவிடம் அறிவித்ததுளூ  வெளிநாட்டில் இருந்தவாறு அதைக் கேட்டறிந்தவன் ஓடோடி வந்து தாய் மண்ணை முத்தமிட்டான்.  எக்காளமிட்டு தாண்டவமாடி எல்ளனின் மார்பில் ஓங்கியுதைத்தான்.  தலையைப்பந்தாடி மண்ணில் சாய்த்தான்.  போராட்டத்தையும் சொந்த மக்களையும் கொச்சைப்படுத்திய எல்லாளனை அவமதித்த அந்த மே பதினெட்டு நாளை ஆண்டாண்டு தோறும் கொண்டாடும் குதூகலிப்பில் மனுக்குலத்தையும் வரலாற்றையும் அவமதிப்பவனானகக் கைமுனு!
வரலாற்று நாயகன் கைமுனு இந்தக் கொலைவெறியர்களை மன்னிப்பானாகளூ  எல்லாளன் சமாதியில் சாந்தி நிலவுக!!
ஐஏ
மார்க்சியம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என எழுப்பிய கோசம் லெனினிசத்தால் 'உலகததொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களை ஒன்று சேருங்கள்'  என வளர்க்கப்பட்டது.  இன்றைய விடுதலையை நாடும் சக்திகளுக்கு வர்க்க ஒடுக்குமுறை மட்டும் முன்னால் இருக்கவில்லைளூ  ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் உள்ளன என்பதையே லெனினிசன் இவ்வகையில் காட்டியுள்ளதுளூ  ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் பிரிந்துசெல்லப் போராட அவசியமில்லை.  அவ்வாறு பிரிய முனைவது வேறொரு ஆக்கிரமிப்பாளருக்கு உதவுவதாய் ஆகலாம்.  வேறு வடிவங்களில் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க இயலும்.  கடந்த காலத்தில் தமிழ்த் தேசியம் ஐந்தாம் படையாக இருந்து அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு உதவியமை விடுதலைக்கு வழிவகுக்கவில்லை என்பதைத் தெளிவாக அனுபவித்துவிட்டோம்.  இனியும் அந்நியருக்கு உதவுவதில் காலத்தை வீணாக வேண்டுமா?
அவ்வாறில்லாமல் சிங்கள மக்களில் நட்பு சக்தியை தேடமுடியும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்க முடியும்?  இதற்கு யாழ்ப்பாணத்தில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் தந்த அனுபவம் போதுமானது.  ஒதுக்கப்படும் தேசம் போல மருதத்திணையால் ஒடுக்கப்பட்ட சாதிகளான தீண்டாமைக்கொடுமைக்கு உட்பட்ட மக்கள் அதே ஒடுக்கும் திணையிலிருந்து வந்த வெள்ளாளரையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு போராடியிருக்கிறார்கள்.  ஒடுக்கப்பட்ட மக்கள் 'சமூக – பண்பாட்டு ஏகாதிபத்தியமான' பிராமணியத்தாலும் சைவசித்தாந்த வெள்ளாளரியத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்ட ஒருவகைத் தேசங்களே.  இது குறித்துத் தனியாகப் பேசவேண்டும்.
சமூக – பண்பாட்டு ஒடுக்குமுறை நவீன தேசிய இனங்களுக்கும் ஏதோவொருவகையில் பொருந்தும்.  சாதியத்தகர்ப்பில் போல இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்திலும் பண்பாட்டுப் புரட்சி அம்சங்கள் இணைக்கப்பட்டாக வேண்டும்.  முழுதாக இனத்தேசியத்தில் மூழ்கிவிட்ட சிங்களத் தொழிலாளி வர்க்கத்தையும் சிங்கள மக்களையும் விடுதலை மார்க்கத்தில் வென்றெடுக்க ஏற்ற பண்பாட்டு இயக்க செயல் வடிவங்களை நாம் தேட வேண்டும்.  எமது தேசிய இன விடுதலைக்கு மட்டுமன்றி வர்க்க சமூகத்தகர்ப்புக்கும் அது அவசியம்.  ஒடுக்கப்படும் தேசமோ சாதியோ சமூக வர்க்கமாயுள்ளனளூ  அவை, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்தின் சுரண்டப்படும் வர்க்கங்களோடு ஐக்கியப்பட உள்ள வாய்ப்பைத் தவறவிட இயலாது!  ஆக்கிரமிப்பாளர்கள் வலு நேர்த்தியோடு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திவிடுகிறார்கள்.  நாம் என்ன செய்யப்போகிறோம்?

Thursday, February 23, 2012

கார்த்திகேசு சிவத்தம்பி : வக்கிரங்களும் மதிப்பீடும் ந. இரவீந்திரன்

கார்த்திகேசு சிவத்தம்பி : வக்கிரங்களும் மதிப்பீடும்
 ந. இரவீந்திரன்

      பேராசிரியர் கா.சிவத்தம்பி எனும் புலமைச்சிந்தனை ஆற்றல் தனது இயக்கத்தினை நிறுத்திக் கொண்டதன் பின்னர் ஒன்றரை மாதங்கள் கடந்தோடிய நிலை@ அவருக்கான அஞ்சலிகள் அவரது சாதனைகளை விண்ணதிர முழங்கின. அதன் கனங்காத்திரம் காரணமாக எதிர்க்கணைகள் கடும் விமர்சனத்தொனியோடு எதிரொலித்தன. இன்னும் மேலே, சகிக்க இயலாத வக்கிரங்களும் வெளிப்பட்டன. இத்தகைய பின்னணியில் அவர் குறித்த ஒரு மதிப்பீட்டினை மேற்கொள்வது தவிர்க்கவியலாதிருக்கும் பணி. முழுமையான மதிப்பீட்டுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டியிருக்கும். அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்தக்கட்டுரையைக் கருதும்வகையில் இதனை அமைத்துக் கொள்ள முயல்வேன்.
      இத்தகைய ஒரு மதிப்பீடு எத்தகைய தகுதிநிலைப்பட்டும் மேற்கொள்ளப்படவில்லை. அவரது சாதனைகள் சமூக இயங்காற்றலின் பாற்பட்டது@ அந்தப் புரிதலுடன் இயங்கிய அவரது உணர்வு நிலையிலிருந்து அதனை வெளிப்படுத்துவதில் எத்தகைய கர்வமோ உரிமைகோரலோ குறைமதிப்பீடோ அவசியமற்றது. அவ்வாறே விமர்சனங்களை அவரது செயற்பாட்டின் மீது மேற்கொள்ளும் போது தனிநபர் தாக்குதலாக ஆக்கவேண்டியதில்லை@ வக்கிரங்களாக அவை வெளிப்படும்போது வெறும் குரோதமும் பொறாமையும் தெரிகின்றனவே அல்லாமல் எந்தவகையிலும் சமூகப் பெறுமானம் உள்ளதாய்ப்படவில்லை. அவர் பெற்றுக்கொண்ட சர்வதேச தேசிய சமூக அங்கீகாரத்தின் வீச்சினைப் புரிந்துகொள்ளவும் சீரணிக்கவும் முடியாத சிக்கல்காரணமாகவே அவர் மீதான வக்கிரங்கள் வெளிப்படுகின்றன. அவரை வெளிக்கொணர்ந்த சமூக இயங்காற்றலில் அவரது ஆளுமைத்திறன் செயற்பட்டபாங்கின் பேறான தகுதியின் பாற்பட்டதே அவருக்கான சமூக அங்கீகாரம்.
      அவரைக் கொண்டாடும் போற்றுதல்களை இயல்பானது என ஏற்றுக்கொண்டு, அவர் மீதான விமரிசனங்களைத் தட்டிக் கழித்துவிட வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்;கமல்ல. வக்கிரநிலைத்தாக்குதலுக்கான காரணங்களை முன்னிறுத்தி, நியாயமான விமரிசனங்களை இனங்கண்டு, அவருக்கான தளம் குறித்த புரிதலைப்பெற இங்கு முயல்வோம். அரை நூற்றாண்டு தமிழியல் செல்நெறி மீதான ஒரு ஆளுமையின் தாக்குறவை இதன்வாயிலாக மதிப்பிட வேண்டிய பொறுப்பு எம் முன் உள்ளது.
      இந்த முன்னுரையைக் காணும் எவரும் கா.சிவத்தம்பி மீதான பக்தி விசுவாசத்துடன் எழுதப்படும் அஞ்சலிக்குறிப்பாக இதனைக் கருத வேண்டியதில்லை. மறைந்த பெரியார் ஒருவர் மேல் விமரிசனங்களைக் கிளற வேண்டாம் என்ற மரபுணர்வின் பாற்பட்டும் இக்கட்டுரை அமையாது. மரணத்துக்கு முதல் நாள் தனது குடும்பத்தினரிடம் அவர் கூறியதாயிருந்த விடயமாக அறியப்பட்ட வகையில், வாழ்ந்து சாதித்துச் செய்ய வேண்டியவற்றைப் பூரணமாக நிறைவுசெய்த திருப்தியுடன் இதயத்தின் இயக்கத்தை நிறுத்திக்கொண்டவர் கா.சி.
      அவ்வாறு தனது பணியென அவர் முன்னெடுத்த செயற்பாடுகள் பலவற்றின் மீதான அதிருப்தியுடனும், கடும் விமரிசனங்களுடனும் இருந்த ஒருவன் என்ற நிலைப்பாட்டுடனே அவர்மீதான நிதானமான மதிப்பீட்டினை இங்கு மேற்கொள்ள முயல்கிறேன். அந்தவகையில் அவருக்கான மிகை மதிப்பீடு எதுவும் வெளிப்பட இடமில்லை@ மாறாக, புறக்கணிக்கப்படுகிற எந்த அம்சமும் இருந்துவிடக் கூடாது என்ற கவனம் கொள்ளலே முனைப்பாகும்.
      அவரை 2006இன் இறுதிப்பகுதியில் சந்தித்த பின்னர் மூன்று வருடங்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து இருந்தேன். மூன்று வருடங்களின் பின்னர் காணச்சென்ற போது உரிமையுடன் கேட்டார், ஏன் கனநாளாக வரவில்லை என. அவரது நிலைப்;பாட்டைக் குறைசொல்லி விமரிசனங்களை முன்வைக்கும் சூழல் இல்லாதகாரணத்தால் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆயினும், அவரிடம் அணிந்துரை ஒன்றை வாங்கி அனுப்புமாறு கோரியிருந்த பெ.சு.மணி, உங்களுக்குச் சென்று சந்திப்பதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம் - எனக்காக நேரில் கண்டு அணிந்துரையைப் பெற்று அனுப்புங்கள் எனக்கேட்டிருந்தார்.
      பெ.சு.மணி உட்படப் பலரிடமும் கா.சிவத்தம்பி தமிழ்த்தேசியப் போரியல் செல்நெறிகுறித்து வெளிப்படுத்தும் கருத்துகளைக் கடும் விமரிசனப்படுத்தியிருக்கிறேன். பிற்போக்கான அரசியல் நிலைப்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட வலதுசாரித் தலைiமையின் வன்முறை வழிபாட்டின் மீது அவசியமான கண்டனங்களை முன்வைக்காமல் அவர்களை ஆதரித்து அவர் எழுதிக்கொண்டிருந்த நேரம் அது. அத்தகைய எதிர் மனப்பாங்கை ஓரங்கட்டி வைத்துவிட்டு பெ.சு.மணி கேட்டிருந்த காரணத்துக்காகவே 2009இன் பிற்கூற்றில் சென்று சந்தித்தேன். அதுநாள்வரை வராததை ஆதங்கத்துடன் கேட்டதுமுதல் அந்த அணிந்துரையை வழங்கியது வரையான அவருடனான தொடர்பாடல் நெஞ்சைவிட்டு நீங்காவகையில் அமைந்தது.
      அப்போது என்னுடைய எழுத்து முயற்சிகுறித்துக் கேட்டார். திருக்குறளில் கல்விச் சிந்தனைநூலுருப் பெற்றுள்ளமையைக் கூறி வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் விரைவில் வெளியிடப்பட இருப்பதைக் கூறினேன். அந்தநூல் எனது கலாநிதிப்பட்ட மேற்படிப்புக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு. அந்த ஆய்வில் ஈடுபட்ட ஆரம்ப நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். அவரது ஆலோசனையை நாடி அவரோடு கலந்துரையாடிய போது, திருக்குறளானது கல்வி வாயிலாக சமூகத்தைக் கட்டமைக்கும் நோக்குடையதாயள்ளதைப் புரிந்துகொண்டமையைக் கூறியிருந்தேன். ஆறு வருடங்களின் பின்னர் அதனைக் கூறி, அதுபற்றிப்பார்க்க வேண்டும் என்பதால் உடனடியாக திருக்குறனில் கல்விச் சிந்தனைநூலினைத் தருமாறு கேட்டார். நூலைப்பெற்றதும், வெளியீட்டில் தனது வாழ்த்துரையை வாசிக்கும்படி சொல்லிக் காத்திரமான ஒரு வாழ்த்துரை வழங்கியிருந்தார் (அது உண்மையில் எனக்காக மட்டும் வழங்கப்பட்டதில்லை@ எனது வழிகாட்டியாக அமைந்த பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தியைக் கௌரவிக்கும் வகையில்தான் அதனைத் தரவேண்டும் என வலியுறுத்தி வழங்கியிருந்தார்).
      இந்தச் சந்திப்புக்களின்போது நிறையவே உரையாட முடிந்தது. அடிக்கடி வந்து கதையுங்கோ, அதுவும் இல்லாமல் வெறுமையாக இருப்பது கடினமாயுள்ளது என்பார். அதுவரை வராததுபோன குற்ற உணர்வு மனதை வருத்தும் வண்ணமாய் அவரது கோரிக்கை அமையும். அப்போதும் அவர்குறித்த விமரிசனம் எதனையும் முன்வைக்க இயலாமல்தான் இருக்கும். அவ்வளவு விரக்கியுடன் அவரது அபிப்பிராயங்கள் இருந்தன.
      அடிப்படையான தமிழியல் சிந்தனை தொடர்பாக மிகுந்த ஆளுமையுடன் உரையாடும் அவர், விரக்தியுடன் உரையாடுவது தன்மீதான கடும் விரிசனங்கள் பற்றிக் கூறும்போதாகும். இந்தத் தாக்குதல் எல்லாத்தையும் பார்த்தால் உண்மைதான், அப்படி எதைச் சாதித்தோம், உருப்படியாக எதுவும் இல்லாததுக்கு இந்தத் தாக்குதல்கள் வேண்டியதுதான் என்பதுபோல் இருக்கும்என்றார். தன்னால் தாங்க முடியாததாய் இருப்பதை வெளிப்படுத்துவே இதனைக் கூறினார்.
      இன்றைய தாக்கதல்களால் துவண்டு போவது அவசியமில்லை எனக்கூறி, கைலாசபதி சிவத்தம்பி ஆகியோருக்கான புகழ் என்பது எதாயினம் பிரசார உத்திகளால் வலிந்து எற்படுத்தப்பட்டதல்ல, அன்றைய எமது சமூகத்தின் சாதனைகளைத் தமிழியல் தளத்தில் பூரண ஆளுமையுடன் அவர்கள் வெளிப்படுத்தியதன்பேறு அது என எப்போதும் நான் சொல்லிவருகின்றேன் என்பதை வலியுறுத்தினேன். அவருக்கான ஆறுதல் வார்த்தையல்ல அது. அவரது சாதனைகள் பற்றிப் பலரும் அவரிடம் வெளிப்படுத்தவே செய்வர். அவரளவில் தனது பங்களிப்புகள் மற்றும் தாக்குதல் விமரிசனம் என்பனவற்றிடையேயான சமநிலையைக் காணும் மனப் போராட்டம் தொடர்ந்தபடி இருந்திருக்கும்.
      ஒரு வருடத்தின் முன்னர் கோவை ஞானி பேராசிரியரிடமிருந்து அவரது தமிழ்ப் பணிகுறித்து ஆக்கம் ஒன்றினைப் பெற்று அனுப்புமாறு கோரியிருந்தார். அக்கடிதத்தினைப் படித்ததும் அவர் கூறியது தமிழுக்கு நான் ஏதோ பணிசெய்தேன் என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். தமிழைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தோமே அல்லாமல் அதற்காகப் பெரிதாக எதோ செய்தோம் என்பது தப்பு. தமிழியல் ஆய்வில் என் அனுபவங்கள் குறித்து எழுத இயலும்என்பதாகவே அமைந்தது. அதை அவர் வெறும் அவையடக்கமாகக் கூறவில்லை. கோட்பாட்டு நிலையில் ஒருவரது சமூக மற்றும் பண்பாட்டுச் செயற்பாடுகளின் வரம்பினைத் தெளிவாகப்புரிந்து கொண்ட வரையறையுடனேயே கூறியிருந்தார் (அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு எனது உதவியைக் கோரியிருந்தார்@ அவர் சொல்லச் சொல்லக் கேட்டு எழுத வேண்டும். அந்த நேரத்தின் எனது வேலைப்பழு அதற்கு நேரம் ஒதுக்க அனுமதிக்க மறுத்ததால் பெறுமதிமிக்க ஒரு ஆக்கத்தை வெளிக்கொணர இயலவில்லை).
      இதன்போது செம்மொழி மாநாட்டுக்காக அவர் தமிழ்நாடு (கோயம்புத்தூர்) சென்றிருந்தார். தமிழியலின் தலைமககனாக அவர் உள்ள நிலையில் ஆய்;வரங்கத் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செல்வது தவிர்க்கவியலாததே@ அந்தவரம்பை மீறித் தமிழக அரசியல் சகதியில் அகப்பட்டுபோனதால் பிந்திய கடும் தாக்குதல்களுக்கும் சேறுபூசல்களுக்கும் ஆளானார். கலைஞர் உலகத் தமிழினத் தலைவர்என்று பேசிய அன்று செய்தியைப் பார்த்ததும் தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்த எம்மோடு தொலைபேசித் தொடர்பில் திட்டித்தீர்த்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் பேராசிரியரைப் பெரிதும் மதித்தவர்கள் அவரிடமுள்ள இரு அம்சங்களையும் பார்க்க வேண்டும்என அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டியிருந்தது.
      முன்னதாக விடுதலைப் புலிகளை விமரிசனப் பார்வைக்கு இடம் வைக்காமல் ஆதரிக்கிறார் என நாங்கள் விலகல் கொண்டிருந்தோம் (அரசியல் புரிந்துணர்வடன் புலிகளின் தவறுகள் குறித்து அவர் அறியாமல் இல்லை@ முன்னர் அதனைக் கூறியிருக்கிறார். பிற்கூறில் புலிகளின் சரிவை ஏற்க மனமற்றவராக விமரிசன வெளியை அடைத்துக்கொண்டார். கெடுகுடிக்கான பண்புகளுடன் சொற்கேளாத பரிமாணங்களோடு புலிகள் செயற்பட்டார்கள் என்றபோதிலும் சிவத்தம்பி எனும் ஆளுமை தமிழ்த் தேசியத்தின் தவிர்க்கவியலாத இயங்காற்றலை ஆதரித்த அதே வேளை தலைமையின் தவறுகளையும் வெளிப்படுதியிருக்க வேண்டும்). கண்மூடித்தனமாக புலிகளை ஆதரித்தவர்கள் அப்போது சிவத்தம்பி பேரறிஞர் எனக்கொண்டாடினார்கள். செம்மொழி மாநாட்டில் கலைஞரை உலகத்தலைவராக அறிவித்துக் கொண்டவுடன் எந்தத்தயக்கமும் இல்லாமல் பேராசிரியருக்கு துரோகிப்பட்டம் சூட்டிக்கொண்டனர். அவர் மீது வக்கிரபத்தியுடன் தாக்குதல்களை முன்வைப்பவர்கள் இத்தகைய நிதானங்கெட்ட பிற்போக்கு கும்பல் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.
      அவர் மீதான விமரிசனங்களின் இரு தளங்கள் இங்கு தெளிவாகின்றன. தமிழ்த்தேசியமும் அதன் இயங்காற்றலும் தொடர்பாக அவர் சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்;லை என்பது ஒரு தளம். இன்னமும் அதே தவறான பிற்போக்குத் தேசியவாதம் உலக மேலாதிககத்தின் ஐந்தாம்படையாக செயற்பட்டபடி கண்மூடித்;தனமான ஆதரவைத் தமிழ்த் தேசியத்துக்கு வழங்கவில்லை என்பதற்காக வக்கிரங்களை அள்ளிவீசும் மற்றொரு தளம்.
      இன்னொரு தளத்திலான விமரிசனம் எண்பதுகளின் நடுக்கூறிலிருந்து அவர்மீது செயற்பட்டுவந்தது. மக்கள் இலக்கியச் செல்நெறியொன்றை முற்போக்கு இலக்கிய இயக்கம் முன்னேடுத்தபோது முன்னர் அதற்கு அடித்தளமிட்டவர்களில் வலுவான ஒரு சக்தியாக விளங்கிய அவர் பின்னர் பலவீனப்படுத்தும் கருத்துகளை வெளிப்படுதிவந்தார். அழகியல்வாதிகளின் தாக்குதல்களால் பலவீனப்பட்ட அவர் முற்போக்குத் திறனாய்வாளர் என்ற பண்பிலிருந்து மாறி அழகியல்வாதிக்குரிய நிலைப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கினார். இது குறித்து பின்னால் பார்க்க இயலும்.


ஐஐ
      எண்பதுகளில் ஈழத்தமிழ்த் தேசியம் முனைப்புறத் தொடங்கியது. ஐம்பதுகளின் நடுக்கூறிலிருந்து முற்போக்கு இலக்கிய இயக்கம் இலங்கைத்தமிழின் முதன்மைச் செல்நெறியாக முற்போக்கு இலக்கிய இயக்கம் இலங்கைத்தமிழின் முதன்தைச் செல்நெறியாக விளங்கிய நிலை மாற்றம்பெற்று ஈழத்தமிழர் வாழ்விலும் இலக்கியத்திலும் தாமிழ்த்தேசியம் முதன்மை பெறலாயிற்று. ஈழத் தமிழ்த் தேசியம் குறித்து நிதானமான பார்வையை முற்போக்கு இயக்கமும் சிவத்தம்பியும் முன்னர் முழுநிறைவாக முன்வைக்கவில்லை என்பது உண்மைதான்@ அதற்காக முற்போக்கு இயக்கம் பாரிய தவறுக்குரிய என்றும் தமிழ்த்தேசியம் அப்பழுக்கற்ற சரியான மார்க்கத்துக்குரியது என்றும் பொருளாகாது. உண்மையில் முற்போக்கு இயக்கம் தமிழினத் தேசியம் குறித்து சரியான கணிப்பைப் பெறத்தவறியது என்ற குற்றச்சாட்டுத்தவிர்ந்த எனைய பல அம்சங்களில் மகத்தான சாதனைகளை எட்டியிருந்தது (அதன் தமிழியல் தள வெளிப்பாடுகளாக கைலாசபதி சிவத்தம்பி ஆகியோரும், படைப்பாளுமையில் டானியல், டொமினிக் ஜீவா, என்.கே.ரகுநாதன், நீர்வைபொன்னையன், தெணியான், செ.யோகநாதன், பெனடிக்ற்பாலன், நந்தினி சேவியர், பிரேம்ஜி, தணிகாசலம் எனத்தொடர்ந்து நீளும் பட்டியலும், அரசியல் ஆளுமைகளாய்ப் பலரும் உள்ளனர்). மாறாக ஈழத்தமமிழ்த் தேசியம் ஏற்படுத்திய அவலங்களோடு ஒப்பிடுகையில் சாதனை கழித்தல் பெறுமானத்தையே பெறும்.
      இருப்பினம் ஈழத்தமிழ்த் தேசியம் குறித்த சரியான கணிப்பு எட்டப்பட வேண்டும். இன்றும் முற்போக்கு சக்திகளிடம் இது குறித்த பூரண தெளிவு எட்டப்பட்டதாய் இல்லை. எண்பதுகளில் பேராசிரியரும் நிதானமாக அணுகுவதாய் இல்லாமல், தமிழ்த்தேசியத்தின் முன்னால் சரணடைந்தார். முற்போக்கு செயற்பாட்டின் கடந்தகாலத்துக்காக பாவமன்னிப்புக்கோரும் பலவீன நிலை அவரில் வெளிப்பட்டது.
      தொண்ணூறுகளின் நடுக்கூறில் கொழும்பில் யாழ்ப்பாணச் சமூகத்தைப் புரிந்து கொள்வதுபோன்றதான மாநாடு (இரண்டு நாட்கள் என்பதாக ஞாபகம்) நடந்தது. மேற்படியான பாவமன்னிப்புக் கோரல் தொனியில் பேராசிரியர் பேசியிருந்தார்@ கருத்துரையில் பேராசிரியர் சிவத்தம்பி இன்று தனது பாதையிலிருந்து தடம்புரண்டு போகலாம், ஆயினம் கைலாசபதி சிவத்தம்பி போட்டுத்தந்த பாதையில் தொடர்ந்து செல்கிறவர்கள் ஏராளமாய் இருக்கிறோம்என்பதாக நான் பேசியிருந்தேன். அவ்வாறு பேசிய பின்னர் மேடையை விட்டு இறங்கி எனது இருக்கைக்கப் போகிறபோது அவரைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. எனது கையைப்பிடித்து அருகில் அமரச்செய்து, “காலையில் நான் இல்லாதபோது என்னைப்பற்றி நல்லதாகப் பேசினீர்கள் என்று கேள்விப்பட்டேன்எனச் சொல்லித் தனது சந்தோசத்தையும் நட்புறவையும் வெளிப்படுத்தியிருந்தார்.
      முன்னதாக காலையில் சாதியப் பிரச்சனை தொடர்பில் பேராசிரியரைத் தாக்கி வ.ஐ.ச.ஜெயபாலன் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். தமிழ்த் தேசியத்துக்குள் தலையை நுழைக்கிறபோது சாதிய ஆய்வை ஓரங்கட்டுவது பேராசிரியருக்குத் தவிர்க்கவியலாததாயிருந்திருக்கும். அவரது போதாமையைக் குறிப்பிட்ட nஐயபாலன் அப்போது தமிழ்த்தேசியத்துடன் சாதிய முரண்களையும் ஆய்வுசெய்துவந்தார். அதற்கான கருத்துரையைச் சொன்னபோது இன்று வ.ஐ.ச.ஜெயபாலனின் ஆய்வுக்கான அடித்தளத்தைப் போட்டுத்தந்தவர் போராசிரியர் சிவத்தம்பிதான்@ அவரது போதமையைச் சொல்கிறபோது யாழ்ப்பாணச் சமூகச் சாதிய இயங்காற்றல்பற்றி முன்னதாக ஆழமாக ஆய்வுசெய்த அவருடைய பங்களிப்பை மதித்தபடிதான் விமரிசனத்துக்கு உட்படுத்த வேண்டும்என்று பேசியிருந்தேன் (அவரது இந்தப்பங்களிப்புக் குறித்து பின்னால் பார்க்கலாம்).
      அவரது பாதையை நாம் தொடர்கிறோம் என வலியுறுத்திய அதேவேளை அவரது தமிழ்தேசியம் மற்றும் அழகியல்வாதம் குறித்த தடம்புரளல் பற்றிய விவாதங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துவந்தோம். ஆழகியல்வாதத்தினுள் அமிழும்போது கைலாசபதியின் விமரிசனக் கொடுங்கோன்மைபற்றி அவர் பேசியது குறித்துக் கடும் விவாதங்கள் எழுந்தன. ஏதிர்நிலையில் கூறவில்லை எனக்கூறிய அதேவேளை முற்போக்கு இலக்கியம் அழகியல் குறித்து அக்கறை கொள்ளாதது தவறு என்பதாகவே தொடர்ந்து கருத்துரைத்தார். மக்கள் இலக்கியம் என்பதாகவோ அதற்கேயான அழகியல் குறித்தோ அவரால்சிந்திக்க இயலவில்லை.
      அதன் காரணமாய், முற்போக்கு இலக்கிய எழுச்சிக் காலத்தில் சோஷலிஸ யதார்த்தவாதம்பற்றிப்பேசியவர், முற்போக்கு அலை ஓய்ந்து உலக மயமாதலின் ஐந்தாம்படை தேசியவாத முனைப்பில் அதற்கும் பாவவிமோசனம் தேடவேண்டியவரானார். சோஷலிஸ யதார்த்தவாதத்தை இங்கும் நாம் பேசியிருக்கும்என்பதாக கருத்துரைத்தார். சோஷலிஸ யதார்த்தவாத உள்ளடக்கம் வேறு பரிமாணத்துக்குரியது என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும் அவற்றை உள்வாங்கும் நிதானம் அவரிடம் இருக்கவில்லை. இவற்றுக்கு அப்பால் மக்கள் இலக்கியம் - அதற்கான கோட்பாட்டு உருவாக்கம் என்பவற்றுக்கு எப்படி அவரால் பங்களித்திருக்க இயலும்?
ஐஐஐ
      தொடர்ந்தும் மார்க்சியச் சிந்தனையை முன்னெடுப்பதாக அவர் நம்பியபோதிலும் பிற்போக்குவாதம் மேலோங்கிய சூழலில் மார்க்சியத்தைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது எவ்வகையில் சாத்தியம் என்பது குறித்த தேடலில் ஈடுபட அவருக்கு அவகாசம் இருக்கவுமில்லை இயலவுமில்லை. முந்திய அவரது சாதனையில் பெற்ற அங்கீகாரத்தை காட்டிக்கொடுக்கும் பிற்போக்குத் தேசியவாதமும் அதன் இலக்கியக் கோட்பாடாக அழகியல்வாதமும் தமக்குரியதாகப் பயன்படுத்தும் களங்களை வழங்கவும் அதற்கே அவரது அவகாசம் கசியவேண்டியதானது. இருப்பினம், மார்க்சியத்திலிருந்து விலகல்களுக்கு ஆளானாரேயன்றி, அதற்கு எதிராகவோ பிற்போக்குவாதி எனும் நிலைக்கோ சென்றாரில்லை என்பது கவனிப்புக்குரியது.
      ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். ஐந்தாறு வருடங்களின் முன்னர் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழியலில் போராசிரியர் சிவத்தம்பிஎன்பதாக மூன்று நாட்கள் தொடர்ச்சியான ஆய்வரங்கை நடாத்தியது (இது மிகுந்த கவனிப்புக்குரிய அம்சம். தமிழின் இயல்பறிந்தவர்களுக்கு வாழும் தமிழறிஞருக்கு இத்தகைய முக்கியத்துவத்தை ஒரு பல்கலைக்கழகம் கொடுத்தது என்பது எத்தனை  வியப்புக்குரியது என்பது புரியும்). அங்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையில் அ.மார்க்சின் கட்டுரை முதல்நிலைக்குரியது. இரு அம்சங்கள்  அ.மார்க்ஸ் கட்டுரையில் படைப்புக்குரியன. ஓன்று, தன்னைப் பின்நவீனச்சிந்தனைப் படைப்புகளுக்கு அறிமுகப்படுதிய அத்திசைக்கு ஆற்றுப்படுத்திய போராசிரியர் அவ்வழியில் வளரத்தவறினார் என்பது@ மற்றையது ஒரு தசாப்தமாய்ப் பின்நவீனத்துக்குள் போன வேகத்தில் மார்க்சியத்தால் பயனில்லை என்பதுவரை போய், ( நான் அறிந்தவரை இங்கேதான் முதன் முதலில்) மார்க்சியமே சமூகப்பிரச்சனைகளுக்கான தீர்வைத் தரும் என்பது அ.மார்க்ஸ் முன்வைத்த கருத்தாய் இருந்தமை.
      பின்நவீனத்துவாதியாகப் பயணித்த போதிலும் மார்க்சிய அடிப்படை அ.மார்க்சை மக்கள் நலநாட்டத்துடன் செயற்படத்தூண்டி, மார்க்சியத்தின் அவசியத்தை வலியுறுத்த ஆற்றுப்படுத்தியுள்ளது. அவரளவுக்கு பின்நவீனத்து வாதத்துக்குள் மூழ்காதபோதிலும் கரையில் நின்றபடி அதன் சாயலால் மார்க்சியப்; பார்வையிலிருந்து தடம்புரளல்களுக்கு அளாகிறவராக சிவத்தம்பி இருந்துள்ளார். இவர்கள் மார்க்சியத்தின் அவசியத்தை வலியுறுத்துகிற அளவில் பல அம்சங்களில் கவனிப்புக்குரிய இடத்தைத் தக்க வைத்தனராயினும் அதனின்றும் எற்பட்ட விலகலினால் தவறான அணுகுமுறைகளைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
      உலகமயமாதலுடன் மேலோங்கிய பிற்போக்குவாதத்துக்கான மற்றொரு புதிய மோஸ்தரான பின்நவீனத்துவாதனாகப் போற்றப்பட்ட பின்னணி இத்தகைய துன்பியல்களுடனானது என்ற  அவலம் மறக்கப்படக்கூடாதது. காலத்தோடு அடிபட்டுப்போகிற துரும்பாக அன்றி எஃகு போன்ற உறுதியடன் மார்க்சிய நிலைப்பாட்டில் தளம்பாமல் நின்று சரியான வழிகாட்டலைச் சமூக மாற்ற சக்திகளுக்கு வழங்கியிருப்பின் இன்று பெற்றுள்ள தமிழியல் தலைமகன் என்ற மகுடம் சாத்தியமற்றதாகியிருக்கும். மாறாக, இதனைப் பெறவதற்காகக் காலம் வழங்கியிருக்கக்கூடிய மதிப்பீடுகளை இழக்கும் கறைகளைத் தனதாக்கிக்கொண்ட அவலம் நேர்ந்துள்ளது.
      அவர் தமிழியலில் பங்களிப்பு நல்கிய அரைநூற்றாண்டுக் காலப்பகுதியில் முந்திய இருபத்தைந்து வருடங்கள் தலைசிறந்த மார்க்சியச் சிந்தனையாளராக விளங்கி மகத்தான பங்களிப்புகளை நல்கியுள்ளார். பிந்திய இருபத்தைந்து வருடங்களில் மார்க்சியத்திலிருந்து விலகிச்சென்று தமிழியல் தலைமகன்”;படம்டத்தைச் சூடிக்கொண்டார். ஆயினம் அவருக்குள் இயங்கிய மார்க்சியத்தின் பண்புகள் சிலவாயினும் தொடர்ந்து செயற்பட்டதன் பேறாகப் பிற்கூற்றில் மார்க்சியராகத் திகழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை.
      குறிப்பாக அவரது பிற்காலப்பகுதியில் தொடக்கம் பெற்று வளர்ந்த மட்டக்களப்பின் கிழக்குப் பல்கலைக்கழகம்அரங்கியல் - கூத்து நாடக இயலில் சாதனைகள் படைப்பதற்கு தொண்நூறுகளில் அங்கு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றிய சிவத்தம்பி அற்புதமான வழிகாட்டியாக விளங்கியுள்ளார். இது குறித்த அச்சாதனையை முன்னெடுத்த மௌனகுரு தினக்குரல்நாளிதழில் தொடர்கட்டுரையாக விளக்கமாக எழுதியுள்ளார். தமிழ்ச்சினிமா குறித்த பேராசிரியரது கட்டுரைகள் (சிவாஜி கணேசன் குறித்த மதிப்பீடு) விதந்துரைக்கத்தக்கன. தமிழ்நாவல் - திறனாய்வு என்பவை தொடர்பில் அவரது அழகியல்வாதம் பாதகங்களை ஏற்படுத்திய போதிலும் அரங்கியல் - சினிமா தொடர்பான பார்வையில் அந்தப்பலவீனம் வெளிப்படாமல் ஆளுமையுடன் அவரால் கருத்துரைக்க இயலுமாகியுள்ளது. 
ஐஏ
      அவர் மீதான வக்கிரங்கள் செல்லுபடியற்றன என்றாலும் விமரிசனத்துக்கான அம்சங்கள் இவ்வகையில் காணப்படுகின்றனஇவற்றைக்கடந்து அவரது சாதனைகள் மேலோங்கியியுள்ளன என்பதே கவனிப்புக்குரியது. அவரது சாதனைகள் மேலோங்கியுள்ளன என்பதே கவனிப்புக்கரியது. அவரது மறைவைத்தொடர்ந்து வெளியான பல கட்டுரைகள் அவற்றை வெளிப்படுத்தியுள்ளன. இங்கு சுருக்கமாக அவைகுறித்துத் தொட்டுக்காட்டுவது போதுமானதாகும் (இவை விரிவான ஆய்வுக்குரியன@ இக்கட்டுரையின் அமைவு கருதிச் சுருக்கமாகக் காட்டப்படுகிறது).
      சிவத்தம்பியின் தனித்துவப் பங்களிப்பில் முதன்மையாக வலியுறுத்த வேண்டிய திணைக் கோட்பாட்டில் அவர்காட்டிய ஈடுபாடும் சாதியம் குறித்த ஆய்வுக்கான தொடக்கனராக அமைந்தமையும் ஆகும். ஏற்கனவே பார்த்ததுபோல மாநாட்டு நிகழ்வில் வெளிப்பட்டதைப்போல, தலைசிறந்த தொடக்குனராக விளங்கியபோதிலும் வளர்த்தெடுக்கத்தவறிய போதாமை இருந்துதொலைத்துவிட்டது. பிற்கூறில் மார்க்சியத்திலிருந்து ஏற்பட்ட விலகலினால் தொடக்குனராகப் பங்களித்த சாதனையைக் குறைமதிப்பீடு செய்யமுடியாது.
      திணைகள் படிமுறை வளர்ச்சி பெறுவதனை மரபுக்கருத்தை விரித்துரைத்த போதிலும், தமிழகத்தில் சமநிலையில் நான்கு திணைகள் நிகழ்ந்துள்ள ஐயப்பாட்டையம் அவர் வெளிப்படுத்ததத்தவறவில்லை. அதன் தொடர்ச்சசியாக குறிஞ்சியின் வணிக வாய்ப்பைக் கண்டிருக்க வேண்டும் விவசாய எழுச்சிக்கு முந்திய வணிகமும், வீரயுகத்திலேயே (சங்ககாலத்திலேயே) வணிகமும் வணிககக் கருத்தியல்களான ஆசீவகம் - சமணம் - பெத்தம் என்பன நிகழ்ந்தமையையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவற்றைக் காணத்தவறினார். அது குறித்து அவரோடுவிவாதித்ததுண்டு. வலிமையாக மறுக்காத போதிலும் சந்தேகங்களையே வெளிப்படுத்தினார். இரு பெருங்கட்டுரைகள் சந்தேகங்கள் அவ்வகையில் அர்த்தமற்ற தளம்பல்களுடன் சந்தேகங்களை வெளிப்படுத்தின.
      அவரது ஆழமான ஆங்கிலப் புலமை இங்கு அவரைப் பலவீனப்படுத்தும் தடையாக இருந்துள்ளது.விவசாயத்துக்கு முந்திய வணிகம் பற்றிய ஆய்வு ஏதும் ஆங்கிலத்தில் இருந்திருப்பின் கண்டிப்பாக திணைக்கோட்பாட்டை இன்னொரு தளவீச்சடன் வெளிப்படுத்தியிருப்பார். தமிழின் துயர், அது தமிழகத்துக்கு மட்டுமே வாய்த்த ஒர் சிறப்பு அம்சமாய் இருந்து தொலைத்தது. இருப்பினம், இப்புதிய விவாதத்;தை நிர்மூலமாக்கும் எந்தச் செயலிலும் அவர் ஈடுபடவில்லை. தலைசிறந்த ஆய்வறிஞருக்கு இருக்க வேண்டிய பண்பின் பிரகாரம் ஐயப்பாட்டைக்கிளர்த்திப் புதிய ஆய்வுச்செல்நெறி விடைதேடவேண்டிய கடப்பாங்கினை ஏற்படுத்தித்தந்தமையாகம்.                                                  
      திணைக் கோட்பாட்டின் அருட்டுணர்வு காரணமாய் எமது சமூகத்தை வெறும் வர்க்க பேதமாய் மட்டுப்படுத்திப் பார்க்காமல் சாதி அமைவுகள் குறித்து ஆய்வுக்குட்படுத்தினார் சிவத்தம்பி. யார் இந்த யாழ்ப்பாணத்தான்?” என்ற அவரது கட்டுரை இவ்விடயத்தில் முக்கியத்துவம்மிக்கது. யுhழ்ப்பாணச் சமூக அசைவியக்கத்தில் சாதிகளின் வகிபாகம் குறித்த ஆய்வுத் தொடக்கத்தை அவர் ஏற்படுத்தியதன் பேறாக ஈழத்தமிழ்தேசியம் யாழ் வெள்ளாளத் தேசியமாக உள்ளமையை இன்றைய பல ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. திராவிடர் இயக்கச் செல்நெறி குறித்த அவரது ஆய்வுகளும் பெரும் தாக்கத்;தை ஏற்படுத்தின. தமிழினத்தேசியம் குறித்த சரியான புரிதலை எட்டுவதற்கு அவர் தொடக்கிவைத்த தளங்கள் உறுதியாய் உள்ளன.
      ஐம்பதுகளின் பிற்கூறிலிருந்து மண்வாசைன இலக்கியம், தேசிய இலக்கியம், மரபுப்போராட்டம் என்பன முனைப்படைந்த காலம் அவரது சமூக கலை - இலக்கியப் பங்களிப்பின் தொடக்கமாக அமைந்தது. அந்தக் களங்கள் ஒவ்வொன்றிலும் புலமைத்திறனோடு பங்களித்ததன் பேறாகவே தமிழியலின் கவனிப்புக்குரியவராக முகிழ்த்தார் என்பதை அறிவோம். அவரைக் காத்திரமான மார்க்சியத் திறனாய்வாளராக வெளிப்படுத்திய காலங்கள் அவை.
      இயக்கச் செல்நெறியில் சில விலகல்கள் தென்பட்டபோதிலும் அடிப்படையில் மக்கள் விடுதலைக்காக கலை - இலக்கிய பண்பாட்டுச் செயற்பாடுகள் பங்களிக்க எற்றமார்க்கத்தை வகுத்து வழங்கிய உன்னதமான தமிழியல் சிந்தனையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. 

நன்றி_ புதுவிசை செப் 2011

Wednesday, February 15, 2012

இரண்டக நிலையும் இரண்டு மனமும் - ந.இரவீந்திரன்

இரண்டக நிலையும் இரண்டு மனமும் - ந.இரவீந்திரன்

நாற்பது ஆண்டுகளின் முன்னர் எங்களுர் பாட்டுப்பெட்டிகளில் எல்லாம் ஒலித்த ஒரு பாடல் 'இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன் - நினைத்துவாட ஒன்று, மறந்து வாழ ஒன்று'ளூ இரண்டு என்றால் பன்மை என்பதால் மனங்கள் என்றல்லவா வந்திருக்க வேண்டும் என்று எவரும் கேட்பதில்லை. பாட்டை அனுபவித்துவிட்டு எவராவது இலக்கண ஆராய்ச்சியில் இறங்குவார்களா எனக் கேட்கலாம். அப்படி அபசுரமாய்ப் பல விடயங்களை வெட்டி ரணகளம் பண்ணுவதாய் இல்லாமல் எமது சமூகம் இயங்கிவந்ததில்லை. தவிர, நாரதர் கலகம் நன்மைக்கே என்றவகையில் ரணகளப்படும் போராட்டங்கள் வாயிலாக அநேகமாய் நன்மையான முடிவுகளை நாம் பல சந்தர்ப்பத்தில் எட்டியுமிருக்கிறோம்.

     அதெப்படி, சண்டை மூட்டுவதே கெட்ட நடத்தை – அது நன்மையில் முடிவதாவது? அதுவே இயற்கை. எங்கும் கெட்டது ஒட்டுமொத்தமாய் ஒரேயிடத்திலும், நல்லதெல்லாம் பிறம்பாய்த் தனியிடத்திலும் இருந்துவிடுவதில்லை. ஒவ்வொன்றிலும் கெட்டதும் - நல்லதும் உடனுறைவன, கெட்டது ஒருநிலையில் நல்லதாகவும் ஆகிவிடலாம், சரியாகக் கையாளத் தவறுகையில் நல்லதே கெட்டதாயும் மாறிவிடவும் ஏற்றதாயே உலகப் போக்கு அமைந்துவரும்.

     இது, இது, இதுவே அந்த இரண்டு மனம். இரண்டாய் இருந்தும், ஒன்றாய் - ஒரு மனமாய் எம்முள் உறைவது. நினைப்பதற்கு அவசியமற்றது தானே மறந்துபோயிருக்கும். மறக்க நினைக்கையிலேயே அது நினைக்கப்படுவதாகிவிடுகிறதே! மறக்கவும் முடியாமல், நினைவுச் சுமையைத் தாங்கவும் இயலாத தவிப்பின் அங்கலாய்ப்பு அந்தவரிகள்.

     ஒரேயிடத்தில் எதிர்நிலைகளின் இருப்புக்கு மற்றொரு உதாரணமாய் இருபது வருடங்களின் முன்னர் வந்த 'நாயகன்' படக்காட்சி ஒன்று உண்டு. நாலுபேர்களுக்கு நல்லது செய்வதற்காக சட்டமீறலோடு கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் தனது கரங்களில் சட்டத்தை எடுத்துச் செய்யும் சமூக மீறல்கள் காரணமாக மகளிடமிருந்து எதிர்ப்பை சந்திப்பான். அவனை நிராகரித்து வெளியேறிக் கணவனோடு வாழும் மகள்வழிப் பேரன் தாத்தாவிடம் கேட்பான், 'நீங்கள் நல்லவரா, கெட்டவரா?'

மக்களால் நேசிக்கப்படும் அந்த நாயகன் நல்லவன்ளூ மகளினால் சட்டமீறல் குற்றவாளியாகப் பார்க்கப்படும் அதே ஆள் கெட்டவன். தன்னை உணர இயலாத அங்கலாய்ப்போடு பேரக் குழந்தையிடம் அந்த நாயகன் சொல்வான்: 'தெரியலியேப்பா!'

அவலச் சுவையின் உச்சமாய் இருக்கும் அந்தக்காட்சியை மீட்டுருவாக்கி விவேக் நகைச்சுவையோடு 'தெரியலேப்பா' என்பதும் பிரபலம். அதீத துயர் இவ்வகையில் சிரிப்புக்குரியதையும் தன்னுள் கொண்டிருப்பதைப் போலவே ஒருவருக்குள் நல்லதும் கெட்டதும் பங்குபோட்டு குடித்தனம் பண்ணக் காண்கிறோம். அது அந்தப் படைப்புக்கு மட்டும் உரியதல்ல, உண்மையில் ஒவ்வொருவரிடமும் அந்த இரு அம்சங்களும் இருப்பதே நிதர்சனம்.

எமது பண்பாடு கடவுள் - அரக்கர் என்ற எதிர்நிலைகளைக் கட்டமைத்திருப்பதால் ஒவ்வொருவரையும் கடவுளாகவோ அன்றி அரக்கராகவோ (சாத்தானாகவோ) பார்க்கப் பழகிவிடுகிறோம். மாறாக, ஒருவரிடமே இரு அம்சங்களும் சாத்தியமென உணர்ந்து, கடவுள் குணம் வெளிப்படுவதை ஊக்கப்படுத்துவதும், அரக்க குணம் மேலோங்குகையில் தயங்காமல் எதிர்ப்பதும் அவசியம். ஒருவரை எதிர்க்க முற்படுகையில் அவரிடம் நல்லது எதுவும் இருக்காது எனக் கருதுவதோ, ஏற்கப்படும் ஒருவரை விமரிசனப் பார்வை ஏதுமின்றி கண்மூடித்தனமாகப் பக்தி விசுவாசம் செய்வதோ ஏற்புடையதல்ல.

இந்த உண்மை தனிநபர்களுக்கு மட்டுமல்ல, ஆட்களின் கூட்டாக உருவாகும் அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியது. என்மீது தாக்குறவைக் கொண்டுள்ள எனது ஊரின் இரு அமைப்புகள் சார்ந்த அனுபவப் பகிர்வூடாக இந்த விடயம் தொடர்பில் அலச எண்ணம்.

தலைப்பில் இரண்டு மனம் என்பதோடு இரண்டக நிலை என்பதையும் சேர்த்திருந்தபோதிலும் இங்கு அதுபற்றி அதிகம் பேசப்போவதில்லை. அவ்வாறிருந்தும் அது இடம்பெறக் காரணம் இரண்டக நிலையாக இல்லாத இரண்டு மனம் சார்ந்த இயக்கச் செல்நெறியின் தன்மையை அழுத்த விரும்புவதை உணர்தலே.

இரண்டு மனம் என்பது எதிர்நிலைகள் தமக்குள் மோதி, பலமானது -  நல்லது மேலெழுவது வாயிலாக மானுடம் மேல்நிலை எய்திவருவதைக்காட்டும் ஒரு பண்புநிலை.

இரண்டக நிலை என்பது செயலற்ற முடக்கத்துக்கு இட்டுச் செல்வது. இருதலைக்கொள்ளி எறுப்பு என்பதாக ஒரு மரபுத்தொடர் உண்டு. இரு திசையிலும் போக இயலாத நிலையை உணர்த்தும் தொடர் இது.

இன்றைய உலகமயமாதல் சூழலில் இத்தகைய இரண்டகநிலை ஏற்பட்டு பல அமைப்புகளிலும் எமது தேசிய இனத்திலும் குழப்பங்களை உருவாக்கி முன்னேற இயலாத முடக்கங்கள் ஏற்பட்டிருப்பதைப் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும். இந்தக் கட்டுரையின் அளவு குறித்து அதனை அடக்கிவாசித்து, இரண்டு மனப்போராட்டம் ஆரோக்கியமான இயங்காற்றலை ஏற்படுத்திய 'அந்தக் காலத்தின்' இனிய நினைவு மீட்டலை இங்கு பதிந்து வைப்பது பயனுள்ளது எனக் கருதுகிறேன்.

எங்களுடைய பனிப்புலம் கிராமம் அம்மன் கோயில் - அம்பாள் சனசமூக நிலையமும் வாசிகசாலையும் (இவை ஒரே வளவினுள் அமைந்துள்ளன) என்பவற்றை மையமாக கொண்டுள்ளது. ஒரு முனையில் உள்ள காலையடியில் எனது வீடு. என் வீட்டின் பின்னால் காலையடி மறுமலர்ச்சி மன்றம் (கா.ம.ம.). கோயிலும் வாசிகசாலையும் எனது சமூக வாழ்வின் அரிச்சுவடியைத் தொடங்கிவைக்க மன்றம் என்னை இளைஞனாக முறுக்கேற்றி வளர்த்தது.

அப்போது எனக்கு நாலைந்து வயதாயிருக்கலாம் (1959 – 1960)ளூ அம்மன் கோயிலின் வெள்ளிக்கிழமை பசனையில் 'தோடுடைய செவியன்...' தேவாரத்தைப் பாடி எல்லோரையும் அசரவைத்தேன். இன்றும் பசுமையான அந்த நினைவுகள்! மூன்றுவயதில் சம்பந்தர் உமாதேவியாரின் ஞானப்பாலைக்குடித்து பாடியதை, அட்லீஸ்ட் யானைப்பால்கூடக் குடிக்காமல் நாலைந்து வயதுக் குழந்தை பாடினால் ஊர் ஆச்சரியப்படாதா? என்ன, அந்த ஒரு தேவாரம் தவிர வேறெதையும் இன்றுவரை என்னால் பாடமாக்கி ஒப்புவிக்க முடியவில்லை என்பது வேறொரு தனிக்கதை.

அம்மாளின் குஞ்சுகளில் ஒன்றாய் கோயில் வீதிப்புழுதியழைந்து வளர்ந்தகாலை, அடுத்து நினைவில் ஆணியடித்துப் பதிந்து கிடப்பது 1967 இல் வாசிகசாலையில் இரவுப்பாடசாலைப் படிப்பும், அதன் முன்பின்னாக அங்கு இடம்பெற்ற போட்டிகளும். விளையாட்டுப் போட்டியில் எதையும் சாதித்த நினைவில்லை (இருந்தால்தானே நினைவில் பதிய). கட்டுரைப் போட்டியொன்றில் இரண்டாம் இடம் எடுத்திருக்கிறேன் (இரண்டு பேர்தான் பங்கெடுத்தோம் என்பதை எவருக்கும் சொல்லிவிட வேண்டாம்).

அந்த உத்வேகம் தொடர இயலாமல் அவற்றை செயலாக்கிய இளைஞர்கள் தொழில்நாடி சிதறிப்போய் இருக்க வேண்டும். வாசிகசாலையின் இயக்க வேகம் மந்தப்பட்டிருந்தபோது, இன்றைய மன்ற வளவு எங்களுக்கு களம் அமைக்க ஏற்றதாய் உள்ளீர்த்தது. முன்னதாக அது வெற்றி என்பவரால் பராமரிக்கப்பட்ட மடமொன்றை மையமொன்றாய்க் கொண்டிருந்த 'வெற்றி மடம்'. அதனுள் ஊரவர் எவரும் பொதுநோக்கில் கால் பதித்ததில்லை. வெற்றியின் பராமரிப்பிலிருந்து அக்குடும்ப உறவினருள் ஒருவரான கந்தையா வாத்தியார் பொறுப்பில் அந்த மடம் வந்தபோதுதான் எங்களால் உள்நுழைந்து விளையாட இயலுமாயிற்று.

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று மடப் பராமரிப்புக்காக வந்த கந்தையா வாத்தியார் ஆசிரியர் பண்பு தொடர்ந்து குடிகொண்ட மனத்தோடு எங்களை அரவணைத்து உள்ளீர்த்தார். எங்களையும் ஊரையும் எப்படிப் புரட்டியெடுக்கும் செயல் என்ற புரிதலின்றி அவரோடு – அங்கே, நாங்கள்! அவரும், தான் ஏதோ பெரிய தொண்டூழியம் புரிவதான எடுப்புகள் எதுவுமின்றி மிகச்சாதாரண 'நைன்ரி ஒன்றை' போலக் காட்சிதந்தவாறே ஆசிரிய வாண்மைத்துவத்தோடு எம்மை விரிந்த சமூகத்தளங்களுக்கு ஆற்றுப்படுத்தினார்.

     முன்னதாக அம்மன் கோயில் - வாசிகசாலை என்பன கல்வியையும் ஆன்மீக உணர்வுகளையும் என்னுள் விருத்தியுற அடித்தளமிட்டு அக்காலத்தில், எனது ஏழாம் வகுப்பில் (1967) எனக்கு ஒரு விஞ்ஞான ஆசிரியை வாய்த்தார். ஒரு கேள்வி ஊடாக பாடத்தைத் தொடக்குவதில் என்னை முன்னிறுத்தி 'அவன் தான் விஞ்ஞான முறைப்படி சாப்பிர்றான்' எனச் சொன்னதில் நான் விஞ்ஞானியாகிவிட்டேன். ஒரு பாடம் என்றில்லாமல், சாப்பிடுவது உட்பட நாளாந்தச் செயல் எதையும் விஞ்ஞான நோக்குக்குரியதாய்க் காண வழிப்படுத்திய அந்த ஆசிரியை இன்றுவரை ஒருவிரலைப்பிடித்து வழிநடத்தியவாறு ஒவ்வொன்றிலும் கிறுக்குத்தனமான 'விஞ்ஞானப் பார்வையை' கண்டு காட்ட நெறிப்படுத்தியவாறிருக்கிறார்.

     வளரும் பயிரை முறையிலே தெரியுமே! இருப்பதிலிருந்து ஓடுவதுவரை 'விஞ்ஞானமுறை' பறைந்து 'விஞ்ஞானி' என்ற பட்டத்தை சகபாடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டேன். தொடர்ந்து சந்திரமண்ணில் மனிதக்கால் பதிக்கும் எத்தனங்கள் நடந்துகொண்டிருந்த காலம் என்பதால் 'சந்திரமண்டத்துக்கு சயிக்கிள்ளை போய்வந்தவர்' என்ற அதியுச்சப் பட்டமும் பெற்றிருக்கிறேன் (எந்தப்பட்டத்துக்கும் எவரும் பாராட்டுவிழா வைக்கவில்லையென்ற வெப்பிசாரத்திலை அளந்துதள்ளிறார் எண்டால், இதோடை நிப்பாட்டிறது நல்லது கண்டியளோ!).

     விசயத்துக்கு வந்துவிடுறன். முன்னதாக ஆன்மீகத் திலகமாய் முகிழ்ந்து இப்படி விஞ்ஞானியுமாகிய நிலையில் கந்தையா வாத்தியாரால் பக்குவப்பட்ட பாங்கினை இன்று உணரும் காரணமாகயே இந்த அளப்பு (மன்னித்தோம் என்கிறீர்களாளூ நன்றி). மன்றம் உருவாகுவதில் அவரது பாத்திரம் வெளிப்பட்டு தெரியாதபோதிலும், உண்மையில் அவரையே சூத்திரதாரியாக சொல்வதற்கு இன்று தோன்றுகிறது. அம்பாள் சனசமூக நிலையமும் வாசிகசாலையும் உருவாகுவதில்கூட ஐம்பதாம் ஆண்டுகளில் அவருக்கு பங்கிருந்ததைப் பின்னால் அறிந்திருக்கிறேன். அப்போது அவரே அதன் தலைவர்.

     இவ்வகையில் கந்தையா வாத்தியார் எமது கிராமத்தை ஒரு புதிய பண்பாட்டு தள விரிவாக்கம் நோக்கி வளர்த்தெடுப்பதற்கு முன்னதாக வாசிகசாலையையும் பின்னர் மன்றத்தையும் களமாக்கியுள்ளார். நாடுபூராவிலும் ஐம்பதுகளில் ஏற்பட்ட தேசிய முதலாளித்துவ எழுச்சியும், எழுபதுகளில் முன்றாமுலக நாடுகள் மார்க்சிய இயக்க உச்ச இயங்காற்றலைப்பெற்றிருந்தமையும் இவ்விரு அமைப்புக்கள் வாயிலாகவும் வெளிப்பட்டனளூ அவை குறித்து வேறாக அலசவேண்டும்.

மன்றம் ஒரு புதிய பண்பாட்டு களம் என்பதற்காக அடிப்படை, அங்கே எவரும் பெரியவரோ – சிறியவரோ ஆனதில்லை. செயலாற்றல் மதிப்பைப்பெறும், விவாதங்களில் யார் கருத்து என்பதைவிட எது சரி என்பதே ஏற்புடையதாயிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளின்முன் தமிழியல் முழக்கமாயிருந்த 'பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்பதற்கு மன்றம் உதாரணமாயிருந்தது. இக்கட்டுரையை எனது அனுபவவாயிலாக சொல்வதாய் அமைத்தமையால் ஏனையவரை என்னால் சொல்ல இடமற்றுப்போயுள்ளது, ஒவ்வொருவரும் மன்றத்தைக் கட்டியெழுப்புவதில் அளப்பெரிய பங்காற்றியதோடு, மன்றத்தால் புடமிடப்பட்ட தத்தமது அனுபவங்களை வெளிப்படுத்தும்போது அதன் வீரியம் மேலும் விரிந்த தளத்தில் வெளிப்பட இடமேற்படும். என்னளவில் விஞ்ஞானப் பார்வையும் ஆன்மீக உணர்வுத்தளமும் சங்கமித்து புதிய பார்வைவீச்சை எனக்கு உருவாக்கித்தந்தது மன்றமே.

     அப்போது கருத்தியல் வேறுபாடுகளால் அம்பாள் சனசமூக நிலையமும் வாசிகசாலையும் கா.ம.மன்றத்துடன் முரண்பட்ட அனுபவங்களுண்டு. அதைத் தவிர்த்திருக்க வேண்டுமென்பதில்லை. தொடக்கத்தில் காட்டியவாறு எதிர்நிலைகளின் மோதுகை இயங்காற்றலின் அடையாளம். இப்போது புரிந்துணர்வுகொள்வதில் இருந்த தடை இன்று நீங்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் ஊர் முழுமையும் ஒன்றுபடும் களங்கள் இத்தகைய புரிந்துணர்வுக்கு வாய்பேற்படுத்தித் தருகின்றன. இதன் உதவியோடு இரு அமைப்புகளும் ஆரோக்கியமாய் முன்னேற இயலும் - இடையிடும் முடக்கங்களைத் தகர்க்க வேண்டும்.

     இடையிடும் தடைகள் இன்றைய உலகமயமாதல் குழறுபடிகளோடு தொடர்புடையன. ஆரோக்கியமாய் பெரும் பங்களிப்பை வெளிப்படுத்திய இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியின் வரலாற்றை மீட்டெடுக்கும்போது எமக்கான புதிய பாதையைத் தெளிவுறக் காண இயலுமாயிருக்கும். அதற்கான தேடலுக்கு இக்கட்டுரை உந்துதல் வழங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.